உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

வெள்ளி, 6 ஏப்ரல், 2012

முடிக்கத்தெரியாமல் ஒரு கவிதை



ஆலங்கட்டி மழைபோல
அழுத்தமாய் வந்துவிழுந்த
உன் பார்வையில்
திக்குமுக்காடிப்போனது
மனது....

எப்படி சாத்தியமென்றே
தெரியாமலே
பல சந்திப்புகள்...
காலம் மறந்த பேச்சுக்கள்,
காரணமறியா காத்திருப்புகள்,
மின் கடத்தும் பார்வைகள்,
உதட்டோர புன்னகையென
அத்தனையிலும் பொருளில்லை
பொறுப்பான காதலை
தவர..

நீ ஸ்பரிசம் தந்தாய்
நான் பரிசளித்தேன்...
எதற்காக என்று
இன்னும் விளங்கவில்லை...

எனக்கு பிடித்தவைகள்
உனக்கு பிடிகாதாவைகள்
எது எதுவென இதுவரை
நான் கேட்டதில்லை...
நீ சொன்னதுமில்லை...

நீ பரிசாய் தந்த
ஒவ்வொன்றிலும்
நீயிருந்தாய்..

நம்மை வெல்லத்துணிந்த
காதல் நிமிடங்களில்
நாமாயிருந்தோம்...

தடையில்லா காட்டாற்றைப் போல
வலிமறந்து, வழிமறைத்த
உன் காதல் பெருவெள்ளத்தில்
திளைத்த வேளைகளில்
மொத்தமாய்
தொலைந்துபோயிருந்தேன்
உனக்குள்...

இது எங்கே முடியுமென்று
தெரியாமல் சுழன்றோம்,
முடியாமல் இருக்க
முடிந்தவரை தொடந்தோம்..

அன்றும் அப்படி தான்
காலை சூரியன் மாலைக்குள்
ஒளிந்துகொண்டிருந்த நேரத்தில்,
என் கண்ணீரின் ஈரத்தை
உன் ஈரமுத்தம்
துடைத்தது வரை நினைவிருக்கு..

இதோ முடியப்போகும்
இந்த கவிதையைப் போலத்தான்
காரணமின்றி முடிந்து
போகிறது
சில காதலும்....




28 கருத்துகள்:

logu.. சொன்னது…

அழுத்தமான வரிகள்.
நன்றி.

செய்தாலி சொன்னது…

சில சமயங்களில்
சற்றென
கொட்டித் தீர்க்கும்
மழை போல்தான்
சில காதலும்

Vijayan Durai சொன்னது…

முடிக்கத்தெரியாமல் ஒரு கவிதை என்று ஆரம்பித்து முடியப்போகும் கவிதை என்று முடித்துள்ளீர்கள்.
//இந்த கவிதையைப் போலத்தான்
காரணமின்றி முடிந்து
போகிறது
சில காதலும்....//
நல்ல கவிதை அக்கா

Vijayan Durai சொன்னது…

//
என் கண்ணீரின் ஈரத்தை
உன் ஈரமுத்தம்
துடைத்தது வரை நினைவிருக்கு..
//
அதற்கு பிறகு மறந்து போய் விட்டாதா??

நிரூபன் சொன்னது…

வணக்கம் கவிதாயினி,
நல்லா இருக்கீங்களா?

இவ் இடத்தில் கொஞ்சம் கவனம் செலுத்தலாமே..
//தடையில்லா காற்றாரைப்போல
//

காட்டாற்றைப் போல...

நிரூபன் சொன்னது…

காரணமின்றி முடிந்து போகும்,
பிரிந்து செல்லும் காதல்கள் பல..

அந்த வகையில் உங்கள் கவிதையும் காரணமின்றி முடிந்து போன காதலை நினைவுபடுத்தி முடிந்திருக்கிறது.

நல்லதோர் படைப்பு அக்கா.

SELECTED ME சொன்னது…

///முடிக்கத் தெரியாமல் ஒரு கவிதை! - அதான் முடிஞ்சு போச்சே!!!

