உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

திங்கள், 12 மார்ச், 2012

நினைத்தாலே இனிக்கும்


 நன்றி : கூகிள் டீச்சர்


ரேவதி மணி எட்டாச்சு எந்திரி, ஆயாம்மா வந்திடுவாங்க, ஸ்கூலுக்கு போகன்னும்ல,

போமா இன்னைக்கு எனக்கு காய்ச்சல் நான் போகமாட்டேன்...

ஒழுங்கா எந்திரி இல்லாட்டி அடி வாங்குவ,

ஜய்ய போ, நான் போகமாட்டேன்.....

எழுந்திரிடி, பொம்பள பிள்ளைக்கு என்ன வீம்பு, கொன்னுடுவேன்...

 நான் போகமாட்டேன் போகமாட்டேன் போகமாட்டேன், அப்படியும் மீறி என்ன ஆயாக்கூட அனுப்பு விட்ட நான் அது கைய கடிச்சிட்டு எங்காயாவது ஓடிப்போயிடுவேன் போ...

கொடுமைக்காரி,  lkg படிக்கையிலயே என்ன இந்த பாடு படுத்துறயே, இன்னும் போகப்போக என்ன பாடு படுத்துவ...

என்னடி அங்க சத்தம்....

சும்மா பேசிட்டு இருந்தேங்க...

ஏங்க உங்க புள்ள ஸ்கூலுக்கு போகமாட்றா...

 இப்படி தாங்க ஆரம்பிச்சது என் பள்ளி பருவம்... பிரகாஷ் அண்ணன் மாதிரி வகுப்பு வகுப்பா சொல்ற அளவுக்கு நம்ம கிட்ட சரக்கு கிடையாதுங்கோ...அதால பள்ளின்னு நினைவுக்கு வந்தாலே உதட்டோரம் புன்னகை வரும் சில நிகழ்வுகளை பத்தி சொல்றேன்....

படிப்புல சுட்டின்னு சொல்ல முடியாது, ஆனாலும் ரேவதின்னா நான்னு அடையாளம் தெரியிற அளவுக்கு படிப்பு இருக்கும்...L.KG UKG  இங்கிலிஸ் மீடியத்துல படிச்சேன், பொம்பள பிள்ளைக்கு அப்படி பணத்தைகொட்டி படிக்க வைக்கனுமான்னு என் அப்பத்தா சொல்ல, அடியேனின் படிப்பு தமிழ் மீடியத்துக்கு தாவுனது...

ஒன்னாப்பு படிக்கும் போது என் கிளாஸ் மிஸ் என்ன தூக்கி வச்சிக்கிட்டே இருப்பாங்க, நாங்க அவ்ளோ அழகு அப்போ ஹி ஹி , ( யாருப்பா அங்க, சிறுசில பன்னிக்குட்டிக்கூட தான் அழகா இருக்கும்ன்னு சொல்றது )..

பெரும்பாலும் நட்புன்னு யாரையும், அடையாளம் காணமுடியாத வயசு, சிலேட்டு குச்சிக்கு சினேகம் பிடிக்கிற மனசு, பள்ளி நாளே ஏதோ வெறுப்பா இருக்கும், அதுவும் லீவு முடிஞ்சு, திங்க கிழமை ஸ்கூலுக்கு போறது,விசத்த சாப்பிடுற மாதிரி இருக்கும், என்ன படிக்க வைக்க பட்ட பாட விட, ஸ்கூலுக்கு விட பட்ட பாடு என் அப்பாவுக்கு தான் தெரியும்..

