உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

இந்நாளைய தனிமை


 எவ்வித எதிர்பார்புமின்றி
வெற்றுடம்பை சுமந்திருக்கும்
இந்நாட்களில் 
இல்லை
அன்றைய நாட்களைப் போன்ற 
பெரியதொரு உற்சாகம்....

உறக்க கத்துவதைக் காட்டிலும்
மெளனம் 
பயங்கரமானதாக இருக்கின்றன
இவ்வேளைகளில்.

மெளனமுடைக்க 
இல்லாத ஏதோ ஒன்றிடம்
பேசி பேசி 
வெல்ல நினைக்கின்றேன்..

நீளும் இந்நாட்களை,
நாழிகையிலும், நிமிடங்களிலும்
மணிகளிலுமாய் 
கரைந்து கொண்டிருக்கின்ற
நினைவுகளை 
கடத்த ஏதுவாய் ஒன்றும் 
அமையவில்லை...

வரைந்து பார்க்கிறேன்
இசைத்து பார்க்கிறேன்
புரட்டி பார்க்கின்றேன்
எதிலும் நான் நினைத்த 
ஒன்று கிட்டவேயில்லை..

ஏதோ ஒன்றை மறக்க
எதனிடமோ த்ஞ்சமடைகின்ற
மனதுக்கு ஏனோ 
எதுவுமே பிடிக்கவில்லை..

சில நேரங்களில் எதையோ 
நினைத்தபடி,
கணத்திடும் இரவை துரத்தியபடி,
சிதறிக்கிடக்கும் மௌனங்களை 
சேகரித்தபடியென
நீள்கிறது 
என் இந்நாளைய தனிமை...
17 கருத்துகள்:

Ramani சொன்னது…

எல்லோருக்கும் நேரும் நிலையே
ஆயினும் எல்லோராலும் இத்தனித் தெளிவாய் அழகாய்
உணரும்படி சொல்ல முடிவதில்லை
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்

மனசாட்சி™ சொன்னது…

தனிமை - சொன்ன விதம் அருமை பிடிச்சிருக்கு

படைப்பாளிக்கு பாராட்டுக்கள்

siva sankar சொன்னது…

Aaga motham neenga V.O.va work panrenganu ninaikren..

All is well..all will cross..:)

Nice post.

ரேவா சொன்னது…

Ramani கூறியது...

எல்லோருக்கும் நேரும் நிலையே
ஆயினும் எல்லோராலும் இத்தனித் தெளிவாய் அழகாய்
உணரும்படி சொல்ல முடிவதில்லை
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்


மிக்க நன்றி ரமணி சார்... புரிந்துணர்வோடு தந்த மறுமொழிக்கும் வருகைக்கும் :)

ரேவா சொன்னது…

மனசாட்சி™ கூறியது...

தனிமை - சொன்ன விதம் அருமை பிடிச்சிருக்கு

படைப்பாளிக்கு பாராட்டுக்கள்


மிக்க நன்றி சகோ உங்கள் பாராட்டுக்கு மகிழ்ந்தேன் :)

ரேவா சொன்னது…

siva sankar கூறியது...

Aaga motham neenga V.O.va work panrenganu ninaikren..

All is well..all will cross..:)

Nice post.


ஆமாம் நீங்க பண்ணுற அதே வேலை தான்.... மிஸ்டர் சிவா..... நன்றி உங்கள் வருகைக்கு :)

செய்தாலி சொன்னது…

தனிமை பற்றிய வரிகளில் வலி
ம்ம்ம் அருமை சகோ

சசிகலா சொன்னது…

தனிமையிலே இனிமை காண முடியுமா .... உங்கள் வரிகளை படித்த பின்பு முடியும் என்று தான் நினைக்கிறன் .

Seeni சொன்னது…

தனிமை !
கொடுமை!

அருமை!
கவிதை!

நேசிக்கிறேன்-
உங்கள் எழுத்தை!

மதுமதி சொன்னது…

"ஏதோ ஒன்றை மறக்க
எதனிடமோ தஞ்சமடைகின்ற
மனதுக்கு ஏனோ
எதுவுமே பிடிக்கவில்லலை"

சரியாகச் சொன்னீர்கள்..

sathu sivasubramaniyam சொன்னது…

அற்புதமான கவிதை ரேகா வாழ்த்துக்கள்..எனது இந்நாளைய மனநிலைகளை உங்கள் கவிதையூடாக அருமையாக உணர முடிந்தது...எல்லையில்லாத சொந்தங்களின் அரவணைப்பிலிருந்து விலகி செல்கையில் வருகின்ற வலியை அற்புதமாக வார்த்தைகளுக்குள் சிறைபிடித்து விட்டீர்கள்.

மயிலன் சொன்னது…

வேகமாக படித்துணர முடியாத ஆழமான எனினும் எளிமையான கவிதை.. வாழ்த்துக்கள் தோழி...

யோவ் சொன்னது…

//சிதறிக்கிடக்கும் மௌனங்களை
சேகரித்தபடியென
நீள்கிறது
என் இந்நாளைய தனிமை//

கவிஞர்களுக்கே உரியது தனிமையில் உழல்வதும், ரசிப்பதும்,வாழ்கையில் ஏதோ ஒன்றை தீவிரமாய் தேடிக்கொண்டு எதிலும் ஒட்டாதிருப்பதும்..நல்ல கவிதை அருமையான மொழியாக்கம்

சித்தாரா மகேஷ். சொன்னது…

//எவ்வித எதிர்பார்புமின்றி
வெற்றுடம்பை சுமந்திருக்கும்
இந்நாட்களில்
இல்லை
அன்றைய நாட்களைப் போன்ற
பெரியதொரு உற்சாகம்....//

இந்நாளைய தனிமை என்னை ரொம்பவே பாதிச்சிடுச்சு அக்கா.அருமையான உணர்வு அக்கா.வாழ்த்துக்கள்.

S Murugan சொன்னது…

"வரைந்து பார்க்கிறேன்
இசைத்து பார்க்கிறேன்
புரட்டி பார்க்கின்றேன்
எதிலும் நான் நினைத்த
ஒன்று கிட்டவேயில்லை..."

உங்களுக்கு அறிவுப் பசி அதிகம் என்று நினைக்கிறேன் எல்லாவற்றிலும் சாதிக்க வேண்டும் என்று நினைக்கும் போது சில வேளைகளில் இப்படித்தான். கவிதை அருமை.

ரேவா சொன்னது…

செய்தாலி கூறியது...

தனிமை பற்றிய வரிகளில் வலி
ம்ம்ம் அருமை சகோ


மிக்க நன்றி சகோ உங்கள் வருகைக்கும், உற்சாக மறுமொழிக்கும் :)

விஜயன் சொன்னது…

தனிமை சிலருக்கு கொடுமை சிலருக்கு அருமை,சிலருக்கு கவலை தரும் சிலருக்கு கவிதை தரும்.தனிமையை பலருடன் பகிர்ந்து கொண்டமை அருமை