உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

செவ்வாய், 25 செப்டம்பர், 2012

இதுபோதுமெனக்கு

உன் முதல் பார்வை முழுதாய் தொலைத்தது என்னை.. என்னை முழுவதும் படி இல்லை முடித்ததைப்போல் நடி காதோடு காதுரசி காதல் மொழி பேசு, செல்லச்சண்டையில் சித்திரவதை செய் ஒரு முத்தத்தால் முழுமையாக்கு என் முந்தானைக்குள் மூழ்கிப்போ காதல் பேசு காமம் தாண்டு இதயம் நுழை... மெளனம் கொண்டு என் வார்த்தை உடை உனக்கானவள்...

திங்கள், 24 செப்டம்பர், 2012

இதுவும் காதலே...1

வாசித்தல் பழக்கம் நேசித்தலின் பொருட்டு வந்ததா என்று தெரியவில்லை ஆனாலும் நேசிக்கிறேன் இந்த வாசித்தலை......... # இதுவும் காதலே... குறுகுறுக்கும் பார்வைதனில் ஒளிந்திருக்கும் குறும்புதனை ரசிக்கத்தெரிந்தவனே காதலிக்கிறான்.. # இதுவும் காதலே... அடைப்புக்குள் வைக்கப்பட்ட அத்தனையையும் கடந்து என்னை...

வியாழன், 13 செப்டம்பர், 2012

அழகியல் விளையாட்டு

உள்ளதைச்சொல்வதில் தொடங்கி உளறிக்கொட்டுவதில் ஆரம்பமாகிறது உன் குறும்புத்தனங்கள்... # அழகியல் விளையாட்டு...... ஆர்பரிக்கிறாய் என்னில், ஆழம் பார்க்கிறாய் கண்ணில்... # அழகியல் விளையாட்டு.... என் கவிதைக்கான அர்த்தம் புரிந்ததாய் நடிக்கும் வேளையில் தான் ஆரம்பமாகும் நம் அத்தனை சண்டைகளும்.......

திங்கள், 10 செப்டம்பர், 2012

நண்பேன்டா ( நட்பு காலம்)

உயிர்வாழ்வதற்கான ஒற்றைத் துளி  நீர் உன் நட்பு..... * என் எல்லாமுமாய் மாறிப்போன எனக்கான சுயம் நீ * புரிதலின் நிமித்தம் பிரிதல் நட்பிலே சாத்தியம்.... * காதலில் சிக்கிக்கிடக்கும் என் பெரும்பாலான கவிதைகளுக்கான உற்சாகம் உன்னிலிருந்தே ஆரம்பம்...... * என் பிடிபடாத மெளனங்களை படிக்கத்தெரிந்த...

வியாழன், 6 செப்டம்பர், 2012

நிச்சயம் இதுவொரு பிரிவுக்கவிதை

ஒரு பிரிவைத்தாங்கி வரும் கவிதையில் இருக்கும் வலியை எத்தனை பேர் அறிந்திட முடியும்...   சில கவிதை பிறரின் அனுபவத்தில் முளைத்திடும் சில கவிதை தன் கண்ணீரின் பயனால் விளைந்திடும் அல்லது ஏதோ ஒன்றை தூக்கி எப்போதும் அசைப்போடுதலின் பொருட்டு கிடைத்திடும். எது எப்படியோ ஒரு கண்ணீரையோ ...

செவ்வாய், 4 செப்டம்பர், 2012

அடைபட்ட என் சுபாவம்

எதற்கும் பொருந்தாத என் சுபாவத்தை அலுவல் நிமித்தமாய் அரிதாரமிட்டுக்கொள்கிறேன்... இப்போதே நடந்தேறிவிடும் பிரசவமாய் பிதுங்கி நிற்கும் பேருந்தின் ஓரத்தில் நிறுத்திக்கொள்கிறேன் என்னை.. கையோடு கைதடவி கைமாறும் காசுகளில் கற்பை கட்டிவிட்டு கண்பார்க்கும் கூட்டத்தில் கண்ணகிகள் புன்னகைப்பர் இது புதிதல்லயென்பதுபோல்...