உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

வெள்ளி, 20 ஏப்ரல், 2012

பெண் பார்க்கும் படலமும் பெயர் தெரியாத மாப்பிள்ளையும்.....                 வணக்கம் வணக்கம் அட வணக்கமுங்க, என்னடா இந்த பொண்ணு ரொம்ப குலைவா பேசுறாளேன்னு பார்க்கிறேங்களா? எல்லாம் ஒரு மரியாதைதான்... பொம்பள புள்ளைன்னா இப்படி தான் அடக்க ஒடுக்கமா இருக்கனும்மாம், எங்க வீட்டு பக்கத்துல இருக்கிற பல்லு போன தாத்தா பாட்டி எல்லாம் சொல்லுறாங்க, அதான் நமக்கு வாராத ஒன்ன வரவைக்க முயற்சி பண்ணிட்டு இருக்கேன்,, ஹி ஹி... இந்த பொண்ணுங்களும் சரி பசங்களும் சரி படிச்சு முடிச்சு ஒரு வேலைக்கு போயிட்டாங்கன்னு வையுங்க, பக்கத்துல இருக்கிறவங்களும் சரி, சொந்தகாரங்களும் சரி நம்ம நிம்மதிய குழைக்க ஒரு நீயா நானாவே நடத்துவாங்க பாருங்க, யாரையும் விரும்புறையா? உனக்கு எப்படி பையன்வேணும், அப்படி இப்படின்னு ஏகப்பட்ட கேள்வி கேட்டு பாடா படுத்திருவாங்க..

    அப்படி சமீபத்தில நான் பட்ட அவஸ்தையை தான் சொல்லப்போறேன்... எல்லோருக்கும் சந்தோசமா இருக்குமே, அட ஆமாங்க, சமீபத்துல என்னை பொண்ணு பாக்க வந்தாங்க?!!! அவ்வ்வ்வ்வ்வ்,,,, நீ பொண்ணான்லாம் கேக்கக் கூடாது, அப்பறம்  நம்ம ஆமினாவோட சமையல் பிளாக் அஹ படிக்கச்சொல்லுவேன், நியாபகம் இருக்கட்டும்.... ஹி ஹி...ஏற்கனவே எனக்கு ஒரு அத்தை பையன் இருந்தான், அவன் அப்பாவுக்கு சமைச்சு கொடுத்து, என் கனவுல நானே மண்ண அள்ளி போட்டது எல்லாத்துக்கும் தெரியும்ன்னு நினைக்கிறேன்..அன்னைக்கு நான் சமைச்சு கொடுத்து சாப்பிட்ட மனுஷன் தான் இன்னும் மதுரை மண்ணுல கூட கால வைக்கலங்கிறது நியாபகம் இருக்கட்டும்...அவ்வ்வ்வ்... நம்ம பட்ட கஷ்டமெல்லாம் வீணா போச்சே ரேவா...


    சரிங்க, நம்ம இந்த விஷயத்துக்கு வருவோம், என் கிட்ட திட்டுவாங்கின என் சொந்தகாரவுங்க ஒருத்தர் என்னை எப்படியாவது பழிவாங்கனும்ன்னு ஒரு வரனோட ஜாதகம் கொண்டுவந்தாங்க, என்ன ரேவா நல்லது தானே பண்ணிருக்காங்கன்னு சொல்லாதிங்க, அப்பறம் நான் திட்டுவேன்... பையன் என்ன வேலை பாக்குறாங்கன்னு தெரியுமா? தெரியுமா?...... அவ்வ்வ் போலீஸ்ங்க, நமக்கெல்லாம் காக்க காக்க ஜூர்யாவ பாத்து லிட்டர் லிட்டரா ஜொள்ளுவிடுற அளவுக்குதான் தைரியம் இருக்குங்கிறத நீங்க நோட் பண்ணிக்கன்னும்.. அப்பா பையனோட ஜாதகத்தை பார்த்துட்டு ஒரு ஜர்க்கு கொடுத்தாரு பாருங்க, நமக்கு அல்லு கலண்டுடிச்சு..அவ்வ்வ்வ்.. அம்மா ரேவதி ஒனக்கு இத விட நல்ல இடம் அமையாதும்மா, நான் நாளைக்கு பையன் வீட்ல இருந்து உன்னை பார்க்க வரசொல்லிட்டேன், நீ ரெடியா இருன்னு, நாட்டாமை தீர்ப்பு சொல்லுற மாதிரி நம்ம பக்கம்கூட பாக்காம சொல்லிட்டு போயிட்டாரு...

