உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

திங்கள், 9 ஏப்ரல், 2012

இது அது எதில் நான்?

 நன்றி : கூகிள்

 நான் எது எதுவாகவோ
ஆசைப்பட்டு
இன்று இதுவாக
இருக்கின்றேன்.
இந்த இதுவாகவே 
இறுதிவரை இருந்துவிட்டு
போகவும் விரும்புகின்றேன்,
இந்த இது எது? என்று
குறு குறுக்கும் மனதிற்க்கான
பதிலை அவரவர்
பார்வைக்கே விடுகின்றேன்..





13 கருத்துகள்:

சசிகலா சொன்னது…

தங்கள் மனதிற்கு பிடித்த அந்த எதுவாக நீங்கள் இருந்தாலும் அந்த அதுவாகவே வாழ்த்துகிறோம் .

எவனோ ஒருவன் சொன்னது…

இது எது ரேவா? எனக்கு மட்டும் சொல்லுங்க :-)

Seeni சொன்னது…

அது இதுவா!?

இது அதுவா!?

எது எதுவோ!?

அது வந்து-
நீங்கள் மனதிற்கு-
பிடித்ததை-
செய்வது!

(அதான் கவிதை எழுதுவது!)

ரேவா சொன்னது…

கருத்திட்ட நட்பின் உறவுகளுக்கு நன்றிகள் பல...


பதிவுக்கு சம்மந்தம் இல்லாத மறுமொழிகளை ஒரு போதும் வெளியிடமுடியாது...

நம்பிக்கைபாண்டியன் சொன்னது…

\\\\இந்த இதுவாகவே
இறுதிவரை இருந்துவிட்டு
போகவும் விரும்புகின்றேன்////

இ (யல்பாக எழுதுவ)து
எ (ண்ணுவதை எழுதுவது)து

இது எதுவாக இருந்தாலும் இறுதிவரை தொடர்வதை ரசிக்கிறேன்!

ALBERT சொன்னது…

நான் எது எதுவாகவோ
ஆசைப்பட்டு
....
ஒருத்தரை விரும்பி அவருடன் வாழா ஆசை பாட்டிங்க
....
இன்று இதுவாக
இருக்கின்றேன்.
....
ஆனா இன்னைக்கு வேற ஒருதரோடு திருமணம்
....
இந்த இதுவாகவே
இறுதிவரை இருந்துவிட்டு
போகவும் விரும்புகின்றேன்,
....
இப்போ நீங்க திருமணம் செஞ்சவரோட கடைசி வரை இருக்க ஆசை படுரிங்க
....
இந்த இது எது? என்று
குறு குறுக்கும் மனதிற்க்கான
பதிலை அவரவர்
பார்வைக்கே விடுகின்றேன்...
....
அக்கா நீங்க முதல் காதலா நினைத்து இன்னும் கஷ்ட்ட படுரிங்க
....
யாருதான் காதல்ல தொக்கால சொல்லுக பாக்கலாம்.
சின்ன வயசுல
பள்ளிகுடதுல
பக்கத்து விட்டுள இருக்குறவங்க
இப்படி நாங்க யார் யாரையோ லவ் ( ஆசை ) பட்டிருக்கலாம் இதுக்காக கல்யாணம் ஆன பின்னாடி உங்களுக்கு கிடைச்ச வாழ்கையை லவ் பண்ணுக ...
முடிஞ்சி போன ஒன்னுக்காக எப்பவும் கவை பட்டு நிகழ் கால வாழ்கையை எதுக்கு சோகமயமக்குரிங்க ....

ரேவா சொன்னது…

சசிகலா கூறியது...

தங்கள் மனதிற்கு பிடித்த அந்த எதுவாக நீங்கள் இருந்தாலும் அந்த அதுவாகவே வாழ்த்துகிறோம் .


மிக்க நன்றி சசி புரிந்துணர்வோடு தொடுத்த மறுமொழிக்கு:)

ரேவா சொன்னது…

எவனோ ஒருவன் கூறியது...

இது எது ரேவா? எனக்கு மட்டும் சொல்லுங்க :-)


நண்பாஅவரவர் அவரவர் பார்வையின் ஆழம் பொருத்தே இக்கவிதைக்கான கரு மாறும் :)

ரேவா சொன்னது…

Seeni கூறியது...

அது இதுவா!?

