உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

வியாழன், 29 மார்ச், 2012

காதலர் பேச்சு..




ஏதேதோ
பேச நினைத்த
வேளைகள்,
புரிந்தும் புரியாமலுமாய்
பல உரையாடல்கள்..
உனக்கு மட்டுமே
புரிந்த
என் மெளனம்,
இன்னும் இன்னும்
என தாகம் கொண்ட
பேசித் தீர்க்கா
வார்த்தைகள்,
எதைச் சொல்ல,
எதை மெல்லவென
புரியாத பதட்டம்..
 என அத்தனையும்
அரங்கேறும்
காதலர் பேச்சில்...


முந்தைய பதிவு : தீயிலெறியும் ஆசைகள்

18 கருத்துகள்:

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

இதுதான் காதலின் தருணங்கள்...
இதுதான் உண்மை

அழகிய கவிதை

கீதமஞ்சரி சொன்னது…

காதலர் பேச்சிலரோ, பேச்சுளரோ... காதல் மத்தியில் அமர்ந்து வாய்பார்க்கிறது என்பது மட்டும் புரிகிறது. பாராட்டுகள் ரேவா.

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

கடலை போடுறதை நாசூக்கா சொல்லுது தங்கச்சி......

ம்ம்ம் அழகு.....!!!

செய்தாலி சொன்னது…

அலுவலகத்த்ல் சகாக்களும்
பிளாட்டில் அறை நண்பர்களும்
நக்கலாய் கேட்பதுண்டு

மணிகணக்கா
அப்படி எண்ண பேசுவீங்க என்று
அப்போது சொல்லத் தெரியாது
பேசும் பேசிக்கொண்டும் இருக்கும்
காரணத்தை

முற்றிலும்
உண்மையான வரிகள் தோழி

நிரூபன் சொன்னது…

வணக்கம் அக்கா, அருமையான கவிதை.

காதலர்கள் பேசிக் கொள்ளும் போது நிகழும் மாற்றங்களை கவிதை அழகுறச் சொல்லி நிற்கிறது.

ஆத்மா சொன்னது…

நல்ல கவிதை....இது ஏன் உங்களுக்கு வருகுது..லவ் பண்ணுரீங்களோ...அவ்வ்வ்

Seeni சொன்னது…

kavithai!
arumai!

cell phone kaathalai -
patriyathu!-
ungal karangal patriyathaal-
iniththathu!

சசிகலா சொன்னது…

உனக்கு மட்டுமே
புரிந்த
என் மெளனம்,// மவுனம் பேசுகிறது .

Unknown சொன்னது…

கவிதை வீதி... // சௌந்தர் // கூறியது...

இதுதான் காதலின் தருணங்கள்...
இதுதான் உண்மை

அழகிய கவிதை


மிக்க நன்றி சகோ உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் :)

Unknown சொன்னது…

கீதமஞ்சரி கூறியது...

காதலர் பேச்சிலரோ, பேச்சுளரோ... காதல் மத்தியில் அமர்ந்து வாய்பார்க்கிறது என்பது மட்டும் புரிகிறது. பாராட்டுகள் ரேவா.

ஹி ஹி சகோ காதலர் பேச்சில் இந்த பேச்சுளர் பேச்சிலார், ஏதோ சொல்லுறேன் புரிஞ்சுக்கோங்க.. நன்றி அக்கா உங்கள் வருக்கைக்கும் கருத்துரைக்கும் :)

Unknown சொன்னது…

MANO நாஞ்சில் மனோ கூறியது...

கடலை போடுறதை நாசூக்கா சொல்லுது தங்கச்சி......

ம்ம்ம் அழகு.....!!!

ஹி ஹி ஆமாம் அண்ணா புரிஞ்சுடுச்சா :)

Unknown சொன்னது…

செய்தாலி கூறியது...

அலுவலகத்த்ல் சகாக்களும்
பிளாட்டில் அறை நண்பர்களும்
நக்கலாய் கேட்பதுண்டு

மணிகணக்கா
அப்படி எண்ண பேசுவீங்க என்று
அப்போது சொல்லத் தெரியாது
பேசும் பேசிக்கொண்டும் இருக்கும்
காரணத்தை

முற்றிலும்
உண்மையான வரிகள் தோழி

ஹா ஹா மெயின் பிச்சர் இங்கயே இருக்காங்களே, அப்படி என்னதான் பேசுவீங்க(மீ நல்ல பிள்ளை)

நன்றி சகோ உங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் :)

Unknown சொன்னது…

நிரூபன் கூறியது...

வணக்கம் அக்கா, அருமையான கவிதை.

காதலர்கள் பேசிக் கொள்ளும் போது நிகழும் மாற்றங்களை கவிதை அழகுறச் சொல்லி நிற்கிறது.

அட பாருடா யாரோ புது ஆளெள்லாம் நம்மட பக்கத்துக்கு வந்திருக்கு, என்ன நிரூபன் எப்படி இருக்கிறாய், ஆளையே காணாமே?

ரொம்ப நாள் கழித்து வந்தாலும் மாறாத, மறக்காத உன் அன்புக்கு நன்றி :)

Unknown சொன்னது…

சிட்டுக்குருவி கூறியது...

நல்ல கவிதை....இது ஏன் உங்களுக்கு வருகுது..லவ் பண்ணுரீங்களோ...அவ்வ்வ்


தொலைபேசி ஒட்டுக்கேட்கும் விவரம் உங்களுக்கு தெரியாதா சகோ ஹி ஹி , நிறைய பேர் அவங்கட லவ்வரோட கதைக்கிறத நான் கேட்டுட்டுண்டு, அதன் விளைவே, மத்தபடி சிட்டுக்குருவி மாதிரி தான் நானும் :)

Unknown சொன்னது…

Seeni கூறியது...

kavithai!
arumai!

cell phone kaathalai -
patriyathu!-
ungal karangal patriyathaal-
iniththathu!

ரொம்ப நன்றி சகோ உங்கள் கருத்துரைக்கு :)

Unknown சொன்னது…

சசிகலா கூறியது...

உனக்கு மட்டுமே
புரிந்த
என் மெளனம்,// மவுனம் பேசுகிறது .

அய் உங்களுக்கும் புரிச்சிடுச்சா சசி ள்)

ஹேமா சொன்னது…

அழகான கவிதைகளோடு கொண்ட அழகான தளம்.ரேவா இன்றுதான் உங்கள் பக்கம் வருகிறேன்.

காதலின் மொழியே மௌனம்தான் தோழி !

எவனோ ஒருவன் சொன்னது…

அனுபவம் கவிதை மூலமா பேசுது போல :-)