'பரிவை' சே.குமார் சொன்னது…

கவிதை அருமை...
கண்ணீரும்... ஈர முத்தமுமாய்
சடடென முடிகிறது கவிதை...
மனசுக்குள் வெறுமையை நிரப்பி...

நம்பிக்கைபாண்டியன் சொன்னது…

\\\\எப்படி சாத்தியமென்றே
தெரியாமலே
பல சந்திப்புகள்...
காலம் மறந்த பேச்சுக்கள்,
காரணமறியா காத்திருப்புகள்,
மின் கடத்தும் பார்வைகள்,
உதட்டோர புன்னகையென
அத்தனையிலும் பொருளில்லை
பொறுப்பான காதலை
தவர../////


சிறப்பான வரிகள்,
அழுத்தமான கடைசி வரிகள்
மனம் தொடும் காதல் கவிதை!

ஆத்மா சொன்னது…

நீ பரிசாய் தந்த
ஒவ்வொன்றிலும்
நீயிருந்தாய்..//

ஆம் நமக்கு கிடைக்கும் பரிசுகளை மிக கண்னியமாகவும் கவனமாகவும் வைத்திருக்க வேண்டும்.

அருமையான வரிகள் வாழ்த்துக்கள்

Unknown சொன்னது…

logu.. கூறியது...

அழுத்தமான வரிகள்.
நன்றி.


நன்றி லோகு உங்கள் வருகைக்கும் கருத்திடலுக்கும்....

Unknown சொன்னது…

செய்தாலி கூறியது...

சில சமயங்களில்
சற்றென
கொட்டித் தீர்க்கும்
மழை போல்தான்
சில காதலும்


சரியாக சொன்னீர்கள் சகோ நன்றி உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் :)

Unknown சொன்னது…

விஜயன் கூறியது...

முடிக்கத்தெரியாமல் ஒரு கவிதை என்று ஆரம்பித்து முடியப்போகும் கவிதை என்று முடித்துள்ளீர்கள்.
//இந்த கவிதையைப் போலத்தான்
காரணமின்றி முடிந்து
போகிறது
சில காதலும்....//
நல்ல கவிதை அக்கா

மிக்க நன்றி தம்பி உங்களின் வருகைகும்,மறுமொழிக்கும்...

Unknown சொன்னது…

விஜயன் கூறியது...

//
என் கண்ணீரின் ஈரத்தை
உன் ஈரமுத்தம்
துடைத்தது வரை நினைவிருக்கு..
//
அதற்கு பிறகு மறந்து போய் விட்டாதா??

மறந்து போகல, காலம் மறைத்து விட்டது :)

Unknown சொன்னது…

நிரூபன் கூறியது...

வணக்கம் கவிதாயினி,
நல்லா இருக்கீங்களா?

இவ் இடத்தில் கொஞ்சம் கவனம் செலுத்தலாமே..
//தடையில்லா காற்றாரைப்போல
//

காட்டாற்றைப் போல...

நமக்கென்ன நிரூபன், நல்ல நட்போடு நலமாய் இருக்கிறேன், தவறு திருத்தப்பட்டது நன்றி சகோ :)

Unknown சொன்னது…

:)nice..

Unknown சொன்னது…

நிரூபன் கூறியது...

காரணமின்றி முடிந்து போகும்,
பிரிந்து செல்லும் காதல்கள் பல..

அந்த வகையில் உங்கள் கவிதையும் காரணமின்றி முடிந்து போன காதலை நினைவுபடுத்தி முடிந்திருக்கிறது.

நல்லதோர் படைப்பு அக்கா.

மிக்க நன்றி நிரூபன் உன் அழமான அன்புக்கும், அழகான மறுமொழிக்கும் :)

Unknown சொன்னது…

நிலவன்பன் கூறியது...

///முடிக்கத் தெரியாமல் ஒரு கவிதை! - அதான் முடிஞ்சு போச்சே!!!