இதுவரைக்கும் என்ன என் அம்மாவும் சரி அப்பாவும் சரி அடிச்சது கிடையாது, முத முதலா விரத்த தழும்பு வாங்கினது அஞ்சாங்கிளாஸ் படிக்கும் போது, இன்னைக்கும் அந்த நிகழ்ச்சிய நினைச்சா, சிரிச்சிட்டே இருப்பேன், அப்படி என்ன நடந்ததுன்னு கேட்கிறேங்களா?.. மீசிமா மீ பெ வா ன்னு 5வகுப்பு கணக்கு இருக்கும், அத டீச்சர் எழுதிப்போட்டு எல்லாரையும் விடை கண்டுபிடிக்க சொல்லிட்டு இருந்தாங்க, நானும் கண்டுபிடிச்சாச்சு, நம்ம பிரண்ட் முடிக்கல, சரி அவளும் முடிக்கட்டும், 2பேரும் சேர்ந்து போய் கையெழுத்து வாங்கலாம்ன்னு காத்துகிட்டு இருந்தேன், பயபுள்ள முடிக்கிற மாதிரி தெரியல, என் நோட்ட பாத்து எழுதுடின்னு சொல்ல, அவளும் பாத்து எழுத, என் கிரகம் அத மிஸ் பாத்துருச்சு, என்ன ரேவதி புது பழக்கம்ன்னு குச்சிய வச்சு தலையில அடிச்சாங்கப்பாருங்க, அடங்கொன்னியா, உங்க வீட்டு ரத்தமில்ல எங்க வீட்டு ரத்தமில்ல, கணக்கு நோட்டு ஃபுல்லா ஒரே ரத்தம், கடைசில வீட்டுக்கு தெரிஞ்சு அப்பா பள்ளிக்கூடத்துக்கு வர, பள்ளிக்கூடத்துக்கு வர, பள்ளிக்கூடத்துக்கு வர, அட இருங்கங்க சொல்லிக்கிறேன், எங்க ஸ்கூல்ல இருக்கிற எல்லா டீச்சருக்கும் எங்க அப்பா தான் நகை செஞ்சு தருவாரு, அதால எல்லா டீச்சரும் அப்பாக்கு தெரியும் எல்லார்ட்டையும் போய் அந்த மிஸ் பண்ணுணத சொல்ல, ஸ்கூலே அல்லோலப்பட்டு, அந்த மிஸ் அழுக ஆரம்பிச்சிடுச்சு. அப்பறம் நமக்கு ஒரு வாரம் லீவு அய் ஜாலி...

இந்த மாதிரி நம்ம ரவுச சொல்லன்னும்னா அதுக்கே ஒரு தொடர் பதிவு போடனும், அதால அடுத்து 8கிளாஸ் வாங்க, நான் படிச்ச அந்த கிறிஸ்டியன் ஸ்கூல்ல, அங்க  8ம் வகுப்பு வரை தான், அதால 8 படிக்கிற புள்ளைகள டூர் கூட்டிட்டு போவாங்க, அப்படிதான் அன்னைகும் டூர் கூட்டிட்டு போறாங்க நானும் போகனும்ன்னு சொன்னோங்க, என் அப்பாட்ட, என் அப்பா என்ன விட மாட்டின்டாறு. விடுவோமா நம்ம, நானும் நல்ல புள்ளையா கெஞ்சிப்பார்த்தேன், அடுத்து அழுது பாத்தேன் என் அப்பா மசியல, சரி இது சரிபட்டு வராதுன்னு ஸ்கூலுக்கு கிளம்பிட்டேன், நான் ஸ்கூல் வேன்ல தான் எப்பவும் போவேன், அவங்களுக்கு நான் இறங்கிற இடம் தெரியும்ல, சாயங்காலம் எப்பவும் நான் இறங்கிற இடத்துல இறங்காம, என் பாட்டி வீட்டுக்கு அப்பா வர சொல்லிட்டாங்கன்னு சொல்லி இறங்கிட்டேன்...

 நான் வீட்டுக்கு வர டைம் ஆகியும் வாராததலா, அப்பா ஸ்கூலுக்கு வர, நான் கிளம்பி போயிட்டேன்னு சொல்ல, ஹி ஹி இருங்க சிரிச்சுகிறேன்....காதல் படத்துல ஜஸ்வரியாவ காணோம்ன்னு அவங்க அப்பத்தா கத்துமே அது மாதிரி கத்தி என் அப்பத்தா ஊறயே கூட்டிட்டாங்க... நான் என் அம்மாச்சி வீட்டுல உக்காந்து தாத்தாட்ட ஊறுக்கு போக, காசு தேத்திட்டு இருந்தேன்,ஹி ஹி. நான் சொல்லாம வந்தது தாத்துவுக்கு தெரிய, கடைசி, என் தாத்த என்ன கூட்டிட்டு என் வீட்டுக்கு போக, இங்க தாங்க சர்பிரஸ் இருக்கு, சரி எல்லாரும் சேர்ந்து நம்மள கும்ம போறாங்கன்னு நினைச்சேன், ஹி ஹி ராங் கால்குளேசன், குடும்பமே கட்டி புடிச்சு அழுவுது... உடனே அப்பா கிளைமேக்ஸ் ல வர சிவாஜி  சார் மாதிரி, அழுதுட்டே நீ டூர் தானே போகன்னும் போ போ போயிட்டு வான்னு சொன்னாறு பாக்கன்னும் அங்க நிக்கிறா ரேவதி...அப்பறம் ஒரு வழியா டூர் போயிட்டு வந்தாச்சு, 8ம் வகுப்பும் நல்ல படியா படிச்சு முடிச்சாச்சு...


