உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

செவ்வாய், 31 மே, 2011

உனக்கான காத்திருப்புகள்....

 வருடங்கள் பல கடந்தாலும் உனக்கான என் காத்திருப்புகள் மட்டும், கருவறைக் குழந்தையைக் காணும் சுகம் தான்...
ஆசையாளனே, .என் நெஞ்சத்து ஆசைகளையெல்லாம்  , சேர்ந்து அசை போட, என் சின்ன சின்ன குறும்புகளை உன்னிடம் செய்து அடம்பிடிக்க, தோழனாய் நீ என் கைப்பற்றும் நாளை எண்ணித்தான், உனக்கான என் காத்திருப்புகள் நீளுக்கின்றன.... 

உனக்கான காத்திருப்பில்
கவிதைப் பூக்கள்
தொடுக்கிறேன் நான்...
நீயோ,
புன்னைகயைக்கொண்டு
காதல் போர்த்தொடுக்கிறாய்...

அதிகாலை வாசலில் கோலமிட சென்றால், எனக்கு முன்னே எழுந்து என் கோலத்திற்கும் நீ காவல் காக்கும் திருநாளுக்காய் என் வாயில் படிகள் காத்துக் கிடக்கின்றன....அலுவலகம் செல்வதாய் தாயிடம் சொல்லிவிட்டு, செல்லமாய் உன் விழிகள் என்னை தேடும் நாளுக்காய் என் விழிகள் காத்திருக்கின்றன...

தொடரும் நிழலாய் நீ எனைத்தொடர, பேசாத கதை எல்லாம் பேசிமுடிக்க தோழனாய் நீ வரும் நாளுக்காய், காத்துக்கிடக்கின்றன என் நாட்கள்...அணு அணுவாய் நான் ரசித்து வரைந்த படங்களையும், உன் நினைவாய் நான் வடித்த கவிதைகளையும்,  உன்னிடம் காட்டி, உன் அன்பு முகம் சிந்தும் சிரிப்பை, மழைச் சாரலாய் உள் வாங்கி, பரவசப் படும் நாளுக்காய், காத்துக்கிடக்கின்றன என் மனது...

நீயோ சிரித்து விட்டு
செல்கிறாய்....
நானோ?.....
சிக்கிக் கொள்கிறேன்
உன் சிரிப்பில்....


மாலையில் நம் சந்திப்பில், மடி சாய்ந்து கதை பேச, காத்துக் கிடக்கின்றன, என் வார்த்தைகள்....தாமதாமாய் வருவதாய் சொல்லிவிட்டு, தாறுமாறாய் நீ அனுப்பும் குறும்செய்திக்காய், அதன் பின் உன் சமாதானம் என்னும் அன்பு வார்த்தைக்காய், ஆவலோடு காத்திருக்கிறது என் கைபேசி...

பல யுகங்கள் 
காத்திருக்கலாம்,
சுகமாய் இருக்கிறது,
உனக்கான 
இந்த காத்திருப்பு...
 

செல்லக் கோவம் நான் கொள்ள, குழந்தாய் நீ செய்யும் குறும்புக்காய், கொட்டிக் கிடக்கின்றன எந்தன் நேசங்கள், தவறு செய்யும் நேரத்தில்,முத்த மழை பொலிந்தே, திக்குமுக்காட வைக்கும், உன் காதலுக்காய், காத்து இருந்க்கின்றன என நாட்கள்... 

திமிராய் நீ பேசும் வார்த்தைகளை எல்லாம், பதிவு செய்து சமாதான காலங்களில் உன்னிடம் போட்டு காட்டி, நீ சிந்தும் வெக்க புன்னகையில், சிலிர்த்து விட , காத்துக் கிடக்கின்றன என் அசைகள்.....இப்படி எத்தனை எத்தனையோ ஆசைகளுக்காய் விழித்துக் கொண்டு இருக்கின்றன, உனக்கான என் காதல்....
கள்வா !!!!
  நீ
காணாமல் காதல்
தருகிறாய்,
கண்டுவிட்டால்,
வெட்கப் புன்னகை
தருகிறாய்...


 காலங்கள் பல கடந்தாலும், கனவுகள் பல தொலைந்தாலும், என் காதல்  இன்னும், இன்னும் அழகாய், ஆழமாய், அர்த்தமுள்ளதாய்  நீள்கின்றன.... உன் கைப்பற்றும் திருநாளுக்காய்...
என்னை நான் அறிய,
யாரும் பருகா,
அன்பை நீ பருக,
காதல் கொண்டு 
காத்திருக்கிறேன்...
விரைவில் வருவாயா?....
உந்தன் கரம் கொண்டு
எந்தன் துயர் துடைப்பாயா
எந்தன் பிரியமனவே.....
அன்புடன் 
ரேவா

21 கருத்துகள்:

தமிழ்வாசி பிரகாஷ் சொன்னது…

ரேவா... பதிவின் ஒவ்வொரு வரிகளும் அருமை. எந்த வரியை பாராட்டுவது என்றே தெரியவில்லை. சூப்பர்.

தமிழ்வாசி பிரகாஷ் சொன்னது…

அனிமேசன் படங்கள் சூப்பர் கலெக்சன்.

