உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

வியாழன், 8 மார்ச், 2012

மாறுவது எப்போது

ஆண்டிற்க்கொரு முறை
மகளிர் தினம்,
அங்கலாய்க்கவோ, ஆனந்தக்கூத்தாடவே
முடியவில்லை எமக்கு...

கைகளை கட்டிவிட்டு,
கர்ணம் பாயச்சொல்கிற
உலகிது...

சாதனைகள் புரிந்திடாலும்
சாகச வாய்களுக்கு
சாக்கடை புழுவானோம்...

கிடைத்தனயாவும் யாம்
நினைத்தனயன்றி,
இருப்பதைக் கொண்டே
 மகிழ்ந்திட்டோம்...

அழுதிடும் மனதில்
சிரித்திடும் உதட்டினின் 
துணையினால்,
துயரினை மறைத்திட்டோம்...

ஆளப்பிறந்தவராய் நீர் இருக்க
ஆக்க சக்தியென எம்மை
அழைத்திடும் காரணம் 
அறியாது தவித்திட்டோம்...

யோசிக்க மறந்த மனிதரால்
யாம் இன்னும்
யாசிக்கும் நிலையிலே
இருக்கிறோம்...

சட்டங்கள் மாறுமோ,
சக்தி கை ஓங்குமோ,
உறவின் விலங்குகள்
தகறுமோ?
தொலைந்த எம் சுய முகங்கள்
கிடைக்குமோ?...

கேள்விகள் கொண்டு
வேள்விகள் செய்கின்றேன்...
யாருக்கு கேட்கும்
இந்த பெண்குரல்,
என்று தனியுமிந்த
அடிமையின் மோகம்....

24 கருத்துகள்:

தாமரைக்குட்டி சொன்னது…

சுளீர் கவிதை.... காலப்போக்கில் மாற்றம் கண்டுவிடும் இந்த உலகு......
இனிய மகளிர்தின வாழ்த்துக்கள் அக்கா....

Asiya Omar சொன்னது…

அருமை.வாழ்த்துக்கள்.

செய்தாலி சொன்னது…

நல்ல கவிதை
மகளீர் தின வாழ்த்துக்கள்

Unknown சொன்னது…

மாறும்...மாற்றம் ஒன்று மட்டுமே மாற்றம் இல்லாதது!

அன்பு துரை சொன்னது…

மகளிர் தின வாழ்த்துக்கள்... 
உலகம் முழுவதும் மதத்தின் பெயராலும்
கடவுளின் பெயராலும் பெண்கள் தொடர்ச்சியாக அடிமைபடுத்தப்பட்டே வந்திருக்கிரார்கள்... 
அப்படி இருப்பதுதான் சரியென அவர்களின் வாயாலே சொல்லவும் வைத்துவிட்டார்கள்... 
புரட்சி வெடிக்காமல், புதியது நடவாது...
கேள்விகள் கேட்கப்படாமல் பதில்கள் வாராது..
கொட்ட கொட்ட குனிந்துகொண்டே  இருந்தால் பின் எழ முடியாது...

பெண்கள் மீதான ஆதிக்கம் ஒழிய என் வாழ்த்துக்கள்..

அன்புடன் அன்பு..

K சொன்னது…

என்ன சொல்றது ரேவா? கவிதையின் வார்த்தைகளுக்கும், அது தரும் பொருள் அழத்தையும் பாராட்டுவதா? அல்லது கவிதையில் தொனிக்கும் விடுதலை ஏக்கத்துக்காக வருந்துவதா என்று தெரியாமல் குழம்புகிறேன்!

மிகவும் அருமையான கவிதையும், சிறப்பான வார்த்தைகளின் கோர்வையும்!! வாழ்த்துக்கள்!

Seeni சொன்னது…

unmai ungal karuthukkal!

நம்பிக்கைபாண்டியன் சொன்னது…

////யோசிக்க மறந்த மனிதரால்
யாம் இன்னும்
யாசிக்கும் நிலையிலே
இருக்கிறோம்...////

நச் வரிகள்!

Admin சொன்னது…

யோசிக்க வைக்கும் கவிதை.. அருமை.

Marc சொன்னது…

அருமை கவிதை வாழ்த்துகள்.மகளிர்தின நல்வாழ்த்துகள்

Unknown சொன்னது…

தாமரைக்குட்டி கூறியது...

சுளீர் கவிதை.... காலப்போக்கில் மாற்றம் கண்டுவிடும் இந்த உலகு......
இனிய மகளிர்தின வாழ்த்துக்கள் அக்கா....