அடுத்து 9க்கு வேற ஒரு ஸ்கூல் இந்த பள்ளிக்கூடத்துல இருந்து வேற ஒரு சுழலா தெரிஞ்சது அந்த ஸ்கூல்.. என் பழைய ஸ்கூல்ல எல்லா டீச்சரையும் எனக்கு தெரியும், எல்லாரும் அந்த டீச்சர்ங்கிற உறவை தாண்டி ஒரு நட்போட இருப்பாங்க, இந்த ஸ்கூல் அப்படி இல்லை, ஏதோ ஆயுச முடிக்க எமனோட இருக்கிற சித்திரகுப்த்தன் கையில கணக்கு நோட்டேட சுத்துவாறுங்கிற மாதிரி எல்லா டீச்ச்ர் முகத்துலயும் ஒரு இறுக்கம், அப்பறம் அதுவே பழகி ஒரளவுக்கு நட்பு வட்டம் கிடைச்சிருச்சு.. சின்ன பிள்ளையாய் இருந்து, இதுதான் உலகம்ன்னு கொஞ்ச கொஞ்சமாய் புரிய ஆரம்பிச்சது, என் விளையாட்டுத்தனமும் வீண்புத்தனமும், அடியோட மாறிப்போச்சு, அடுத்து 10 கிளாஸ், இதுவரைக்கும் படிப்ப பத்தி எந்த அக்கறையும் இல்லாம அலட்டிக்காம படிச்சு நல்லாவே ஸ்கோர் பண்ணுணேன், ஆனா இந்த 10 வகுப்புல குடும்ப சூழல் கொஞ்சம் மாற, நம்ம வீட்டுல மூத்த பொண்ணாச்சே, அங்கயும் கவனிச்சு, இங்கயும் கவனத்த செலுத்த முடியல.
கால் ஆண்டு தேர்வுல, கணக்குல ஒற்றை படை எண் தான் நம்ம மதிப்பெண், நம்ம முடியாத அதிர்ச்சி, கிட்டதட்ட செத்துகூட போயிடலாமான்னு யோசிக்க வச்ச தருணம்ன்னு சொல்லலாம்...

ஸ்கூல் நிர்வாகம் அப்பாவ வரச்சொல்ல, அப்பாக்கு பெரிய அசிங்கத்த உண்டு பண்ணிட்டேன்னு மனசு கெடைந்து தவிக்கிது, என்ன காரணம்ன்னு என் வகுப்பு மரகதம் டீச்சர் அப்பாட்ட கேக்க, அப்பா வீட்டு சுழல அவங்கட்ட சொல்ல, மிஸ் என்ன பாத்து, இந்த வயசுல புள்ளைங்கள படிக்க விடுங்க, உங்க குடும்ப பாரத்த அது தலையில ஏத்தாதிங்கன்னு சொல்ல, ரேவதிக்கு டீசிய வாங்கிட்டு போங்க, அடுத்த வருசம் வந்து சேர்த்துக்கோங்கன்னு சொல்லிட்டாங்க, அப்பறம் ஒரு வழியா அப்பா பேசி சமாதனம் பண்ணி வச்சு, உத்திரவாதம் கொடுத்துட்டு போனாரு, அன்னைக்கு  முடிவு பண்ணுனேன், இனி என் அப்பா ஸ்கூலுக்கு வந்தா, இவர் பொண்ணு தான் ரேவதியான்னு சொல்ற அளவுக்கு இருங்கன்னும்னு நினைச்சேன் அத செயல்ல காட்டவும் ஆரம்பிச்சேன். ராத்திரி பகலா படிச்சேன், கிட்ட தட்ட சைக்கோ அளவுக்கு, என் குடும்பமே நான் படிக்கையில முழிச்சிருப்பாங்க, என் வயசான அப்பத்தாவையும் சேர்ந்து, அப்பறம் பப்ளிக் எக்ஸாம் முடிஞ்சது, ஒரளவுக்கு நல்ல மார்க் கிடைச்சது..

