உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

சனி, 7 ஏப்ரல், 2012

மீண்டும் உன்னை கருவில் வைக்கிறேன்....



எம் சங்கமத்தில்
கிடைத்திட்ட
திரிசங்கு உலகம்
நீ..

வற்றாத எம் கனவுகளின்
வடிகாலாய் வந்தவன்
நீ..

நடைபயின்ற நேரத்தில்
எனை வளர்ந்த
அன்னை
நீ...

கிட்டாத பெயரையெல்லாம்
கிட்டித்தந்த
வள்ளல்
நீ...

புரியாத சேதியெல்லாம்
புரியத்தந்த
புலவன்
நீ..

கரைசேரா எம் கனவுகளின்
கலங்கரை விளக்கம்
நீ..

பிள்ளையாய் உனைபெற்று
பெற்றோராய் எமை
பிறப்பித்த எங்களின்
உயிரும்
நீ..

அரவணைப்பில் அன்னையாக,
அடத்தினில் பிள்ளையாக,
சண்டையில் எதிரியாக,
சமாதானத்தில் நண்பனாக,
பரிவினில் தந்தையாகவென,
எமக்கு பலவாறு தெரியும்
தசாவதார கடவுளும்
நீ..

பள்ளி சென்றாய்
’அ’ கரத்தில்
எனை நிறைத்தாய்,
உயிர் எழுத்தில்,
ஏனோ
உயிரற்ற பொருள்களை
வளர்த்தாய்...

பட்டம் பெற்றாய்,
படிப்பினை தந்தாய்..
அட்டவணைக்குள்ளே
எம் அன்பினை அடைத்தாய்..

திரைகடல் ஓடி
வசதிகள் வளர்த்தாய்,
வாய்ப்புகள் கொண்டு,
வளம்தனை நிறைத்தாய்,
வறுமையில் ஏனோ
எம் அன்பினை அடைத்தாய்..

விரும்பிச்செய்திலாய்
என்று
வெளிச்சமாய் அறிந்தாலும்
ஏனோ சமாதானம் கொள்ளாமல்
தவிக்குது மனது,
உன் அன்பு தொலைபேசிக்குள்
அடைபட்ட போது..

உனக்கென்ற ஒரு வாழ்வை
எமைக் கொண்டு அமைத்தாய்..
உன் மழலையை
என் மடியினில் நிறைத்தாய்..

பெறாத பேறுயெல்லாம்
உன்னை பெற்றாதாலே
பெற்றோம்,
இனி என்ன வேண்டுமென்று
இறைவன் எனைக்கேட்டாலும்
மீண்டும் உன்னை கருவில் வைக்கும்
வரமே வேண்டுமென்றே
கேட்டிடுவேன்..
மழலை உன் விரல் பிடித்தே
என் இறுதியை கழித்திடுவேன்...



14 கருத்துகள்:

Unknown சொன்னது…

புதிய தேடல் நீ
பூக்கும் புயல் நீ
சுட்டரிக்கும் நிலவு நீ
கவிதை நீ ...வேற என்ன சொல்ல

சூப்பர் ரேவா

நிரூபன் சொன்னது…

இனிய காலை வணக்கம்,

மீண்டும் ஓர் மகவை சிசுவாக சுமக்க எண்ணும் தாயின் உணர்வுகளை இக் கவிதை அழகுறச் சொல்லி நிற்கிறது.

ஆத்மா சொன்னது…

மிக அருமையான கவிதை...
அன்னைக்கு நாம் செய்யும் பணிவிடையோ..மிக மிக குறைவு

ஆத்மா சொன்னது…

அன்னையின் பெருமையை எடுத்துரைக்க போதாதே இந்த இனையதளம்

மிக அருமையான பதிவு

Admin சொன்னது…

கவிதை பிடித்தது..வாழ்த்துகள்..

சித்தாரா மகேஷ். சொன்னது…

அன்னையின் அன்பினை அழகாக வெளிப்படுத்தியமை அருமை அக்கா.

Seeni சொன்னது…

thaayoda ekkam!
ithu thaano....?

கீதமஞ்சரி சொன்னது…

தொலைபேசிக்குள் முடங்கிய அன்பும், வறுமைக்குள் அடங்கிய ஆதுரமும் வாசிக்கையிலேயே ஒரு நிராதரவாய் விடப்பட்ட தாய்மையின் ஏக்கத்தை வெளிப்படுத்தி நெகிழ்த்துகின்றன. இன்று பல பெற்றோரின் நிலையும் இதுதான். வெளிக்காட்டா வேதனையும் இதுதான். மனம் தொட்ட கவிதை. பாராட்டுகள் ரேவா.

கவிதை பூக்கள் பாலா சொன்னது…

theduthal , ekkam , thavippu, manaoottam ippadi pala pala mugankal kondirum ungal kavithai thasavathaarame .............

கவிதை பூக்கள் பாலா சொன்னது…

thedal, thavippu, ekkam , varuththam innum innum thasavathaaram eduththullathu ubgal kavithai arumai ..........

எவனோ ஒருவன் சொன்னது…

பெறாத பேறுயெல்லாம்
உன்னை பெற்றாதாலே
பெற்றோம்,
இனி என்ன வேண்டுமென்று
இறைவன் எனைக்கேட்டாலும்
மீண்டும் உன்னை கருவில் வைக்கும்
வரமே வேண்டுமென்றே
கேட்டிடுவேன்..
மழலை உன் விரல் பிடித்தே
என் இறுதியை கழித்திடுவேன்..

ரொம்ப அழகா இருக்கு ரேவா :-) டச் பண்ணிட்டீங்க :-)

Unknown சொன்னது…

siva sankar கூறியது...

புதிய தேடல் நீ
பூக்கும் புயல் நீ
சுட்டரிக்கும் நிலவு நீ
கவிதை நீ ...வேற என்ன சொல்ல

சூப்பர் ரேவா


மிக்க நன்றி :0

Unknown சொன்னது…

மறுமொழி இட்டு என்னை வளர்த்திடும் நேசமிகு உறவுகளுக்கு நன்றிகள் பல :)

Vijayan Durai சொன்னது…

தாய்மை தன் மகவை பாராட்டி சொல்கிறது..,குழந்தையை தாய் பெறுகிற அந்த வினாடி குழந்தை "தாய்" எனும் புதுப் பிறப்பை தன்னை பெற்றவளுக்கு வழங்குகிறது,அருமையான கவிதை அக்கா.
//
அரவணைப்பில் .......
......பலவாறு தெரியும்
தசாவதார கடவுளும்
நீ..//
சகலத்தையும் தன் குழந்தையாக தாய் காண்கிறாள்.ஆனால் இந்தக்கால(சில) பிள்ளைகள் கடைசி காலத்தில் தாயை ஒதுக்குவது வேதனையான விசயம்.