முதலில் உன் வருகைக்கு நன்றி தம்பி... காலப்போக்கில் மாற்றம் கண்டுவிடும் நம்புவோமாக :)

Unknown சொன்னது…

Asiya Omar கூறியது...

அருமை.வாழ்த்துக்கள்.

மிக்க நன்றி சகோ உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் :)

Unknown சொன்னது…

செய்தாலி கூறியது...

நல்ல கவிதை
மகளீர் தின வாழ்த்துக்கள்

நன்றி சகோ உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மகிழ்ந்தேன் :)

Unknown சொன்னது…

விக்கியுலகம் கூறியது...

மாறும்...மாற்றம் ஒன்று மட்டுமே மாற்றம் இல்லாதது!

அந்த மாறாத நல் மாற்றம் கிட்டிடவே காத்திருக்கின்றோம் சகோ.... நன்றி உங்கள் வருகைக்கு :)

Unknown சொன்னது…

அன்பு கூறியது...

மகளிர் தின வாழ்த்துக்கள்...
உலகம் முழுவதும் மதத்தின் பெயராலும்
கடவுளின் பெயராலும் பெண்கள் தொடர்ச்சியாக அடிமைபடுத்தப்பட்டே வந்திருக்கிரார்கள்...
அப்படி இருப்பதுதான் சரியென அவர்களின் வாயாலே சொல்லவும் வைத்துவிட்டார்கள்...
புரட்சி வெடிக்காமல், புதியது நடவாது...
கேள்விகள் கேட்கப்படாமல் பதில்கள் வாராது..
கொட்ட கொட்ட குனிந்துகொண்டே இருந்தால் பின் எழ முடியாது...

பெண்கள் மீதான ஆதிக்கம் ஒழிய என் வாழ்த்துக்கள்..

அன்புடன் அன்பு..

அன்போடு நீங்கள் தந்த ஆழமான கருத்துக்கு நன்றி சகோ... தொடர்ந்து வாருங்கள் :)

Unknown சொன்னது…

ஐடியாமணி - Dip in USA, UK, UAE, FR and RMKV,BMW கூறியது...

என்ன சொல்றது ரேவா? கவிதையின் வார்த்தைகளுக்கும், அது தரும் பொருள் அழத்தையும் பாராட்டுவதா? அல்லது கவிதையில் தொனிக்கும் விடுதலை ஏக்கத்துக்காக வருந்துவதா என்று தெரியாமல் குழம்புகிறேன்!

மிகவும் அருமையான கவிதையும், சிறப்பான வார்த்தைகளின் கோர்வையும்!! வாழ்த்துக்கள்!

மிக்க நன்றி நண்பா உன் வருக்கைக்கும், மனமார்ந்த உன் நட்புக்கும்.... :)

Unknown சொன்னது…

Seeni கூறியது...

unmai ungal karuthukkal!

நன்றி சகோ... உங்கள் கருத்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி தொடர்ந்து வாருங்கள் :)

Unknown சொன்னது…

நம்பிக்கைபாண்டியன் கூறியது...

////யோசிக்க மறந்த மனிதரால்
யாம் இன்னும்
யாசிக்கும் நிலையிலே
இருக்கிறோம்...////

நச் வரிகள்!

நன்றி அண்ணா உங்கள் வருகைக்கு :)

Unknown சொன்னது…

பிளாகர் மதுமதி கூறியது...

யோசிக்க வைக்கும் கவிதை.. அருமை.

நன்றி சகோ...

Unknown சொன்னது…

DhanaSekaran .S கூறியது...

அருமை கவிதை வாழ்த்துகள்.மகளிர்தின நல்வாழ்த்துகள்

நன்றி தம்பி உங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும் :)

abi சொன்னது…

நல்ல கவிதை.
எங்கோ படித்தது கேட்டு பெறுவது இல்லை சுதந்திரம் எடுத்துகொள்வது பெண்கள் எடுத்து கொள்ளவேண்டியதை கேட்கின்றனர் கேட்கவேண்டியதை எடுத்துகொள்கின்றனர். சிறகையும் வேலியையும்.

ஆத்மா சொன்னது…

கவிதை நன்றாக உள்ளது..

யோசிக்க மறந்த மனிதரால்
யாம் இன்னும்
யாசிக்கும் நிலையிலே
இருக்கிறோம்...

இது ரொம்ப ஓவர்

எவனோ ஒருவன் சொன்னது…

பெண்ணின் மனதை வலியுடன் கூறி உள்ளீர்கள் :(