உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

புதன், 25 ஏப்ரல், 2012

இந்த செய்கையில் காதலுண்டா?.....

உன்னை பார்த்த
முதல் தேதியை குறித்தது,
உனக்கு பிடித்தவற்றை
பிரியத்தோடு பார்த்தது,
உன் கைகுட்டையில்
வேர்வை வாசம்
... பிடித்தது,
உன் காலனியில்
என் காலடிதடம் பதித்தது,
நீ வீசி எறிந்த
மிட்டாய் பேப்பரிலிருந்து,
பேருந்து சீட்டு,
சிகெரட் துண்டுவரை
அத்தனையையும்
பத்திரப்படுத்தும்
இந்த செய்கைக்கு
பெயர் காதலில்லை,
அதே நேரத்தில்
இந்த செய்கையில்
காதல் இல்லாமலும் இல்லை.... 

10 கருத்துகள்:

செய்தாலி சொன்னது…

ம்ம்ம்
இது காதலின்
முதல் நிலை

காதல்
ஒருபோதும் தன்
தன்மையை மாற்றிக்கொள்வதில்லை

காதலர்கள்
ஒவ்வொரு (கால) பருவத்திற்கும்
மாற்றிக் கொள்கிறார்கள்
தம் காதலை

விக்கியுலகம் சொன்னது…

என்னவோ போங்க...இது ஒரு வித மனநிலைன்னு சொல்றீங்க போல!

மனசாட்சி™ சொன்னது…

ஆரம்ப காதல் அழகாய் சொன்னீர்கள்

சசிகலா சொன்னது…

காதலின் வெளிப்பாடு அருமை .

பி.அமல்ராஜ் சொன்னது…

நன்றாக இருக்கிறது கவிதை.. இறுதி வசனங்கள் அருமை.

Seeni சொன்னது…

ada daa!
eppudi!

Mathi சொன்னது…

மிகவும் ரசித்தேன் .. அருமை

நம்பிக்கைபாண்டியன் சொன்னது…

இது காதல் மாதிரி
ஆனா காதல் இல்லை

விஜயன் சொன்னது…

காதல் துளிரும் போது ஒளிரும் நிகழ்வுகள்...
காதலின் காரணமாக பூப்பதால் இது காதல் தான்.
நல்லா இருக்கு அக்கா.

கீதமஞ்சரி சொன்னது…

காதலின் இன்னொரு பக்கம் அழகுக் கவிதையாய் பரிமாணம். பாராட்டுகள் ரேவா.