      விடிஞ்சும் விடியாமையுமா கஜினி முகமது படையெடுத்துட்டு வருர மாதிரி ஒரே கூட்டம், என்னன்னு எங்கம்மாட்ட கேட்டா? உன்னை பாக்கவந்த கூட்டம்டின்னு சொல்லிட்டாங்க அவ்வ்வ்வ்வ்வ்...என்னடா இந்த ரேவதிக்கு வந்த சோதனைன்னு நினைச்சு, வந்தவங்க போகட்டும் அப்பறம் கச்சேரிய வச்சுக்கலாம்ன்னு அமைதியா இருந்திட்டேன்.. ஒரு அம்மா என்னனா பாட சொல்லுது, இன்னோரு அம்மா என்னனா கவிதை சொல்ல சொல்லுது, இங்கிட்டு ஒருத்தரு நொய்யு நொய்யின்னு கேள்வியை கேட்டு கொழையா கொன்னுகிட்டு இருக்காரு... எனக்கு பொறுமை சுத்தமா போயி என் அப்பாவ பார்தேன் அத தப்பா புரிச்சுட்டு ஒருத்தர் மாப்பிள்ளைய பொண்ணு தேடுதுயா கொஞ்சம் பையனையும் கண்ணுல காட்டுங்கன்னு சொன்னாரு பாக்கன்னும்... நான் கேட்டேனா நான் கேட்டேன்னா ஒய் பெருசு இரு என்னைக்காவது என்கிட்ட மாட்டுவேல அன்னைக்கு இருக்கு இப்படி என் மெயின்ட் வாய்ஸ் பேச ஆரம்பிச்சிடுச்சு...(பெருசு இந்த இடம் மரியாதை குறைவாக இருக்கிறது ஆனாலும் மன்னிக்கவும்...)

            சரி போனா போகட்டும் பையனயாவது பாத்துவைப்போம்னு காத்துகிட்டு இருந்தேன், அட ஆத்தி... அட மடப்புரத்து ஆத்தா  அவ்வ்வ்வ்வ்.. அந்த ஆளு (மரியாதை ரேவா மரியாதை) அந்த மாப்பிள்ளை பையன் வரதுக்கு முன்னாடியே அவரு மீசை என் ரூமுக்கு வந்திருச்சு... அய்யய்யோ பெருச்சாலின்னு நான் கத்துன கத்துல வந்த கூட்டமெல்லாம் அங்கிட்டு இங்கிட்டுன்னு சிதறி ஒடிடுச்சு, என்னை பயமுறுத்துன அந்த பையன எங்கன்னு தேடுனா தேடுனா ஹி ஹி அத எப்படி என் வாயால சொல்லுவேன், நான் கத்துன கத்துல பையன் அரைகிலோ மீட்டர் தாண்டி ஒடிட்டு இருக்கிறாத சொன்னாங்க, ஹி ஹி அய்யோ அய்யோ, நம்ம கத்துக்கே பயப்பிட்டானே, இவனெல்லாம் சாரி இவரெல்லாம் நம்மள கல்யாணம் பண்ணிகிட்டா அவ்வளவு தான் போலிருக்குன்னு சிரிச்சுகிட்டேன்...அப்பறம் அந்த மாப்பிள்ளை பையனும் ஒருவழியா வீட்டுக்குள்ள வந்துட்டாங்க. பொண்ணு உங்ககிட்ட ஏதோ பேசனும்ன்னு ஒரு குரல்..( நான் எப்படா கேட்டேன் இதையெல்லாம், அட மாரியாத்த அந்த புள்ளைய வீடு போறவரைக்கும் பத்திரமா பாத்துக்கோன்னு வேண்டிக்கிட்டேன்).. அந்த பையன் நான் போய் பேசுறேன் ஆனா அந்த பொண்ணு மறுபடியும் என் மீசையை பாத்து கத்தக்கூடாதுன்னு சொல்லுங்கன்னு சொல்லிகிட்டே என் ரூமுக்கு வந்தாரு...............

