உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

புதன், 7 மார்ச், 2012

என் வீடு


Thanks :Google

அவசியம் ஏதும் இல்லாவிடினும் 
என்னை ஆண்ட 
என் கனவு வீட்டை 
கவிதை செய்து வைக்கிறேன்...

கூரை வேய்ந்த வீட்டிலிருந்து, 
மாடிவீடாய் 
மறுஜென்மம் கொண்டது
அப்பாவின் வியர்வை காசில்...

அது வ்ரை வாயடைத்த 
கூட்டம்
 நான் பிறந்த வேளை என்றது.... 

என்ன சொல்ல 
என்வீட்டைப்பற்றி,
எனக்கு எல்லாமுமாய்
இருக்கும் 
இந்த வீடைப்பற்றி...

சுற்றியும் சொந்தம்
நிறைய, 
சந்தோஷத்திற்க்கு குறைவில்லாத 
பல நாட்களை தந்தது
இந்த வீடு...

மாமனென, சித்தியென 
புது உறவை 
தந்த வீடு..
நித்தம் விழாக்கோலம் 
பூணும் வீடு,,,

பொட்டல் காட்டில்
வியர்வை சிந்தி,
கால்வயிறு கஞ்சிக்கு
காட்டு வேலை செஞ்ச 
என் அப்பத்தாக்கு,
சொர்க்கமே 
இந்த வீடு..

சொந்த பிள்ளைகள
தவிர சொத்துயில்லை 
என்ற தாத்தாக்கு 
தெம்ப கொடுத்தது 
இந்த வீடு...

தான் பட்ட கஷ்டத்தை
என் பிள்ள பெறக்கூடாதுன்னு
அப்பா வைராக்கியத்திற்க்கு 
வைரமா கிடைச்ச வீடு..

பிறந்த இடம் தான் 
வளமில்லை
வாழுமிடமாது நம்ம காப்பாத்துமானு 
கேள்வியோட வந்த 
அம்மாவுக்கு 
கோடியா தெரிந்த வீடு...

வசதியா பொறந்தயெங்கள
வளமா வளத்த வீடு..
வருசம் ஆக ஆக
வயசான தாத்தா பாட்டின்னு 
வரவு ஒன்னு ஒன்னும் 
செலவு கண்க்குல 
சேர்ந்தப்ப, 
நாங்க இங்க தான் 
இருக்கோம்ன்னு அவங்க 
தலை சாய்த்த தடம் 
தரும் ஆயிரம் தெம்பு...

இன்னைக்கும் எனக்கு ஒரு 
கவலைனா, 
என் பாட்டி தலை வச்ச 
தடத்துல தான் 
என் கண்ணீர விதச்சு வைப்பேன்..

வெறும் செங்கலும், 
சிமெண்ட்டுமாய்
அடுத்தவங்க 
கண்ணுக்கு தெரிஞ்சாலும்,
என் முன்னோர்களின் 
வழித்தடமே 
இந்த வீடு...

வசதிகள் வந்தாலும், 
வந்த வழி மறக்காது
என்னை வளர்ந்த
என் உறவுகள
நினைவுகளால 
நான் நித்தம் காணும் வசதிய
தந்தது 
இந்த வீடு..

ஆயிரம் தான் அழகா 
பல விஷயமிருந்தாலும்,
அழுக்கு சேலையோட
என்ன காக்கும் 
என் அம்மாவா
எனக்கு எப்பவும் 
தெம்ப தருவது 
என் வீடு...








23 கருத்துகள்:

Marc சொன்னது…

உண்மையிலே அருமையான வீடு வாழ்த்துகள்

K சொன்னது…

ஆயிரம் தான் அழகா
பல விஷயமிருந்தாலும்,
அழுக்கு சேலையோட
என்ன காக்கும்
என் அம்மாவா
எனக்கு எப்பவும்
தெம்ப தருவது
என் வீடு...//////

மிகவும் அழகான கவிதை ரேவா! கடைசி வரிகள் மனசைத் தொட்டிருச்சு! எமது குழுமத்தில் பகிர்கிறேன்!

Yaathoramani.blogspot.com சொன்னது…

ஆயிரம் தான் அழகா
பல விஷயமிருந்தாலும்,
அழுக்கு சேலையோட
என்ன காக்கும்
என் அம்மாவா
எனக்கு எப்பவும்
தெம்ப தருவது
என் வீடு.../

அருமை அருமை

உழைப்பை மட்டுமா உணர்வுகளையும்
நிகழ்வுகளையும் நினைவுறுத்திப் போகும்வீடு என்பது
வெறும் கட்டிடம் அல்லவே
மனம் கவர்ந்த அருமையான பதி

செய்தாலி சொன்னது…

வீடும்
ஒரு உறவுதான் தோழி
உணர்வுபூர்வமான கவிதை
வரிகள் மனதை வதைக்க்றது

Seeni சொன்னது…

veedu!

"nalla veedu thaan"
nalla ennangalai thantha veedu!

rishvan சொன்னது…

nalla veedu.... rasiththen.. http://www.rishvan.com

காட்டான் சொன்னது…

அருமையான கவிதை இப்போ என்மனதிலும் என் வீட்டு நினைவுகள்..!!

மும்தாஜ் சொன்னது…

அழகான வீடு ...
அழகான கவிதை....

