உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

வியாழன், 6 செப்டம்பர், 2012

நிச்சயம் இதுவொரு பிரிவுக்கவிதை


ஒரு பிரிவைத்தாங்கி வரும்
கவிதையில்
இருக்கும் வலியை எத்தனை பேர்
அறிந்திட முடியும்...
 
சில கவிதை
பிறரின் அனுபவத்தில் முளைத்திடும்
சில கவிதை
தன் கண்ணீரின் பயனால் விளைந்திடும்
அல்லது
ஏதோ ஒன்றை தூக்கி
எப்போதும் அசைப்போடுதலின்
பொருட்டு கிடைத்திடும்.

எது எப்படியோ
ஒரு கண்ணீரையோ
ஒரு கனவையோ
தற்காலிகமாய் மறைக்கதெரிந்தவன்
இல்லை தொலைக்கத்தெரிந்தவன்
ஒரு கவிதையிலோ
இல்லை கண்ணீரிலோ
முடித்துவிட்டு போகட்டும்
முடிந்தவரை
உங்களின் அபிப்ராயம்
எந்த ஒரு சம்பிரதாயத்தையும் கொண்டுவந்துவிடாது
புன்னகைப்பதைத்தவிர...

ஒரு நீள் சோகத்தை
சலவை செய்ய தெரிந்தவன்
காதலை வெல்கிறான்...
தெரியாதவன்
வெற்றிக்கு தயார் செய்யப்படுகிறான்
அவ்வளவே...

ஒரு பிரிவைத்தாங்கிவரும்
கவிதையில்
இருக்கும் வலியை எத்தனை பேர்
அறிந்திடமுடியும்.....


12 கருத்துகள்:

இந்திரா சொன்னது…

//உங்களின் அபிப்ராயம்
எந்த ஒரு சம்பிரதாயத்தையும் கொண்டுவந்துவிடாது
புன்னகைப்பதைத்தவிர...
//

:-)

செய்தாலி சொன்னது…

அது உணர்வபவ்ர்களால் மட்டுமே முடியும் சகோ

பிரவின் குமார் சொன்னது…

பிரிவின் துயரை யதார்த்தமான எழுத்துநடையில உணர்ந்தேன்..!!

சிட்டுக்குருவி சொன்னது…

பிரிவினை பிரியமாக ஏற்கக் மறுப்பவர்களால் மட்டுமே...வலிகளை உணரமுடியும்

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

உண்மை வரிகள்...

Sasi Kala சொன்னது…

வரிகள் வலியை உணர்த்தும் சகோ.

எம்.எஸ்.ரஜினி பிரதாப் சிங் சொன்னது…

அழகான கவிதை .... நெஞ்சைத்தொடும் வரிகள்

எம்.எஸ்.ரஜினி பிரதாப் சிங் சொன்னது…

தொடர்க

தனிமரம் சொன்னது…

கவிதை சிந்தனையையும் சிலிப்பையும் சொல்லுகின்றது! வாழ்த்துக்கள்.

Seeni சொன்னது…

athu sari!

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது...

வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/09/blog-post_7.html) சென்று பார்க்கவும்... நன்றி...

sury Siva சொன்னது…வலைச்சரம்
வழியே வந்தேன்.

பிரிவா வலி ?
பிரியாதபோதுமல்லவா வலி !

ஒரு வலி மயக்கம், இன்பம்
மறு வலி கலக்கம், துன்பம்.

பரிதியும் முழுமதியும் போல
பகலும் இரவும் போல
கனவும் நனவும் போல
ஒன்றன் பின்னே இன்னொன்று
இல்லை என்றால்
இகத்திலேது முழுமை ?


ஆகவே,
வலியே ! வா !!
நின் வருகையிலே தான்
நான் கண்ட இனிய
நினைவும் வருகிறது.

சுப்பு ரத்தினம்.
http://vazhvuneri.blogspot.com