அடுத்து நமக்கு சின்ன வயசுல இருந்தே ஆடிட்டர் ஆகனும்ன்னு ஆசை, அது என்னவோ தெரியல, அரசியல்வாதில இருந்து, எல்லா துறை சார்ந்தவங்களும் சம்மந்த பட்ட ஒரு ஆளுனா ஆடிட்டர் தான். அதால காமர்ஸ் குருப் எடுத்தாச்சு, அக்கவுண்ட்ஸ் விரும்பி படிச்சதால புரிச்சுச்சா, இல்லை எப்படி புடிச்சதுன்னு தெரியல ஏன்னு கேக்குறேங்களா? என் அக்கவுண்ட்ஸ் மிஸ் எப்பவும் தண்ணி அடிச்சா பசங்க எப்படி மப்புலயே இருப்பாங்க அது மாதிரியே இருக்கும், கடைசில எல்லாரும் சேர்ந்து ஹெட் மிஸ் கிட்ட சொல்ல, அவங்களும் அவங்க எடுக்கிற கிளாஸ் அஹ கவனிக்க, எங்க பொண்ணுங்களுக்கு பற்று வரவு எங்க போடனும்னு கூட தெரியாத அளவுக்கு அவங்க கோச்சிங் இருந்தது. அப்பறம் அந்த டீச்சர மாத்த 4 மாசம் பிடிச்சது, அந்த நாளு மாசம் வரைக்கும் நானும், என் பிரண்ட்சும் தான் பாடம் எடுப்போம். இப்படியே 11 வகுப்பு நல்ல நட்புகளோட அந்த வயசுக்கே உண்டான குறும்பு தனத்தோட நிறைவடைந்தது.

அடுத்து 12ம் வகுப்பு, அந்த வகுப்புக்கோ உண்டான டென்சன், எப்பவும் புத்தகத்தோடயே முட்டிமோதுற காலம்ன்னு ரொம்ப வேகமா போனது, ஆனா அங்கயும் என் குறும்பு தனத்துக்கும், சேட்டைக்கும் அளவில்லாம தான் போனது, இந்த காதலர் தினம், காதலர் தினம்ன்னு ஒன்னு வருமே,அந்த ஒரு தினம் நாங்க படிக்கும் போதும் வந்தது, மீசை முளைக்காதது எல்லாம் லெட்டரோட சுத்துது.. நம்ம எப்பவும் படையப்பால வர ரஜினி மாதிரி பெரும் படையோட தான் சுத்துவோம், பெண்ணுகளுக்கு காதல சொல்ல காத்துகிடக்கிற நெறையா பசங்கள ஒட ஒட விரட்டுன காலம் அது..அதோட எந்த எதிர்ப்பார்ப்பும் இல்லாம, வேறுபாடுகள் இல்லாம, நமக்கு ஒன்னுனா உயிர் வரை துடிக்கிற பாசமான நட்புகளை கொடுக்கிறதும் இந்த பள்ளிக்காலம் தான், பரிட்சையும் வந்தது, பொண்ணுங்களுக்கே உண்டான கண்ணீரோடு, ஆட்டோகிராப் நோட்டுக்குள்ள அடைக்கலம் புகுந்தது எங்க நட்பு.
உனக்கு கல்யாணம்னா நான் வரேன், எனக்கு முந்தி கல்யாணம்னா நீவான்னு பெறும் பாலான வாசகங்களால நிறைச்சது ஆட்டோகிராப் புத்தகம்... பள்ளி இறுதி தேர்வுல, பள்ளியில இருக்கிற அத்தனை இடத்துக்கும் கண்ணீரோட விடைகொடுத்துட்டு வந்து, மாசம் ஒரு கிழமை சந்திப்போம்ன்னு வழக்கமான பாணில விடைகொடுத்தோம் நட்புக்கு...

என்ன தான் நம்ம வாழ்க்கையில எத்தன நட்பு வந்தாலும், எதையும் எதிர்பார்க்காம, எந்த விகர்ப்பமும் தெரியாம அமையிற நட்புன்னா அது பள்ளி பருவ கால நட்பு தான், அதே மாதிரி ஒரு மனுசன் அசைபோடுற மறக்கமுடியா நிகழ்வுகள்ல பசுமையான நினைவுன்னா அதுவும் பள்ளிக்காலம் தான்... பல பதிவுகள் எழுதுனாலும் நம்ம மனசுக்கு நெருக்கமான பதிவுகள் ல இந்த பதிவும் ஒன்னுன்னு நிச்சயம் சொல்லலாம்...நெஞ்சுக்கூட்டில் இனிக்கும் நினைவுகளுடன்,  என் சுய புலம்பலை தொடர் பதிவா எழுத அழைப்பு விடுத்த தமிழ்வாசி அண்ணனுக்கு நன்றிகள்...


(பதிவின் நீளம் அதிகமே, என்னை மன்னிச்சு சகோஸ்ஸ்ஸ்ஸ்)



19 கருத்துகள்:

Unknown சொன்னது…

இங்கிலிஸ் மீடியத்துல படிச்சேன்//

பீட்டர் விடும்போதே நினச்சேன் :)

Unknown சொன்னது…

நாங்க அவ்ளோ அழகு அப்போ ஹி ஹி , //

நாங்க ரொம்ப DECENT PEOPLE உண்மைய ஒத்துக்கொள்கிறோம் ..(SANTHOSMA ERUKKUME)

Unknown சொன்னது…

அப்பா கிளைமேக்ஸ் ல வர சிவாஜி கணனேசன் சார் மாதிரி, அழுதுட்டே நீ டூர் தானே போகன்னும் போ போ
போயிட்டு வான்னு சொன்னாறு பாக்கன்னும் அங்க நிக்கிறா ரேவதி..///

வேணாம் "கணனேசன்" அப்புறம் சிவாஜி ரசிகர்கள் கோவம் கொள்வர்
:)
நீங்க எந்த ஊர் டூர் போனீங்க

Unknown சொன்னது…

//
மீசை முளைக்காதது எல்லாம் லெட்டரோட சுத்துது.. நம்ம எப்பவும் படையப்பால வர ரஜினி மாதிரி பெரும் படையோட தான் சுத்துவோம், பெண்ணுகளுக்கு காதல சொல்ல காத்துகிடக்கிற நெறையா பசங்கள ஒட ஒட விரட்டுன காலம் அது.///

ஹஹஹா
ஆக யாருமே உங்களுக்கு கடிதம் கொடுக்கலைன்னு சொல்லுங்க...


மறுபடியும் ஸ்கூல் படிக்கணும் தோணுது
நிசமா சொல்றேன்
ரசித்து எழுதி இருக்கீங்க
நல்ல இருக்கு ரேவா

Seeni சொன்னது…

unmaithaan!
maaraatha ninaivu!
marakka mudiyaatha -
vaazhvu!

Unknown சொன்னது…

siva sankar கூறியது...

இங்கிலிஸ் மீடியத்துல படிச்சேன்//

பீட்டர் விடும்போதே நினச்சேன் :)


எனக்கு பீட்டர்ன்னு யாரையுமே தெரியாதே மீ பாவம்

Unknown சொன்னது…

siva sankar கூறியது...

நாங்க அவ்ளோ அழகு அப்போ ஹி ஹி , //

நாங்க ரொம்ப DECENT PEOPLE உண்மைய ஒத்துக்கொள்கிறோம் ..(SANTHOSMA ERUKKUME)


எனி குத்து பாட்டு இன் திஸ் கமண்ட்

Unknown சொன்னது…

siva sankar கூறியது...

அப்பா கிளைமேக்ஸ் ல வர சிவாஜி கணனேசன் சார் மாதிரி, அழுதுட்டே நீ டூர் தானே போகன்னும் போ போ
போயிட்டு வான்னு சொன்னாறு பாக்கன்னும் அங்க நிக்கிறா ரேவதி..///

வேணாம் "கணனேசன்" அப்புறம் சிவாஜி ரசிகர்கள் கோவம் கொள்வர்
:)
நீங்க எந்த ஊர் டூர் போனீங்க


சாரி பிழைகள் திருத்தப்பட்டது, நன்றி சிவா, டூர் அஹ அது வந்து ராஜாஜி பார்க் ஹி ஹி

Unknown சொன்னது…

siva sankar கூறியது...

//
மீசை முளைக்காதது எல்லாம் லெட்டரோட சுத்துது.. நம்ம எப்பவும் படையப்பால வர ரஜினி மாதிரி பெரும் படையோட தான் சுத்துவோம், பெண்ணுகளுக்கு காதல சொல்ல காத்துகிடக்கிற நெறையா பசங்கள ஒட ஒட விரட்டுன காலம் அது.///

ஹஹஹா
ஆக யாருமே உங்களுக்கு கடிதம் கொடுக்கலைன்னு சொல்லுங்க...