                அய்யய்யோ அம்மா இங்கஒடிவாயேன்னு நான் கண்ணமூடிட்டு கத்த, கண்ண தொறந்து பாத்த பையனக்காணாம், ஹி ஹி ஒரேதா ஓடிட்டாரோன்னு தப்பு கணக்கு போட்டுட்டேன், சரி இந்த தடவ எதுக்கு கத்துனேன்னு கேக்குறேங்களா? இவர்தான் டா போலீஸ்ங்கிற மாதிரி அவர் வரதுக்கு முன்னாடி மீசை வந்தது அதுக்கப்பறம் அவரு தொந்தி வந்தது அத பாத்து தான் பூனையோன்னு நெனைச்சு மீ பயந்திங்.... டூ மச்சா இருக்க, ஹி ஹி கோவத்துல கல்லவிட்டு அடிக்கனும் போல இருக்குமே, அப்படியெதுவும் பண்ணிகிட்டு உங்க கம்யூட்டர் மானிட்டர கெடுத்துக்காதீங்க, அதுக்கெல்லாம் இந்த ரேவா பொறுப்பாக மாட்டா சொல்லிபுட்டேன் :)

          சரி கதைக்கு வருவோம், அப்பறம் ஒரு வழியா பையன்கிட்ட பேசி கீசி முடிச்சுட்டு எல்லாரும் கிளம்ப ரெடியா இருந்த நேரம் என் மாமா வந்தாரு, எந்த மாமான்னு தானே கேக்குறேங்க, அட  நான் சமைச்சத சாப்பிட்டு என் ஊரு பக்கமே தலைவக்காம இருந்தாரே அவருங்க அவரு... இப்போ எதுக்கு வந்தாருன்னு தானே கேக்குறேங்க, சஸ்பென்ஸ், அப்பா மாப்பிள்ளை பையன காட்டி மாமா கிட்ட பேசிட்டு இருந்தாங்க, சரி நமக்கு ஆயுள் தண்டனை கன்பார்ம் போல்ன்னு ரத்த கண்ணீர் எம் ஆர் ராதா மாதிரி உட்காந்திருந்தேன்.. மாப்பிள்ளை வீட்டுல எல்லாரும் கிளம்புறோம்ன்னு சொன்ன நேரம், என் மாமா, இருங்க ஒன்னுக்குள்ள ஒன்னாகிட்டோம் என் மருமக கையால ஒரு காபி குடிச்சுட்டு போங்கன்னு சொன்னாரு பாக்கனும்... அங்க நிக்கிறாரு என் மாமா. யூ டு மாமான்னு மனசுக்குள்ள அவர திட்டிக்கிட்டே காபி போட்டு வந்து எல்லாருக்கும் கொடுத்தேன்... முதல்ல பையன் தான் காதல் பார்வையோடு காப்பிய எடுத்து வாயில வச்சாருங்க, அய்யய்யோன்னு ஒரு சத்தம்.. எல்லாரும் என்ன பாக்க, கடைசி நான் அமைதியா இருக்கிறத பாத்து சத்தம் வந்த இடத்த பாத்து எல்லாரும் திரும்புனா திரும்புனா? ஹி ஹி பையன் வாயில ஒரே நுரையா கிளம்புறத பாத்து அவங்க அம்மா கத்துன கத்துதாங்க அது.. அடி பாவி என் பையன கொல்ல பாத்தியே, உன் சங்காத்தமே வேணாம் தாயின்னு கும்புடு போட்டு கிளம்பிட்டாங்க...


