உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

திங்கள், 22 நவம்பர், 2010

வலி

REVA KAVITHAIKAL
காதலே!!!!
உன் பாதையோடே
என் பயணம்
என்று நினைத்திருந்தேன்...
ஆனால்,
விதி என்னும்  
வில்லன் என் வழி வந்து
உனக்கும் எனக்குமான
பயணத்தை முடிப்பானென்று
கனவிலும் அறியேன்...
விதி வலியது ,
நீ கொடுத்த வலி
அதனினும் கொடியது...

அன்புடன்

ரேவா

2 கருத்துகள்:

எவனோ ஒருவன் சொன்னது…

இக்கவிதையை வாசிக்கும் பொழுது புதுக்கவிதை படத்தில் வரும் "வெள்ளை புறா ஒன்று" சோகப் பாடல் நினைவு வருகிறது தோழி... அப்பாடல் வரிகள் எனக்கு மிகவும் பிடிக்கும். குறிப்பாக,

"தலைவிதி எனும் வார்த்தை இன்று கவலைக்கு மருந்தானதே"

ரேவா சொன்னது…

எவனோ ஒருவன் said...

இக்கவிதையை வாசிக்கும் பொழுது புதுக்கவிதை படத்தில் வரும் "வெள்ளை புறா ஒன்று" சோகப் பாடல் நினைவு வருகிறது தோழி... அப்பாடல் வரிகள் எனக்கு மிகவும் பிடிக்கும். குறிப்பாக,

"தலைவிதி எனும் வார்த்தை இன்று கவலைக்கு மருந்தானதே"

என்னை கவர்ந்த பாடல்களில் அதுவும் ஒன்று தோழா