இருள் சூழ்ந்த
இவ்வடர்காட்டின்
இவ்வடர்காட்டின்
ஆழமறியாமல்
கடக்க துணிகின்றேன்
நான்...
புலங்கியறியா
பாதையாதனால்,
எவ்வளவு தொலைவு
என்று புலனாகாமலே
சிறிது சிறிதாய்
கடக்கின்றேன்..
ஆழமாய்ச்செல்லச் செல்ல
புதையுண்ட
ஆசைகள், கனவுகளென,
அத்தனை நிகழ்வுகளும்
கிளைபரப்பி,
தன் நிகழ்வுகளை
தக்கவைத்திருக்கின்றன
அக்காட்டில்..
மேலும் மேலும்
ஆழம் செல்லச் செல்ல,
நிறைவேறா
பல நிகழ்வுகளும்
அழுத்தமாய்
என்னை பார்கின்றன..
நிறைவேறா நிகழ்வுகளின்
விவரமறிந்தாலும்,
இன்னும் எப்படி
வடிவமிழக்காமல்
இருக்கிறதென்ற
இருக்கிறதென்ற
சந்தேகத்தை விதைக்கிறது
அக்காடு..
தண்டிக்கப்பட்ட சில
நிகழ்வுகள்,
வனப்பிழந்து
வாய்திறந்து விடுவிக்க
கெஞ்சுகிறது..
தொண்டையில்
சிக்கிய முள்ளாய்
வார்த்தை
வர சக்தியற்று,
அந்த நிகழ்வுகளை
அசைபோட்டு பார்க்கையில்,
அவமானமும்,
குற்ற உணர்வுமே
குற்ற உணர்வுமே
மேலிடுகின்றது
அவ்விடத்தில்..
யாருமில்லா அக்காட்டில்
நிறம்பிக்கிடக்கின்ற
அத்தனையும்
என் ஆழ்மனதில்
நான் விதைத்துவிட்டிருந்தது
என்று புலனாகிறது..
அப்படியானால்
அக்காடு....?...!!!!!!
என் எண்ணக்குமுறல்களுக்கும்
நிகழ்வுகளுக்கும்,
ஆசை,கனவு
தோல்வி
தோல்வி
ஏமாற்றமென
பெயர்வைத்து
நான் அடைத்து வைத்த
என் மனக்கிடங்கோ
அக்காடு...
முந்தய பதிவு : காதலர் பேச்சு
9 கருத்துகள்:
இந்த
மனக் காட்டில்
சற்று நேரம் சென்று திரும்புதல் கடினம்தான்
உண்மையில் சூப்பர் கவிதை தோழி
நல்ல கவிதை வரிகள் ஒவ்வொன்றும் மிக அரிதான வரிகள்....பிரயோகத்தில் இவ் வரிகள் புலங்கியதை நான் அறிந்ததில்லை...க..க..க..போ
அடர் காடு போல் மனமானால் கவிதை மழை பொழியுமா ?
ஆஹா கவிதை எனும் பூங்காற்று, வாழ்த்துக்கள்'ம்மா....!!!!
அடடா..!
இன்னும் தேடுங்கள் -
உங்கள் மனகாட்டில்-
கிடைக்கட்டும் -
நல்ல கவிதைகள்'
நல்ல கவிதை!
அமைதி கொள் மனமே!
எண்ணங்களை நிறைத்து வைத்திருக்கும் காடுதான் மனம்.மிருகங்களும்,பூக்களும்,மரங்களுமாய்.அருமையான கவிதை ரேவா !
பலரும் பயணிக்க பயப்படும் பல விஷயங்களை தன்னகத்தே புதைத்து வைத்துக் கொண்டு நமக்குள்ளேயே இருக்கும் அந்த காட்டுக்குள் பயணித்து கவிதை எடுத்து வந்த அக்காவுக்கு என் பாராட்டுக்கள்.அருமை அக்கா
எல்லார் மனக்கிடங்கும் இப்படி தான் இருக்கும் போல :-(
கருத்துரையிடுக