THANKS: Google |
இந்த நேரம் வேலை முடிந்து வீட்டிற்கு வந்துவிடும் நித்யா இன்று தான் அலுவலகம் கிளம்பும் நேரமாகியும் வராததை அடுத்து அவளுக்கு போன் செய்தான் பிரபஞ்சன்... அவள் போன் அணைத்து வைக்கப்பட்டது என்ற செய்தி அவனுக்கு பதட்டத்தை வரவைக்க, நித்யாவின் அலுவலகத்திற்க்கு தொடர்பு கொண்டான், அங்கும் அவள் கிளம்பி போய் வெகு நேரமான செய்தி அவனுக்குள் இடியாய் இறங்கியது...
அவள் தோழிகள் நம்பருக்கும் தொடர்பு கொண்டு, அங்கும் எதிர்ப்பார்த்த செய்தி கிடைக்காததை அடுத்து வருத்தமும், பயமும் கலந்து கொள்ள கதவு திறக்கும் ஓசை கேட்டு, ஜன்னலை பார்த்தான், வருவது அவள் தான் என்று தெரிந்து, நிம்மதியடைந்தாலும், அவள் அலட்சியமாய் வந்தது, பிரபாவுக்கு கோவத்தை ஏற்படுத்தியது...
என்ன பிரபா மணி 7ஆச்சு நீ இன்னும் office போகலயா?
நான் போறது இருக்கட்டும் நீ எங்க போன இவ்வளவு நேரம்...
அவன் வார்த்தையில் இருக்கும் கோவத்தை உணர்ந்தவளாய், சாரி டா, ரீமா அவ பெண்ணுக்கு ட்ரஸ் எடுக்க என்ன கூட்டிட்டு போனா அதான் இவ்/ளோ நேரம் பிரபா.. சாரி
உன் சாரி யாருக்குடி வேணும்... இவ்வளவு நேரம் வரலையே ஒரு போன் பண்ணி சொல்லிருக்கலாம்ல நானாவது நிம்மதியா offlice கிளம்பி போய் இருப்பேன் ல..
இல்லை போன்ல சார்ஜ் இல்லைடா? அதான்......
போன வாரம் நான் என் ஃப்ரண்ட்ஸ் ஒட அவுட்டிங்க் போகும் போது, என் போன்ல சார்ஜ் இல்லை அதான் உனக்கு போன் பண்ணி சொல்லமுடியலன்னு சொன்னதுக்கு எவ்வளவு கோவப்பட்ட, உனக்கு ஒரு நியாயம் எனக்கு ஒரு நியாயமா?
பிரபா அது வேற இது வேற?
எப்படி டி வேற வேற ஆக முடியும் சொல்லு.....
இப்போ ஏன் வந்ததும் வராததுமா சண்டை போடுற. நீ offlice போ டைம் ஆச்சு...
காரணம் கேட்டா கிளப்ப சொல்றயா? என்ன ஒரு பொறுப்பில்லாத பதில் நித்தி, நீ வரலன்னு எவ்வளவு பயந்தேன் தெரியுமா?
பிரபா நீ இந்த பயத்த தெரிஞ்சுக்கனும்னு தான் அப்படி பண்ணேன் சாரி டா...
என்ன நித்தி சொல்ற?...
ஆமாம் ஒவ்வொரு வீகெண்ட்லயும், நீ உன் ஃப் ரண்ட்ஸ் ஒட போயிடுற, சில நேரம் உன் ஃப் ரண்ட்ஸ் கம்பெல் பண்றாங்கன்னு டிரிங்ஸ் எடுத்துக்கிற, நீ வீடு வந்து சேர்ர வரைக்கும், நான் படுற பாடு எனக்கு தான் தெரியும் நடுவுல ஒரு போன் பண்ணுறது கூட கிடையாது, நான் பண்ணாலும் switch off....
காரணம் கேட்ட சார்ஜ் இல்லைனு சொல்லுவ...எத்தனை தடவ தான் இதே உப்பு சப்பில்லாத காரணத்தையே கேட்கிறது... நீ புரிஞ்சுக்கனும்னு தான் இப்படி பண்ணேன்... நான் எப்போவோ வீட்டுக்கு வந்துட்டேன்... என் பீல் உனக்கு புரியனும்னு தான் ரீமா பிளாட் ல கொஞ்சம் நேரம் இருந்தேன்... உன் cap வந்தும் நீ போகலனு தெரிஞ்சதும் தான், மனசு கேட்காம வந்தேன்... நீ கிளப்பு பிரபா டைம் ஆச்சு...
வாயடைத்து போய் பதில் எதுவும் சொல்லாமல் மெளனமாய் சென்றான் பிரபா...
பதில் எதும் சொல்லாமல் அவன் செல்வதை வருத்ததோடு பார்த்தாள்... சற்று நேரத்தில் கைபேசி சிணுங்க, பிரபாவிடமிருந்து செய்தி, sorry nithi just now i realized my mistake, hereafter i wont do it... dinner is on the table. please do take them. I love you de :)))))))
நான் எதாவது தப்பா பேசியிருந்தா மன்னிச்சுக்கோடா... I TOO LOVE YOU HONEY...
நமக்கு பிடித்தவர்கள் மீது நாம் காட்டும் கோவமும் ஒரு அன்பே.............
நான் எதாவது தப்பா பேசியிருந்தா மன்னிச்சுக்கோடா... I TOO LOVE YOU HONEY...
9 கருத்துகள்:
அட.. கதை சூப்பரா இருக்கே! வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டிய மிகப்பெரிய விஷயத்தை, எளிமையாக, சிறுகதையா சொன்ன விதம் அருமை! உணரலைன்னா, உணர்த்தணும்னு சொல்லுவாங்க! அதானா இது!
அப்புறம் அந்த எஸ் எம் எஸ் ம் நல்லா இருக்கு ரேவா!
உண்மையான அன்புக்கு பயம் கிடையாது.....
நல்ல கதை ,
தனக்கென்று வரும்போதுதான் சில தவறுகளின் வலிகள் புரியும்!
:)NICE.
சரியான பதிலடி நம்ம தவிப்ப இப்படிதான் புரிய வைக்கணும் . அருமைங்க
adadaa!
அன்பு அதிகமாக இருக்குமிடத்தில் கோபம் வரும்... வரணும்.
நவீனகாலத்திற்கேற்ற கதை அருமை.
Short and Sweet Revaa :)
கருத்துரையிடுக