           அப்பாடா விடுதலை விடுதலை விடுதலைன்னு மனம் ஏககாலத்துல சந்தோஷமா பாட, அப்பாவுக்கும் மாமாவுக்கும் சண்டை, ஏங்க அவங்க கல்யாணதேதி குறிக்கிற வரைக்கும் வந்தவுங்கள இப்படி பண்ணிட்டேங்கன்னு அப்பா கேக்க, அதுக்கு மாமா அதெப்படி ரேவதி என் பையனுக்குன்னு இருக்கேல, அவள வேர ஒருத்தனுக்கு கல்யாணம் பண்ண நீ எப்படி முயற்சி செய்யலாம்ன்னு கேக்க? எனக்குள்ள சுசீலாம்மா சொன்னது நீ தானா சொல் சொல் சொல் என் மாமான்னு பாட ஆரம்பிச்சுட்டாங்க. (இந்த பாட்டு சுசீலாம்மா பாடுனதான்னுலாம் கேக்கக்கூடாது மீ க்கு தெரியாது) கடைசில ரெண்டு பேரும் சமாதானமாகிட்டு ரேவாம்மா உன் மாப்பிள்ளைட்ட நீயே நடந்தத சொல்லிடு. அவன் உன் போன்னுக்கு காத்திட்டு இருப்பான்னு மாமா சொல்ல, டக்கால்ட்டி இந்த நேரம் பாத்து நான் கவுன்டர் கொடுக்கிறேனாம்!?! மாமா வந்த அந்த மாப்பிள்ளை பையன் பேரே எனக்கு தெரியாது அவர் கிட்ட எப்படி நான் சொல்லுவேன்னு, ஹி ஹி எல்லாருக்குளையும் ஒரு குட்டி போலீஸ் ஒளிச்சிட்டு இருந்தாங்கன்னு எனக்கு அப்போ தான் தெரிஞ்சது, என்ன கும்மு கும்முன்னு கும்மி எடுத்துட்டாங்க.................அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்......டிஸ்கி : வணக்கம் பாஸ் எதுக்கு இந்த டிஸ்கின்னு தெரிஞ்சிருக்குமே. ஹ ஹ அதே அதே இந்த நிகழ்வும் ஒரு கற்பனையே கற்பனையே, எனக்கு மாப்பிள்ளை பார்க்கவும் இல்லை, மாமா பையனுமில்லை... டாடா


20 கருத்துகள்:

Harini Nathan சொன்னது…

:))

இராஜராஜேஸ்வரி சொன்னது…

கற்பனையும் கல்யாணமும்...

Seeni சொன்னது…

nakai suvaiyudan!
nantraaka irunthathu!

சசிகலா சொன்னது…

கற்பனையும் அழகு கண்ணா அழகு .

ரேவா சொன்னது…

அண்ணே டவுசர் பாண்டியண்ணே எனக்கு எந்த கிரகமோ வந்துட்டு போகுது, வார நீரு உன் சொந்த முகத்துல வாரது, அத விட்டுபுட்டு ஏம்யா உனக்கு இந்த தேவை இல்லாத வேலை, எனக்கு காம நெடி நல்லா வருதுன்னா நீங்க கும்மியடிக்கிறேங்களே அதுக்கெல்லாம் என்ன பேரு..... போணே போ போய் உன் புள்ளை குட்டிய படிக்கவைய்யி.... ஹி ஹி நீ தான் மைனஸ் ஒட்டு போட்ட &^&^&ற்^& தெரியும்........

தமிழ்வாசி பிரகாஷ் சொன்னது…

ரேவா கடைசியில அந்த டிஸ்கி எதிர்பாக்கவே இல்லை...

எப்போ தான் உண்மைக்கதைன்னு போடப்போறிங்கன்னு தெரியல...

கற்பனை கதை(நம்பிட்டேன்)? நல்லாவே இருக்கு...

