உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

புதன், 24 நவம்பர், 2010

நீ எங்கிருந்து வந்தாய்....?**தோழனே!!!
வர்ணங்கள் நிறைந்த
வானவில்லது, 
வான்மழை வரும் 
நேரத்தில் வருவது போல்,
என் இதயவானத்தில் வர்ணம்
தரும் வானவில்லாய்
நீ எங்கிருந்து வந்தாய்....?

** கண்ணுக்கு புலப்படும்
மாயைகள் எல்லாம்
கானல் என்று 
காலங்கள் உரைக்க,
என் கண்ணில் அகப்பட்டு
மாயங்கள் புரியும்
தூயவனே,
 நீ எங்கிருந்து வந்தாய்....?** மாறுதல் என்பதும்
மீறுதல் என்பதும்
இருவேராக இருக்க,
என் மாற்றத்தின் மூலம்
மீறுதல்  கற்றுத்தந்தவனே,
நீ எங்கிருந்து வந்தாய்....?

** உடைப்பட்ட மரமாய்
நான் தனிமையில் பயனற்று
கிடக்க, துளிர்விடும் வேராய்
உன்னால், உன் நினைவுகள் என்னில்
துளிர்க்க காரணமானவனே,
 நீ எங்கிருந்து வந்தாய்....? 

**வாழ்வியல் பயணத்தில்
வருவோரும் போவோரும்
பலவாறு பலஉரு  கொண்டு
பயணிக்க, என் பயணத்தின்
உயிர் நாடியாய்,
நீ எங்கிருந்து வந்தாய்...?  

**அடைபட்ட கூண்டுக்குள்
அகப்பட்ட உயிராக,
ஒரு வட்டத்தில் சிறைபட்ட என்னை,
உன் அன்பால் விடுவித்த வித்தகனே,
நீ எங்கிருந்து வந்தாய்....?

**வாழ்வியல் பொருளுக்கு,
என் வாழ்க்கையின்  நிறைவுக்கு
காரணமான என் கணவனே,
நீ எங்கிருந்து வந்தாய்....?

அன்புடன்
ரேவா

0 கருத்துகள்: