உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

திங்கள், 29 நவம்பர், 2010

தவறா மைந்தா


*மாதம் பத்துதனில் அன்னையவள்
உயிர்கொண்டு,
அன்பாய் உனைசுமக்க,
பூமித்தாயாகிய நான்
என்னுள் உருப்பெறும்
எல்லா உயிர்களையும் ஒரு சேர சுமந்தேன்..
சுமையை சுகமாய் உணர்ந்தேன்...
*எல்லா உயிரும் தனக்கென்று 
ஓர் நெறிகொண்டு வாழ 
மனிதா நீ 
மட்டும் மனிதம் மறந்து 
மனிதன் பெயரில் உலவும் 
மிருகமாய் ஏன்
மாறிப்போனாய்????
சொல்....


நீ
* மதம் என்ற பெயரால்
மனிதம் தொலைத்தாய் ....

* ஜாதியின் பெயரால்
ஜனநாயகம் அழித்தாய்...

* கல்வியின் பெயரால்,
பகல் கொள்ளை செய்தாய்...

* அரசியல் என்னும் பெருங்கடலில்,
அலைவரிசையின் பெயரால்...
சாமானியர் வாழ்வாதாரத்தை 
வதைத்தாய்...


 * காதல் என்ற பெயரில்,
கடற்க்கரை மணலில், 
கண்ணியம் மறந்து கலவி கொண்டாய்...


* விளை நிலங்களையும், 
காடுகளையும் அளித்து,  வீடுகளாக்கி 
என் கருப்பையை மலடாக்கி
உன் பணப்பையை நிறைத்தாய்...* பொது இடத்தில்
உன் சுய ஒழுக்கம் மறந்தாய்..
பாலிதீன் பைகளால் 
என் சுவாசத்தை நெரித்தாய்...

* உனக்காய் நான் பொறுத்திருந்தால்
உன் இனத்தை நீயே 
அழித்துன்னும் நிலை வரும் 
என்று உணர்ந்தே 
நானே அழித்தேன் என் பிள்ளைகளை ...

 * ஆம்
பொங்கி எழுதேன் 
ஒரு பக்கம் பூகம்பமாய்...
ஒரு பக்கம் ஆழிப்பேரலையாய்,
ஒரு பக்கம் எரிமலைசீற்றமாய்...
ஒரு பக்கம் காட்டுத்தீயாய்...
ஒரு பக்கம் நோய்களின் துணையால்
விலாசமின்றி, வித்தியாசமின்றி 
அனைவரையும் அழித்தேன்...

மைந்தா!!!
உன்னை சுமந்த போது
கூட எனக்கு வலிக்கவில்லை,
சுமையை இறக்கிய போது 
தான் வலித்தது....


நீங்கள் செய்தது 
எல்லாம் சரிஎன்றால்
நான் செய்தது 
தவறா மைந்தா...
சொல் 
தவறா மைந்தா ...?


அன்புடன்
ரேவா

14 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

WOW...
It was superb

ரேவா சொன்னது…

OpenID parasaran.com said...

WOW...
It was superb

thanks parasaran

ananth சொன்னது…

உன்னை சுமந்த போது
கூட எனக்கு வலிக்கவில்லை,
சுமையை இறக்கிய போது
தான் வலித்தது....

அருமையான வரிகள்..
அழகான கவிதை வாழ்த்துக்கள் தோழி ரேவதி

ரேவா சொன்னது…

ananth said...

உன்னை சுமந்த போது
கூட எனக்கு வலிக்கவில்லை,
சுமையை இறக்கிய போது
தான் வலித்தது....

அருமையான வரிகள்..
அழகான கவிதை வாழ்த்துக்கள் தோழி ரேவதி

நன்றி ஆனந்த்...

Jeevanand சொன்னது…

I like your way of writing. keep going

ரேவா சொன்னது…

Blogger Jeevanand said...

I like your way of writing. keep going

நன்றி Jeevanand

divya சொன்னது…

அழகான சிந்தனை ரேவா
நெஜமா நம்ம பண்ணுற தப்பல நம்ம தலைமுறையும் பாதிக்கும்
குட் ரேவா
again nice one

ரேவா சொன்னது…

நன்றி திவ்யா தொடர்ந்து என் கவிதைக்கு
பின்னூட்டம் இட்டு என் கவிதையை உக்குவிக்கும்
உமது அன்பிற்கு நன்றி

guna சொன்னது…

excellent post , keep it up.

ஜெரி ஈசானந்தன். சொன்னது…

GOOD Blogging Friend.

ரேவா சொன்னது…

ஜெரி ஈசானந்தன். said...

GOOD Blogging Friend.

நன்றி ஜெரி ஈசானந்தன் அவர்களே.

ரேவா சொன்னது…

guna said...

excellent post , keep it up.

நன்றி குணா...

எவனோ ஒருவன் சொன்னது…

Excellent!

ரேவா சொன்னது…

எவனோ ஒருவன் said...

Excellent!

நன்றி நண்பா வருகைக்கும் மறுமொழிக்கும்