நிலா நிலா ஓடி வா... ஹி ஹி நன்றி சகோ உங்கள் வருகைக்கும் கருத்திடலுக்கும் :)

Unknown சொன்னது…

சே. குமார் கூறியது...

கவிதை அருமை...
கண்ணீரும்... ஈர முத்தமுமாய்
சடடென முடிகிறது கவிதை...
மனசுக்குள் வெறுமையை நிரப்பி...

மிக்க நன்றி சகோ உங்களின் அன்பு மொழிக்கு, வெகு நாள் கழித்து இந்த சகோதரியின் தளம் வந்திருப்பதாய் நினைவு, தொடர்ந்து வாருங்கள், நன்றி உங்கள் அன்புக்கும், கருத்திடலுக்கும் :)

Unknown சொன்னது…

நம்பிக்கைபாண்டியன் கூறியது...

\\\\எப்படி சாத்தியமென்றே
தெரியாமலே
பல சந்திப்புகள்...
காலம் மறந்த பேச்சுக்கள்,
காரணமறியா காத்திருப்புகள்,
மின் கடத்தும் பார்வைகள்,
உதட்டோர புன்னகையென
அத்தனையிலும் பொருளில்லை
பொறுப்பான காதலை
தவர../////


சிறப்பான வரிகள்,
அழுத்தமான கடைசி வரிகள்
மனம் தொடும் காதல் கவிதை!

மிக்க நன்றி சகோ உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் :)

Unknown சொன்னது…

சிட்டுக்குருவி கூறியது...

நீ பரிசாய் தந்த
ஒவ்வொன்றிலும்
நீயிருந்தாய்..//

ஆம் நமக்கு கிடைக்கும் பரிசுகளை மிக கண்னியமாகவும் கவனமாகவும் வைத்திருக்க வேண்டும்.

அருமையான வரிகள் வாழ்த்துக்கள்

சரியாக சொன்னீர்கள் சிட்டுக்குருவி சகோ, நன்றி உங்கள் வருகைக்கு :)

Seeni சொன்னது…

nalla azhuththamaana
varikal!

சித்தாரா மகேஷ். சொன்னது…

//இதோ முடியப்போகும்
இந்த கவிதையைப் போலத்தான்
காரணமின்றி முடிந்து
போகிறது
சில காதலும்....//

காதல் முடிந்து போனாலும் கூட காதல் நினைவுகளை என்றும் அழிக்க முடியாது.அருமையான உணர்வு அக்கா.வாழ்த்துக்கள்.

கீதமஞ்சரி சொன்னது…

முடிக்கத் தெரியாத கவிதையையும் முடிந்துவைக்கத் தெரியாத காதலையும் ஒப்புமைப் படுத்திய வரிகளில் மனம் சுண்டப்பட்டது. பாராட்டுகள்.

எவனோ ஒருவன் சொன்னது…

இதோ முடியப்போகும்
இந்த கவிதையைப் போலத்தான்
காரணமின்றி முடிந்து
போகிறது
சில காதலும்...

முடிவு சுபமா இருந்திருக்கலாம் கவிதையிலாவது :-)

Unknown சொன்னது…

Seeni கூறியது...

nalla azhuththamaana
varikal!

மிக்க நன்றி சகோ :)

Unknown சொன்னது…

//இதோ முடியப்போகும்
இந்த கவிதையைப் போலத்தான்
காரணமின்றி முடிந்து
போகிறது
சில காதலும்....//

முடிகத் தெரியாத கவிதையல்ல!
இப்படி முத்தாக முடிகத் தெரிந்த கவிதை! அருமை!

சா இராமாநுசம்

Unknown சொன்னது…

//இதோ முடியப்போகும்
இந்த கவிதையைப் போலத்தான்
காரணமின்றி முடிந்து
போகிறது
சில காதலும்....//

முடிகத் தெரியாத கவிதையல்ல!
இப்படி முத்தாக முடிகத் தெரிந்த கவிதை! அருமை!

சா இராமாநுசம்