இது அதுவா!?

எது எதுவோ!?

அது வந்து-
நீங்கள் மனதிற்கு-
பிடித்ததை-
செய்வது!

(அதான் கவிதை எழுதுவது!)


ஹஹா மிக்க நன்றி சகோ :)

ரேவா சொன்னது…

நம்பிக்கைபாண்டியன் கூறியது...

\\\\இந்த இதுவாகவே
இறுதிவரை இருந்துவிட்டு
போகவும் விரும்புகின்றேன்////

இ (யல்பாக எழுதுவ)து
எ (ண்ணுவதை எழுதுவது)து

இது எதுவாக இருந்தாலும் இறுதிவரை தொடர்வதை ரசிக்கிறேன்!


மிக்க மிக்க நன்றி சகோ புரிந்துணர்வோடு தந்த கருத்துரைக்கு :)

ரேவா சொன்னது…

ALBERT கூறியது...

நான் எது எதுவாகவோ
ஆசைப்பட்டு
....
ஒருத்தரை விரும்பி அவருடன் வாழா ஆசை பாட்டிங்க
....
இன்று இதுவாக
இருக்கின்றேன்.
....
ஆனா இன்னைக்கு வேற ஒருதரோடு திருமணம்
....
இந்த இதுவாகவே
இறுதிவரை இருந்துவிட்டு
போகவும் விரும்புகின்றேன்,
....
இப்போ நீங்க திருமணம் செஞ்சவரோட கடைசி வரை இருக்க ஆசை படுரிங்க
....
இந்த இது எது? என்று
குறு குறுக்கும் மனதிற்க்கான
பதிலை அவரவர்
பார்வைக்கே விடுகின்றேன்...
....
அக்கா நீங்க முதல் காதலா நினைத்து இன்னும் கஷ்ட்ட படுரிங்க
....
யாருதான் காதல்ல தொக்கால சொல்லுக பாக்கலாம்.
சின்ன வயசுல
பள்ளிகுடதுல
பக்கத்து விட்டுள இருக்குறவங்க
இப்படி நாங்க யார் யாரையோ லவ் ( ஆசை ) பட்டிருக்கலாம் இதுக்காக கல்யாணம் ஆன பின்னாடி உங்களுக்கு கிடைச்ச வாழ்கையை லவ் பண்ணுக ...
முடிஞ்சி போன ஒன்னுக்காக எப்பவும் கவை பட்டு நிகழ் கால வாழ்கையை எதுக்கு சோகமயமக்குரிங்க ....


தம்பி ஆல்பர்ட் உங்க பெரிய மறுமொழி பாத்து மீ அழுதுபையிங்...அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.... நான் யாரையும் காதலிக்கல, அதோட மீ க்கு இன்னும் கல்யாணம் ஆகல, அதோட இது காதல் தோல்விக்கவிதையும் இல்லை, அந்த ஏரியாவை விட்டு வந்து ரொம்ப வருசம் ஆகுது... என் கவிதைகள் அனைத்தும் கற்பனை களத்தில பிறந்தது... மிக்க நன்றி உங்கள் மறுமொழிக்கும் வருகைக்கும் :)

ALBERT சொன்னது…

அக்கா உங்க கற்பனை நல்ல இருக்கு ஆன எனக்குத்தான் ஒண்ணும் விலங்கல...

விஜயன் சொன்னது…

//
நான் எது எதுவாகவோ
ஆசைப்பட்டு
இன்று இதுவாக
இருக்கின்றேன்.
//
எப்போதும் ஏதோ ஒன்றாக இருப்பது,முடியாது மாறுதல்கள் வாழ்க்கையின் இயற்கை.,
//
இந்த இதுவாகவே 
இறுதிவரை இருந்துவிட்டு
போகவும் விரும்புகின்றேன்
//
இந்த இது எது என்று உங்களுக்கு மட்டுமே முழுமையாக தெரியும்,உங்கள் பதிவுகளின் மூலம் எனக்கு தெரிந்த நீங்கள் ஒரு வாழ்க்கையின் ரசிகை,வாழ்வை ரசித்து வாழும் ஜீவன்,காதலின் காதலி,பிரபல பதிவர்.
தேடலே வாழ்க்கையை சுவாரசியாமாக்குகிறது,புதிய தேடலுக்கு வாழ்த்துக்கள்.