சௌந்தர் சொன்னது…

செம பிளிங்கஸ் ...ஒவ்வொருவரியும் சொல்லுது.... உங்க அம்மா கிட்ட சொல்லி சீக்கிரம் கல்யாணம் பண்ணி வைக்க சொல்றேன் இருங்க ....இந்த புகைப்படம் அதை விட அருமை....

பெயரில்லா சொன்னது…

உணர்ச்சி கலந்த வரிகள், நல்லாய் இருக்கு சகோதரி ..

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

உரைநடைக்கவிதையும், உணர்வுக்கவிதையும் சேர்த்து ஆக்கியிருக்கும் இந்த பதிவு தங்களது நெஞ்சத்து ஏக்கங்களை படம் பிடித்துக்காட்டுகிறது...

தங்கள் கனவு மெய்ப்பட வேண்டும் விரைவில்...

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

அழகான வடிவம் நடை வாழ்த்துக்கள்..

வேங்கை சொன்னது…

ரேவா கவிதையும், வரிகளும் ரொம்ப ரொம்ப அருமை ரேவா

காத்திருப்புகள் போதும் கல்யாண பேச்ச ஆரம்பிக்க வேண்டியது தான் இனி

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

வருடங்கள் பல கடந்தாலும் உனக்கான என் காத்திருப்புகள் மட்டும், கருவறைக் குழந்தையைக் காணும் சுகம் தான்...//

ஆரம்பமே அசத்தலா இருக்கு...!!!

Unknown சொன்னது…

உங்கள் கவிதை அருமை .இந்த வரிகளில் உள்ள அன்பை விட அதிகமான அன்பை தரக்கூடிய கணவன் அமைய இறைவனை பிராத்திகுரேன் .

jayaram சொன்னது…

உனது வார்த்தையில் உள்ள எதிர்பார்ப்புகள் ஏராளம்...தயை கூர்ந்து எதையும் தாங்கும் இதயம் கேள்...கிடைக்கும்... எதிர்பார்ப்புகள் ஏமாற்றத்தின் முதல் படி என்பதை மறவாதே...உன்னை காய படுத்த இதை சொல்ல வில்லை...அனுபவித்தால் சொல்கிறேன்....பிழை இருந்தால் மன்னிக்கவும்....

எவனோ ஒருவன் சொன்னது…

தங்களைப் போலவே தங்களின் துணைவரும் காத்துக் கொண்டு தான் இருப்பார் தோழி தங்களை துணையாய் அடைய:-)

பதிவு மிக அருமை. ஒரு பெண்ணுக்குள் இருக்கும் எதிர்பார்புகளை அழகாச் சொல்லி இருக்கிறீர்கள். மிக அழகு.

இந்த வரிகளை மிகவும் ரசித்தேன். ரொம்ப வித்தியாசமாக இருப்பது போல் என் மனதில் ஒரு உணர்வு :-)

////அதிகாலை வாசலில் கோலமிட சென்றால், எனக்கு முன்னே எழுந்து என் கோலத்திற்கும் நீ காவல் காக்கும் திருநாளுக்காய் என் வாயில் படிகள் காத்துக் கிடக்கின்றன....////

Unknown சொன்னது…

wow,

beautifull

wonder full

colorfull..

Pinna ennatha cholrathu..athan ellarum chollitangalaey..

good one.

நிரூபன் சொன்னது…

சகோ, எந்த வரியை எடுத்து வர்ணிப்பது, விமர்சிப்பது என்று புரியலைச் சகோ. எல்லாமே அசத்தலாகவும், யதார்த்தம் நிறைந்த கவி வரிகளாகவும் தொகுக்கப்பட்டுள்ளன.

கோலம் போடுவதைத் தரிசிக்கும் பாக்கியசாலி;-)))

logu.. சொன்னது…

ellame arumai..

ரேவா சொன்னது…

தமிழ்வாசி - Prakash said...

ரேவா... பதிவின் ஒவ்வொரு வரிகளும் அருமை. எந்த வரியை பாராட்டுவது என்றே தெரியவில்லை. சூப்பர்....


நன்றி நண்பா :-)

ரேவா சொன்னது…

தமிழ்வாசி - Prakash said...

அனிமேசன் படங்கள் சூப்பர் கலெக்சன்.

நன்றி Prakash

ரேவா சொன்னது…

கருத்திட்ட நெஞ்சங்கள் அனைவருக்கும் நன்றிகள் பல....

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

>>உனக்கான காத்திருப்பில்
கவிதைப் பூக்கள்
தொடுக்கிறேன் நான்...
நீயோ,
புன்னைகயைக்கொண்டு
காதல் போர்த்தொடுக்கிறாய்...

haa haa ஹா ஹா ரேவா அண்ணீயை பார்த்து அண்ணன் நக்கலா சிரிச்சுட்டாரு போல ம் ம்

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

கவிதை கலக்கலுக்கு 75 மார்க், லே அவுட் கலக்கலௌக்கு 90 மார்க்

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

>>Your comment has been saved and will be visible after blog owner approval.

ஹா ஹா பிரபல பதிவர்னா இந்த மாதிரி வெச்சுக்குவாங்க போல ம் ம்

சி.பி.செந்தில்குமார் சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.