உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

செவ்வாய், 4 செப்டம்பர், 2012

அடைபட்ட என் சுபாவம்



எதற்கும் பொருந்தாத
என் சுபாவத்தை
அலுவல் நிமித்தமாய்
அரிதாரமிட்டுக்கொள்கிறேன்...

இப்போதே நடந்தேறிவிடும்
பிரசவமாய்
பிதுங்கி நிற்கும் பேருந்தின்
ஓரத்தில் நிறுத்திக்கொள்கிறேன்
என்னை..

கையோடு கைதடவி
கைமாறும் காசுகளில்
கற்பை கட்டிவிட்டு
கண்பார்க்கும் கூட்டத்தில்
கண்ணகிகள் புன்னகைப்பர்
இது புதிதல்லயென்பதுபோல்

ஆண்களோடு சிரித்துபேசி
ஆடைகளில் கவனம் வைத்து
ஆயிரம் கண்கள் நடுவிலும்
அடக்கம் பேணி
ஆரம்பமாகும் அலுவலிலும்
அடுக்கடுக்காய் கட்டப்படும்
ஆயிரம் வேலி,

அத்தனையும் உடைந்தெறிந்து
அடுத்தபணி ஆரம்பிக்கையில்
எப்போது இரையாகுமென
தூண்டிலில் வார்த்தை தைத்து
வசமாய் வீசப்படும்
காமத்தின் அம்பை
யாருக்கும் தெரியாமல்
கடந்தாகவேண்டிய கட்டாயத்தில்

ஒவ்வொரு நாளும்
நீண்டு முடிகிறது
என் அலுவலக வேலை..

பணமென்ற ஒன்றிற்காய்
பழக்கப்பட்ட என் பழக்கங்களை
பூட்டிதைக்கிறேன்,
வீடு திரும்பையில்
பீறிட்டு அழும்
என் பழக்கத்தின் வலியை
யாரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை...

எதற்கும் பொருந்தாத
என் சுபாவத்தை
அலுவல் நிமித்தமாய்
அரிதாரமிட்டுக்கொள்கிறேன்..

8 கருத்துகள்:

MARI The Great சொன்னது…

அருமையான கவிதை சகோ!

வெற்றிவேல் சொன்னது…

இந்தக் கொடுமை எல்லாருக்கும் நடக்கரதுதான் ரேவா...
வருத்தம் தான்... முதல் ஆளாய் உங்கள் கவிதையை படித்ததில் மிக்க மகிழ்ச்சி...
தொடருங்கள்

பூங்குழலி சொன்னது…

எதற்கும் பொருந்தாத
என் சுபாவத்தை
அலுவல் நிமித்தமாய்
அரிதாரமிட்டுக்கொள்கிறேன்..


மிக மிக உணர்வு பூர்வமாகவும் நிதர்சனமாகவும் எழுதப்பட்ட கவிதை .வாழ்த்துகள்

Seeni சொன்னது…

sako!

velaikkku sellum penkalin-
nilaiyai vethanaiyudan-
sollideenga...

முத்தரசு சொன்னது…

அடைக்கப்பட்ட சுபாவம்

அனைவருக்கும் அன்பு  சொன்னது…

பெண்ணின் வலி.........
படிக்கும் போதே
துளிர் விடும் கண்ணீரை கூட
தூசி விழுந்ததாக தான் துடைக்க வேண்டு இருக்கிறது

அருமை ரேவா ......

இந்திரா சொன்னது…

Excellent ரேவா..
அலுவலகம் செல்லும் பெண் என்ற முறையில் எனக்கும் இந்த அனுபவம் உண்டு.
சிறப்பானதொரு பதிவு.
பாராட்டுக்கள்.

ஆத்மா சொன்னது…

வீடு திரும்பையில்
பீறிட்டு அழும்
என் பழக்கத்தின் வலியை
யாரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை...
////////////////////////////////

வலிக்கும் வரிகள்...