உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

அழகியல் விளையாட்டு

உள்ளதைச்சொல்வதில் தொடங்கி
உளறிக்கொட்டுவதில்
ஆரம்பமாகிறது
உன் குறும்புத்தனங்கள்...

# அழகியல் விளையாட்டு......

ஆர்பரிக்கிறாய்
என்னில்,
ஆழம் பார்க்கிறாய்
கண்ணில்...

# அழகியல் விளையாட்டு....

என் கவிதைக்கான அர்த்தம்
புரிந்ததாய் நடிக்கும் வேளையில்
தான் ஆரம்பமாகும்
நம் அத்தனை சண்டைகளும்....

# அழகியல் விளையாட்டு..........

விரும்பிக்கேட்கின்ற
அத்தனை பாடலிலும்
அடர்ந்து படர்வதென்னவோ
உன் நினைவு மட்டும் தான்......

# அழகியல் விளையாட்டு......

   

7 நேசித்த உள்ளங்கள்:

{ சிட்டுக்குருவி } at: 9/13/2012 4:43 பிற்பகல் சொன்னது…

அழகியல் விளையாட்டுக்கள் ஒவ்வொன்றும் அழகு...

{ வரலாற்று சுவடுகள் } at: 9/13/2012 5:14 பிற்பகல் சொன்னது…

இன்னொரு 'தபு சங்கர்'... குறிப்பாக 'பெண்' தபு சங்கர்! :)

{ வரலாற்று சுவடுகள் } at: 9/13/2012 5:15 பிற்பகல் சொன்னது…

//ஆயிரம் ஒப்பனையிட்டு
ஒப்புக்காய் கொஞ்சம்
ஒப்பனை சேர்த்து
பவனிவரும் என் வரிகளை
ஒரே மடக்கில் விழுங்கிவிடுகிறது
உன் புன்னகை....//

சூப்பர் ...!

{ திண்டுக்கல் தனபாலன் } at: 9/14/2012 7:58 முற்பகல் சொன்னது…

/// ஒரே மடக்கில் விழுங்கிவிடுகிறது
உன் புன்னகை... ///

மிகவும் பிடித்தது...

{ நிலவன்பன் } at: 9/15/2012 11:14 முற்பகல் சொன்னது…

//ஆர்பரிக்கிறாய்
என்னில்,
ஆழம் பார்க்கிறாய்
கண்ணில்...// செம டச்சிங்

{ Tamilraja k } at: 9/17/2012 2:11 பிற்பகல் சொன்னது…

என் கவிதைக்கான அர்த்தம்
புரிந்ததாய் நடிக்கும் வேளையில்
தான் ஆரம்பமாகும்
நம் அத்தனை சண்டைகளும்....

நினைக்கையில் மனது சேலாக கற்பனைப் பண்ணி நகைக்கிறது அந்த தருணங்களை...

அழகான தருணம் அழகாக பதிவு பண்ணி உள்ளீர்கள்

{ இரவின் புன்னகை } at: 9/21/2012 8:30 முற்பகல் சொன்னது…

அழகியல் கவிதைகள் அத்தனையும் அழகு....