உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

உன்னை பார்க்காமல் இருந்திருந்தால்.....


*அன்பே
உன்னை பார்க்காமல் இருந்திருந்தால்,
எனக்கு, 

*சுற்றும் இந்த உலகம்
 சுயமாய் தெரிந்திருக்கும்....

* நீளும் இரவுகள்
  நிமிடத்தில் முடிந்திருக்கும்...

* நிசப்தமும்  உன்
  நினைவின்றி நிம்மதியாய்
  கழிந்திருக்கும்....

* தனிமையின் பொழுதுகள்
  தடையற்று சென்றிருக்கும்..

* காதலின் பெயரில்  என் இதயம்
காயம் படாமல் இருந்திருக்கும்...

* உன்னால் பற்றி எரியும்
  என் காதல், உன்னை பற்றி
  யோசிக்காமலே நகர்ந்திருக்கும்...

* தாயிடம் புன்னகை சிந்தி,
  தலையணையில் கண்ணீர் சிந்தும்
  களவு வாழ்க்கை இல்லாமல் இருந்திருக்கும்..

* உன் கடிதங்கள் விலாசமின்றி
   என் வீட்டு முகவரி தேடி வரும்
  காலம் இல்லாமல் போயிருக்கும்...

* என் அரைசாண் இதயத்தில்
உன்னை பற்றிய ஆயிரம் கனவுகள்,
கவிதைகாளாய்  உருபெறாமல் மறைந்திருக்கும்..

* உன்னையே சிந்தித்து
  சிதைந்து போகும் காலம் இல்லாமல்
  இருந்திருக்கும்....

* ஒற்றை பார்வையில் களவு போகும்
   கலை அறியாமல் இருந்திருக்கும்...

* உயிர் குடிக்க என் உணர்வுகள்
குடித்த காதலனே!!!!!!
உன்னை பார்க்காமலே
இருந்திருந்தால்,
நீ நடத்திய நாடகத்தில்,
சாட்சியம் அற்று,
ஓர் அகதியாய்
தலையணையில் அடக்கலம்
புகும் என் கண்ணீரின் காரணம்
நான் அறியாமலே இருந்திருப்பேன்... 

** எதிர்பாராவிதத்தில் 
எதிர்பாரா கணத்தில் 
என்னுள் நுழைந்து,
என்னை ஆளும்
என் காதலே!!!!
உன்னால் சுயம் மறந்து போன
இவள் உன்னை பார்க்காமலே 
இருந்திருந்தால்....
 உருவம் தந்து,
உயிர் தந்த என் பெற்றோரிடம் 
நட்பு பாராட்டும்,
நண்பனிடம் ..
எனக்காய் உருகும்
என் உடன் பிறப்புகளிடம்,
என் உயர்வுக்காய் உருகும்
உறவுகளிடம்,
என எல்லோரிடமும்
நான் நானாய் இருந்திருப்பேன்....அன்புடன் 
ரேவா
10 நேசித்த உள்ளங்கள்:

{ divya } at: 12/02/2010 4:00 பிற்பகல் சொன்னது…

உன்னால் பற்றி எரியும்
என் காதல், உன்னை பற்றி
யோசிக்காமலே நகர்ந்திருக்கும்...

super reva

{ ரேவா } at: 12/02/2010 4:05 பிற்பகல் சொன்னது…

நன்றி திவ்யா தொடர்ந்து என் கவிதைக்கு
பின்னூட்டம் இட்டு என் கவிதையை உக்குவிக்கும்
உமது அன்பிற்கு நன்றி

sathish at: 12/10/2010 6:02 பிற்பகல் சொன்னது…

"தாயிடம் புன்னகை சிந்தி,
தலையணையில் கண்ணீர் சிந்தும்
களவு வாழ்க்கை இல்லாமல் இருந்திருக்கும்.".

Real words...revatheee

sathish at: 12/10/2010 6:02 பிற்பகல் சொன்னது…

"தாயிடம் புன்னகை சிந்தி,
தலையணையில் கண்ணீர் சிந்தும்
களவு வாழ்க்கை இல்லாமல் இருந்திருக்கும்.".

Real words...revatheee

sathish at: 12/10/2010 6:02 பிற்பகல் சொன்னது…

"தாயிடம் புன்னகை சிந்தி,
தலையணையில் கண்ணீர் சிந்தும்
களவு வாழ்க்கை இல்லாமல் இருந்திருக்கும்.".

Real words...revatheee

sathish at: 12/10/2010 6:02 பிற்பகல் சொன்னது…

"தாயிடம் புன்னகை சிந்தி,
தலையணையில் கண்ணீர் சிந்தும்
களவு வாழ்க்கை இல்லாமல் இருந்திருக்கும்.".

Real words...revatheee

{ ரேவா } at: 12/12/2010 9:41 முற்பகல் சொன்னது…

sathish said...

"தாயிடம் புன்னகை சிந்தி,
தலையணையில் கண்ணீர் சிந்தும்
களவு வாழ்க்கை இல்லாமல் இருந்திருக்கும்.".

Real words...revatheee

நன்றி சதீஷ்

{ எவனோ ஒருவன் } at: 2/03/2011 1:08 பிற்பகல் சொன்னது…

உண்மையான வரி(லி)கள்

{ ரேவா } at: 2/03/2011 1:29 பிற்பகல் சொன்னது…

எவனோ ஒருவன் said...

உண்மையான வரி(லி)கள்

நன்றி நண்பா வருகைக்கும் மறுமொழிக்கும்

பெயரில்லா at: 7/06/2011 7:41 முற்பகல் சொன்னது…

This is extremely significant, You’re a truly competent blog writer. I do have signed up with your personal materials and also toward needing more from your current great publish. Equally, I’ve distributed your blog post from my social support systems!