அன்னையின் வடிவில் நண்பன்,
அழைக்கும் நேரத்தில் ஆறுதல்,
பசிக்கும் பொழுதில் உணவு,
படிக்கும் நேரத்தில் புத்தகம்,
படுத்தவுடன் உறக்கம்,
கொஞ்சம் கொஞ்சம் சந்தோஷம்,
சரிபரிணாமத்தில் முன்னேற்றம்,
நண்பனை போன்ற எதிரிகள்,
எதிரியை தாங்கும் வலிமைகள்,
உரக்க்ப் பேசும் உதடுகள்,
உண்மையை உரைக்க உரிமைகள்,
எளிமையை நாடும் இதயம்,
பழையதை மறவாத மனம்,
தூக்க நேரத்தில் மெல்லிசை,
துக்க நேரத்தில் உன் குரலோசை,
மெளனம் கலைக்க உன் மொழி,
ச்ப்தமாய் அழ தனியறை,
காலாற நடக்க தனிமை,
கைகோர்த்து நடக்க குளுமை,
வசதிக்கு தகுந்த வீடு,
வாய்ப்பு ஏற்ப அலங்காரம்,
தடைகளை மீறய பயணம்,
ஆபத்தை சொல்லித்தர அனுபவங்கள்,
கொஞ்சி விளையாட பொம்மைகள்,
கொஞ்சம் யோசிக்க சில பொய்கள்,
அவ்வப்போது எதிர்கால கனவுகள்,
எப்போதும் வந்த பாதையின் நினைவுகள்,
சுகம் கொள்ள சொந்தங்கள்,
சுற்றியும் கொஞ்சம் நட்புகள்,
வீட்டைச் சுற்றி செடிகொடிகள்,
வீட்டிற்க்குள் சில இனங்கள்,
ஆறுதல் தர என் கவிதைகள்,
ஆராதனை செய்ய உன் படம்,
எப்போது சாத்தியமோ
அப்போது நிலாச்சோறோடு
அன்னை மடி,
மழை நேரத்தில் வீட்டுஜன்னல்,
மாலை நேரத்தில் அவன் மடி,
பழைய நட்பாய் தொடரும் உறவுகள்.
கொஞ்சம் சண்டை,
கொஞ்சம் இன்பம்,
கொஞ்சம் புகழ்,
கொஞ்சம் பணம்,
கொஞ்சம் அழுகை,
கொஞ்சம் நிதானம்,
கொஞ்சம் திமிர்,
நிறைய நான்
என்றும் எளிமையென
அத்தனையும் வேண்டுமெனக்கு..
முந்தைய பதிவு : துளி துளியாய் காதல்
12 கருத்துகள்:
உள்மனதின் யதார்த்தமான
ஆசைகள்
கவிதை அழகு
கிடப்பத்தற்கு என் பிராத்தனைகள் வாழ்த்துக்கள்
கிடைக்கும் உங்களுக்கு
அழகிய கவிதை
:) NICE..
யார் அங்கே
இந்த கவிதை புலவிக்கு
அனைத்தும் கிடைக்க உத்தரவு இடுகிறேன் ...
இப்படிக்கு
வருத்தபடாத வாலிபர் சங்க மகாராஜா
azhakiya vaarthai nadai!
vaazhthukkal!
மனம் கவரும் வேண்டுதல்கள், கிடைக்க வாழ்த்துக்கள்!
சின்ன சின்ன ஆசைகளால் ஒரு கவி மாளிகையே கட்டிவிட்டீர்கள். அத்தனையும் வசப்பட வாழ்த்துகள். கவிதையில் காணக்கிடைக்கும் ஏக்கமும் ரசிக்கவைக்கிறது. பாராட்டுகள் ரேவா.
கொஞ்சம் அல்ல நிறையவே கிடைக்கும் வாழ்த்துக்கள் .
வேண்டிய வரங்கள் கிடைக்க வாழ்த்துக்கள் சகோ ..
வாவ்! அட்டகாசமான கவிதை,திரும்ப திரும்ப வாசிக்க சொல்கிறது.
கடவுளுக்கே இவை அனைத்தும் வாய்க்கபெறவில்லை.
இவை தான் சொர்க்கம்
எனக்கும் இதெல்லாம் வேணும் ரேவா :-)
அமர்க்களம் படப் பாடல் என் நினைவுக்கு வருகின்றது இக்கவிதையை வாசிக்கும் பொழுது....
கருத்துரையிடுக