ஆமினா சொன்னது…

எதார்த்தமான வரிகள்


என்னதான் இருந்தாலும் பெண்களுக்கு பிறந்த வீடு சொர்க்கம் தான் ;-)

அருமையா சொல்லியிருக்கீங்க

வாழ்த்துக்க்கள்

அன்பு துரை சொன்னது…

மனச தொட்ட கவிதைனு சொல்லுவாங்க இல்ல அந்தமாதிரியான கவிதைங்க இது... 
படிக்கும்போது மனசுக்குள்ள ஒரு மாதிரியான உணர்வு ஏற்ப்பட்டது...

நம்பிக்கைபாண்டியன் சொன்னது…

\\இன்னைக்கும் எனக்கு ஒரு
கவலைனா,
என் பாட்டி தலை வச்ச
தடத்துல தான்
என் கண்ணீர விதச்சு வைப்பேன்//

அன்பின் யதார்தங்கள் இவை!

Unknown சொன்னது…

DhanaSekaran .S கூறியது...

உண்மையிலே அருமையான வீடு வாழ்த்துகள்

ஆமாம் சகோ உண்மைக்கே அருமையான வீடு தான் :)

Unknown சொன்னது…

ஐடியாமணி - Dip in USA, UK, UAE, FR and RMKV,BMW கூறியது...

ஆயிரம் தான் அழகா
பல விஷயமிருந்தாலும்,
அழுக்கு சேலையோட
என்ன காக்கும்
என் அம்மாவா
எனக்கு எப்பவும்
தெம்ப தருவது
என் வீடு...//////

மிகவும் அழகான கவிதை ரேவா! கடைசி வரிகள் மனசைத் தொட்டிருச்சு! எமது குழுமத்தில் பகிர்கிறேன்!


நன்றி ரஜீவன் உன் வருகைக்கு, மிக்க நன்றி உன் பகிர்தலுக்கும், மகிழ்ந்தேன் நண்பா :)

Unknown சொன்னது…

Ramani கூறியது...

ஆயிரம் தான் அழகா
பல விஷயமிருந்தாலும்,
அழுக்கு சேலையோட
என்ன காக்கும்
என் அம்மாவா
எனக்கு எப்பவும்
தெம்ப தருவது
என் வீடு.../

அருமை அருமை

உழைப்பை மட்டுமா உணர்வுகளையும்
நிகழ்வுகளையும் நினைவுறுத்திப் போகும்வீடு என்பது
வெறும் கட்டிடம் அல்லவே
மனம் கவர்ந்த அருமையான பதி

சரியாகச் சொன்னீர்கள் ஜயா, இன்னைக்கும் எனக்கு என் தாத்தா பாட்டியோட நினைவுகள அழிக்காம வச்சிருக்கிறது இந்த வீடு தான்.. நன்றி ஜயா உங்கள் வருக்கைக்கும்,அழகான மறுமொழிக்கும் :)

Unknown சொன்னது…

செய்தாலி கூறியது...

வீடும்
ஒரு உறவுதான் தோழி
உணர்வுபூர்வமான கவிதை
வரிகள் மனதை வதைக்க்றது


சரியாய் சொன்னீர்கள் சகோ,

Unknown சொன்னது…

Seeni கூறியது...

veedu!

"nalla veedu thaan"
nalla ennangalai thantha veedu!


உண்மை தான் சீனி, நல்ல எண்ணங்களை தந்த வீடு தான்... நன்றி சகோ

Unknown சொன்னது…

rishvan கூறியது...

nalla veedu.... rasiththen.. http://www.rishvan.com


நன்றி சகோ :)

Unknown சொன்னது…

காட்டான் கூறியது...

அருமையான கவிதை இப்போ என்மனதிலும் என் வீட்டு நினைவுகள்..!!

நன்றி சகோ உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கு :)

Unknown சொன்னது…

mum கூறியது...

அழகான வீடு ...
அழகான கவிதை....


நன்றி தோழி :)

Unknown சொன்னது…

ஆமினா கூறியது...

எதார்த்தமான வரிகள்


என்னதான் இருந்தாலும் பெண்களுக்கு பிறந்த வீடு சொர்க்கம் தான் ;-)

அருமையா சொல்லியிருக்கீங்க

வாழ்த்துக்க்கள்


நன்றி சகோ உங்கள் முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் :)

Unknown சொன்னது…

அன்பு கூறியது...

மனச தொட்ட கவிதைனு சொல்லுவாங்க இல்ல அந்தமாதிரியான கவிதைங்க இது...
படிக்கும்போது மனசுக்குள்ள ஒரு மாதிரியான உணர்வு ஏற்ப்பட்டது...


மிக்க நன்றி சகோ உங்கள் அன்பான மறுமொழிக்கு :)

அருணா செல்வம் சொன்னது…

கல்லும் மண்ணையுமா வைத்துக் கட்டினார்கள் நம் முன்னோர்கள்? கனவுகளையும் கவலைகளைம் அல்லவா மறைத்து வைத்துக் கட்டினார்கள்....
மனதுக்கு ஆறுதலானப் பதிவு. வாழ்த்துக்கள் சகோ!

எவனோ ஒருவன் சொன்னது…

வீடு ரொம்ப அழகா இருக்கு ரேவா