ஏம்பா மைனஸ் ரசிக்கத் தெரியாத ராஸ்....

மனசாட்சி™ சொன்னது…

கற்பனை என்றாலும் ரசனை - பகிர்வுக்கு நன்றி

இரவு வானம் சொன்னது…

உண்மைதான்னு நினைச்சு படிச்சிட்டு வந்தா கற்பனையா? ஏப்ரல் மாசம் பதிவு போட்டாலே ஜாக்கிரதையா இருக்கனும் போல :-)

சிட்டுக்குருவி சொன்னது…

சபா................எப்பிடி உங்களால மட்டும்....

கொடும சரவணா...

சிட்டுக்குருவி சொன்னது…

வாழ்த்துக்கள் நமக்கு எப்பவுமே ஏசினத்துக்கப்புறமா பாராட்டுரதுதான் பிடிக்கும்..

ரேவா சொன்னது…

Harini Nathan கூறியது...

:))


வருகைக்கு நன்றி தங்கா :)

ரேவா சொன்னது…

இராஜராஜேஸ்வரி கூறியது...

கற்பனையும் கல்யாணமும்...


நன்றி அக்கா உங்கள் வருகைக்கும் வரவுக்கும் :)

ரேவா சொன்னது…

Seeni கூறியது...

nakai suvaiyudan!
nantraaka irunthathu!


நன்றி சகோ :)

ரேவா சொன்னது…

சசிகலா கூறியது...

கற்பனையும் அழகு கண்ணா அழகு .

நன்றி தோழி :)

ரேவா சொன்னது…

தமிழ்வாசி பிரகாஷ் கூறியது...

ரேவா கடைசியில அந்த டிஸ்கி எதிர்பாக்கவே இல்லை...

எப்போ தான் உண்மைக்கதைன்னு போடப்போறிங்கன்னு தெரியல...

கற்பனை கதை(நம்பிட்டேன்)? நல்லாவே இருக்கு...

ஏம்பா மைனஸ் ரசிக்கத் தெரியாத ராஸ்....


உண்மைகளை மிக விரைவில் பதிவிலேற்றுகின்றேன் அண்ணா... மிக்க நன்றி அண்ணா ரசிக்க தெரிந்த இந்த அண்ணனின் மறுமொழி கண்டு மகிழ்ந்தேன்.... :)

ரேவா சொன்னது…

மனசாட்சி™ கூறியது...

கற்பனை என்றாலும் ரசனை - பகிர்வுக்கு நன்றி


மிக்க நன்றி மனசாட்சி சகோ :)

ரேவா சொன்னது…

இரவு வானம் கூறியது...

உண்மைதான்னு நினைச்சு படிச்சிட்டு வந்தா கற்பனையா? ஏப்ரல் மாசம் பதிவு போட்டாலே ஜாக்கிரதையா இருக்கனும் போல :-)


ஹ ஹ நன்றி இரவுவானம் சகோ உங்கள் வருகைக்கும் வரவுக்கும் :)

ரேவா சொன்னது…

சிட்டுக்குருவி கூறியது...

சபா................எப்பிடி உங்களால மட்டும்....

கொடும சரவணா...


ஹி ஹி

ரேவா சொன்னது…

சிட்டுக்குருவி கூறியது...

வாழ்த்துக்கள் நமக்கு எப்பவுமே ஏசினத்துக்கப்புறமா பாராட்டுரதுதான் பிடிக்கும்..


முகமோடு வரும் எந்த ஒரு ஏசையும் இன்முகத்தோடு ஏற்றுக்கொள்வேன். மிக்க நன்றி உங்கள் மறுமொழிக்கு :)

ஜீவ கரிகாலன் சொன்னது…

அடேங்கப்பா!!

உண்மையைப் போலே இருப்பது தான் சிறந்த புனைவு.. முதலில் போலீஸ் மாமாவை வருணிக்கும் இடத்தில் எல்லாம் என்னையும் யாராவது இப்படித் தானே வருணிப்பார்கள் என்று தோன்றியது..

வெரி. குட்