உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

புதன், 30 நவம்பர், 2011

காரணம் நானறியேன் .....


கண்கள் உறக்கம் அற்று,
கால்கள் தேடுதல் அற்று,
இதயமும் இயக்கம் அற்று,
தவிக்குது தவிக்குது...

ஏன் இந்த தவிப்பு,
எதற்கிந்த பிழைப்பு,
என் நிழலும் எனை பார்த்து
சிரிக்குது சிரிக்குது...

ஆறுதல் தந்தேனோ?
ஆற்றாமை மறைத்தேனோ?
என் நிழல் நீ என்ற
நினைவினில் இருந்தேனோ?
இன்று குழப்பம்
என்னை சூழ நடப்பதை
நானறியேன்....

நிழலென தொடர்ந்தவன்
நினைவினில் நிற்கிறான்.
நிஜத்தினை தெரிந்துமே,
ஏற்க மறுக்கிறான்...

நான் செய்த பிழையென்ன ?
உன்னை நானாய்
ஏற்க துணிந்திட்டேன்...
துணை வருவாய் என்ற
துணிவினில்,
பலரை எதிர்க்கத் துணிந்திட்டேன்..

அன்பாய் கரம் பற்றி
ஆறுதல் சொன்னவன்
மௌனத்தை பற்றிச் செல்கிறான்
புரியாத பேதை இவள்
அவன் மௌனத்தில்
வார்த்தையை தேடுகின்றேன்...

இது நான் அல்ல என்று
தெரிந்துமே,
என்னை நானாய் புதுப்பிக்க
முடியவில்லை,
நடப்பது எல்லாம்
அன்பின் மீறலில் நடக்கின்றதா?
புரியவில்லை..
இந்த புரியாத விதி மீறல்
என்னை பயமுறுத்துதடா...

என் செயல் அனைத்திலும்
உன் சிந்தனையே
வியாபித்து இருக்கும்
இந்த செய்கையின்
காரணம் நானறியேன்.....

10 கருத்துகள்:

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

என் செயல் அனைத்திலும்
உன் சிந்தனையே
வியாபித்து இருக்கும்
இந்த செய்கையின்
காரணம் நானறியேன்....//

காதல் வியாதி வந்தா இப்பிடித்தான், ஒன்னுமே புரியாது....!!!

கவிதை சூப்பர்ப்...!!!

நிரூபன் சொன்னது…

வணக்கம் அக்கா,
பிரிதலுக்கான காரணம் அறியாது புலம்பும் மன உணர்வுகளை கவிதை இங்கே சொல்லி நிற்கிறது.

Unknown சொன்னது…

கவிதை ரொம்ப நல்லா இருக்கு..

மும்தாஜ் சொன்னது…

என் செயல் அனைத்திலும்உன் சிந்தனையேவியாபித்து இருக்கும்இந்த செய்கையின் காரணம் நானறியேன்.....இதை விட எப்படி சொல்லி விட முடியும் அவளின் அன்பின் வெளிப்பாட்டை..

மும்தாஜ் சொன்னது…

என் செயல் அனைத்திலும்
உன் சிந்தனையே
வியாபித்து இருக்கும்
இந்த செய்கையின்
காரணம் நானறியேன்.....
இதை விட எப்படி சொல்லி விட முடியும் அவளின் அன்பின் வெளிப்பாட்டை..

எவனோ ஒருவன் சொன்னது…

ரேவா! நீங்கள் எழுதிய கவிதைகளில் என்னை மிக மிக கவர்ந்தவற்றில் இக்கவிதையும் ஒன்று.

சில நேரம் நம் மனதில் உள்ளதை மற்றவர் எழுத்தில் உணர்வோம். இன்று இக்கவிதை மூலம் உணர்கிறேன். கவிதையை படிக்கும் போது ஒருவரின் முகம் மனதில் தோன்றுவதை மறுக்க முடியவில்லை. அசத்திட்டீங்க ரேவா.

நிழலென தொடர்ந்தவன்
நினைவினில் நிற்கிறான்.
நிஜத்தினை தெரிந்துமே,
ஏற்க மறுக்கிறான்...

நான் செய்த பிழையென்ன ?
உன்னை நானாய்
ஏற்க துணிந்திட்டேன்...
துணை வருவாய் என்ற
துணிவினில்,
பலரை எதிர்க்கத் துணிந்திட்டேன்..

அன்பாய் கரம் பற்றி
ஆறுதல் சொன்னவன்
மௌனத்தை பற்றிச் செல்கிறான்
புரியாத பேதை இவள்
அவன் மௌனத்தில்
வார்த்தையை தேடுகின்றேன்...

இந்த வரிகள் என்னை மிகவும் கவர்ந்துவிட்டன. கண்களை ஈரமாக்கி விட்டன :-)

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! சொன்னது…

கவிதை அருமை....

Unknown சொன்னது…

MANO நாஞ்சில் மனோ கூறியது...

என் செயல் அனைத்திலும்
உன் சிந்தனையே
வியாபித்து இருக்கும்
இந்த செய்கையின்
காரணம் நானறியேன்....//

காதல் வியாதி வந்தா இப்பிடித்தான், ஒன்னுமே புரியாது....!!!

கவிதை சூப்பர்ப்...!!!

உண்மைதான் அண்ணா :) நன்றி உங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் :)

Unknown சொன்னது…

நிரூபன் கூறியது...

வணக்கம் அக்கா,
பிரிதலுக்கான காரணம் அறியாது புலம்பும் மன உணர்வுகளை கவிதை இங்கே சொல்லி நிற்கிறது.

சரிதான் நிரூபன்...நன்றி உன் வருகைக்கும் மறுமொழிக்கும் :)

Unknown சொன்னது…

பதிவுலகில் பாபு கூறியது...

கவிதை ரொம்ப நல்லா இருக்கு..

நன்றி பாபு :)