மறுபடியும் ஸ்கூல் படிக்கணும் தோணுது
நிசமா சொல்றேன்
ரசித்து எழுதி இருக்கீங்க
நல்ல இருக்கு ரேவா


ச்சீ ச்சீ பசங்க தெளிவான ஆளுங்கோ, ரொம்ப நன்றி உங்கள் கருத்துக்கு சிவா

Unknown சொன்னது…

Without Investment Jobs Available கூறியது...

கண்டிப்பாக இணையத்தில் நாம் சம்பாரிக்க முடியும். Payment வந்ததற்க்காண அணைத்து Proofsகளும் உள்ளது.

மேலும் இந்த தளம் கடந்த 5 வருடங்களாக மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதுவரை $2,112,116.48 பணம் தன் வாடிக்கையளர்களுக்கு அளித்துள்ளது. இதில் உங்களை இணைத்து கொண்டு நீங்களும் இணையத்தில் பணம் சம்பாரியுங்கள்.

மேலும் விவரங்களுக்கு : http://www.bestaffiliatejobs.blogspot.in/2012/01/get-paid-every-30-seconds.html


அண்ணே இந்த மாதிரி ஏகப்பட்ட வேலை பாத்து உடம்பெல்லாம் புண்ணா போய் கிடக்குனே :)

Unknown சொன்னது…

Seeni கூறியது...

unmaithaan!
maaraatha ninaivu!
marakka mudiyaatha -
vaazhvu!

ரொம்ப நன்றி சீனி உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் :)

ராஜி சொன்னது…

படிப்புல புலி, குணத்துல தங்கம்ன்னு பீலா விடாம உள்ளது உள்ளாபடி உங்க சேட்டைகளை ரசிக்கும்படி சொல்லியிருக்கீங்க.

K சொன்னது…

அழகான பள்ளி அனுபவங்களை கலக்கலாக எழுதியிருக்கே ரேவா! இடையிடைசொன்ன உவமைகள் செம கலக்கல்! வாழ்த்துக்கள்!

Unknown சொன்னது…

ராஜி கூறியது...

படிப்புல புலி, குணத்துல தங்கம்ன்னு பீலா விடாம உள்ளது உள்ளாபடி உங்க சேட்டைகளை ரசிக்கும்படி சொல்லியிருக்கீங்க.


நன்றி சகோ, உண்மையில் தானே உயிர் இருக்கு நன்றி சகோ உங்கள் பின்னூட்டத்திற்க்கும், வருகைக்கும் :)

Unknown சொன்னது…

பிளாகர் ஐடியாமணி - Dip in USA, UK, UAE, FR and RMKV,BMW கூறியது...

அழகான பள்ளி அனுபவங்களை கலக்கலாக எழுதியிருக்கே ரேவா! இடையிடைசொன்ன உவமைகள் செம கலக்கல்! வாழ்த்துக்கள்!


நன்றி நண்பா, உன் உற்சாக மறுமொழிக்கு, மகிழ்ந்தேன் :)

மும்தாஜ் சொன்னது…

//என்ன தான் நம்ம வாழ்க்கையில எத்தன நட்பு வந்தாலும், எதையும் எதிர்பார்க்காம, எந்த விகர்ப்பமும் தெரியாம அமையிற நட்புன்னா அது பள்ளி பருவ கால நட்பு தான், அதே மாதிரி ஒரு மனுசன் அசைபோடுற மறக்கமுடியா நிகழ்வுகள்ல பசுமையான நினைவுன்னா அதுவும் பள்ளிக்காலம் தான்...//சத்தியமான உண்மை ரே... பள்ளிபருவம் யாராலும் மறக்க முடியாத ஒரு அனுபவம்.. வாழ்த்துக்கள்!!!!

கீதமஞ்சரி சொன்னது…

தங்கள் பதிவை இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன். நேரம் கிடைக்கும் போது வந்து பாருங்கள். நன்றி.
http://blogintamil.blogspot.com.au/2012/03/blog-post_15.html

எவனோ ஒருவன் சொன்னது…

என்னையும் என் பள்ளி காலத்திற்கு அழைத்துப் போய் வந்தீர்கள். நிறைய சேட்டை பண்ணுவீங்க போல. பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி. எனக்கு பதிவு நீளமாய்த் தெரியவில்லை. இன்னும் கூட நிறைய எழுதி இருக்கலாம் ரேவா :-)

Praveen சொன்னது…

Comedy'a aaramichi Heavy feelingsoda mudichirukeenga... super sago.

Schooldays autograph ooduthu ippo yenakku...