உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

ஞாயிறு, 22 ஏப்ரல், 2012

இதுவும் ஒரு தோல்விக்கவிதை
சுற்றித்திரிந்த பெருவெளிகளின்
சூடு இன்னும் குறைந்தபாடில்லை..

கண் பார்த்த தருணத்தில்
உணர்வுகளின் உந்தலில்
இது விளைந்ததா?
இதுவரை விளங்கவில்லை....

கதையளந்தோம்
கற்பிற்க்கான வரையறை வைத்தோம்
தொட்டு பேசிவிட்டு
தொடாமல் விட்டுச்சென்றோம்

சண்டையிட்டோம்,
பிடிவாதாம் கொண்டோம்
ஒருவரை வெல்ல நினைத்து
இருவரும் தோற்றே போனோம்

ஆள நோக்கி,
அறியாமல் அளவெடுத்து
முதல் முத்தம் பதித்த
அந்த இடம்
அழியாமலிருக்கும் விந்தைகண்டு
ஆச்சர்யப்பட்டோம்...

கதறியழுகின்றேன்
இந்த தோல்வி
இந்த பிரிவு
எங்கனம் சாத்தியமென்று...

விடை சொல்லி விடு..
அன்றில்
காதல் பழகிய
இடத்தில்
என்னை கொன்றுவிடு..

இல்லை வழக்கமாய்
உம் வர்க்கம் பயன்படுத்தும்
வார்த்தையால்
எம்மை வதைத்துவிடு..

அதையும் விட 
கொடுமையாய்
நீயே என் உயிரை 
பிரித்துவிடு..

நீயற்ற தனிமைக்கு
துணையாய் இருக்கும்
இந்த கவிதைக்கு புரியும் முன்
இப்பிரிவுக்கு
நீயே பெயர் வைத்துவிடு..
இல்லையேல்
இதுவும் ஒரு தோல்விக் கவிதையென
பொருள்கொண்டுவிடும்
நீயில்லாத இவ்வுலகம்


10 கருத்துகள்:

Ramani சொன்னது…

சண்டையிட்டோம்,
பிடிவாதாம் கொண்டோம்
ஒருவரை வெல்ல நினைத்து
இருவரும் தோற்றே போனோம்//

மனம் கவர்ந்த அருமையான பதிவு
தொடர வாழ்த்துக்கள்

சிட்டுக்குருவி சொன்னது…

நல்ல ஒரு கவிதை விசுவல் பார்த்தது போன்று இருந்தது ரேவா.....வாழ்த்துக்கள்

சசிகலா சொன்னது…

அதையும் விட
கொடுமையாய்
நீயே என் உயிரை
பிரித்துவிடு..
மிகவும் அருமைங்க . வலி நிறைந்த வரிகள் .

ரேவா சொன்னது…

Ramani கூறியது...

சண்டையிட்டோம்,
பிடிவாதாம் கொண்டோம்
ஒருவரை வெல்ல நினைத்து
இருவரும் தோற்றே போனோம்//

மனம் கவர்ந்த அருமையான பதிவு தொடர வாழ்த்துக்கள்


மிக்க நன்றி ரமணி ஜயா உங்கள் உடன் வருகைக்கும் உற்சாக மறுமொழிக்கும்...

ரேவா சொன்னது…

சிட்டுக்குருவி கூறியது...

நல்ல ஒரு கவிதை விசுவல் பார்த்தது போன்று இருந்தது ரேவா.....வாழ்த்துக்கள்

நன்றி நண்பரே உங்கள் மறுமொழிக்கு :)

ரேவா சொன்னது…

சசிகலா கூறியது...

அதையும் விட
கொடுமையாய்
நீயே என் உயிரை
பிரித்துவிடு..
மிகவும் அருமைங்க . வலி நிறைந்த வரிகள் .

நன்றி தோழி :)

Seeni சொன்னது…

ஏக்க கவிதை!

எனையும்-
ஏங்க வைத்து விட்ட-
கவிதை!

விஜயன் சொன்னது…

அருமையான கவி அக்கா.
//காதல் இல்லாத காதலன் வேண்டாம்//

விஜயன் சொன்னது…

//சண்டையிட்டோம்,
பிடிவாதாம் கொண்டோம்
ஒருவரை வெல்ல நினைத்து
இருவரும் தோற்றே போனோம்
//
வலி தந்த போதும் காதல் இனிது

அன்பை தேடி,,அன்பு சொன்னது…

அதையும் விட
கொடுமையாய்
நீயே என் உயிரை
பிரித்துவிடு..
வரிகள் அருமை