
*மாதம் பத்துதனில் அன்னையவள்
உயிர்கொண்டு,
அன்பாய் உனைசுமக்க,
பூமித்தாயாகிய நான்
என்னுள் உருப்பெறும்எல்லா உயிர்களையும் ஒரு சேர சுமந்தேன்..சுமையை சுகமாய் உணர்ந்தேன்...
*எல்லா உயிரும் தனக்கென்று ஓர் நெறிகொண்டு வாழ மனிதா நீ மட்டும் மனிதம் மறந்து மனிதன் பெயரில் உலவும் மிருகமாய்...

*அன்பே
உன்னை பார்க்காமல் இருந்திருந்தால்,
எனக்கு,
*சுற்றும் இந்த உலகம்
சுயமாய் தெரிந்திருக்கும்....
* நீளும் இரவுகள்
நிமிடத்தில் முடிந்திருக்கும்...
* நிசப்தமும் உன்
நினைவின்றி நிம்மதியாய்
கழிந்திருக்கும்....
* தனிமையின் பொழுதுகள்
தடையற்று சென்றிருக்கும்..
*...

அன்பே!!!
** காதல் கண்மூடித்தனமானதாம்,
காரணம் புரிகின்றது,
காதலும், காலமு...

**தோழனே!!!
வர்ணங்கள் நிறைந்த
வானவில்லது,
வான்மழை வரும்
நேரத்தில் வருவது போல்,
என் இதயவானத்தில் வர்ணம்
தரும் வானவில்லாய்
நீ எங்கிருந்து வந்தாய்....?
** கண்ணுக்கு புலப்படும்
மாயைகள் எல்லாம்
கானல் என்று
காலங்கள் உரைக்க,
என் கண்ணில் அகப்பட்டு
மாயங்கள் புரியும்
தூயவனே,
நீ எங்கிருந்து...

*** அன்பே!!!!* என்னை அடிக்காமல் அழவைப்பது
நீ மட்டும் தான்...
* என்னை காயப்படுத்தாமல்
வலிகள் தருவதும்
நீ மட்டும் தான்....
* என்னை வெறுக்காமல்
வேதனை படுத்துவதும்
நீ மட்டும் தான்....
*...

தோழனே!!!!
வாக்குறுதிகளை அள்ளி வீசும்
வேட்பாளனாய்
என் வாழ்க்கை களத்தில் ....நீ....
உன்னால் என் வாழ்வில்
விடியல் வரும் எனக் காத்திருக்கும்
சராசரி குடிமகளாய் ...நான்...
வாக்குறுதிகள் எல்லாம்
கானல் காலங்கள் என்று
என் கருத்துக்கு ஏன்
எட்டவில்லை தோழா....
அன்புடன்
ரேவா...

REVA KAVITHAIKAL
காதலே!!!!
உன் பாதையோடே
என் பயணம்
என்று நினைத்திருந்தேன்...
ஆனால்,
விதி என்னும்
வில்லன் என் வழி வந்து
உனக்கும் எனக்குமான
பயணத்தை முடிப்பானென்று
கனவிலும் அறியேன்...
விதி வலியது ,
நீ கொடுத்த வலி
அதனினும் கொடியது...
அன்புடன்
ரேவா...

நம்ம மதுரையை சேர்ந்த இவரை பிரபல CNN நிறுவனம் “உலகின் தலைசிறந்த 10 ஹீரோக்கள்” அப்படிங்கிற போட்டியில் இவரையும் ஒரு வேட்பாளராக நிறுத்தி இருக்கிறது.....!! தமிழர்களாகிய நமக்கு இது மிக பெரிய பெருமை. இவர் ஏதோ அரசியல் தலைவரோ, சினிமா துறையை சேர்ந்தவரோ, பெரிய தொழில் அதிபரோ...