உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

புதன், 25 ஆகஸ்ட், 2010

நீ தானே!!!


** உருகும் மெழுகாய்
" நீ " இருந்தாலும்
ஒளிரும் இந்த உலக
வாழ்க்கை எனக்கு
நீ தந்தது தானே!!!

** தனக்குள்ளே உயிர் சுமந்து
கருவான உரு, உயிராகும் வரை
உருகுவது உன் உயிர் தானே!!!!!

** பெற்ற நாள் முதல் கண்ணுறக்கம்
தான் மறந்து, கருத்தாய்
உயிர் வளர்க்கும் உன்னத மகள்
நீ தானே!!!!

** ஆண்டியாகும் பித்தன் எல்லாம்
ஆசை கொண்டு அலையும்
உலகில், உன்னுள் வளர்ந்த
உயிர்க்காய் ஆசை அனைத்தும்
துறந்து பிறர்க்காய் வாழ்வதும்
நீ தானே!!!

** வெற்றியில் களித்தாலும்,
தோல்வியில் துவண்டாலும்,
அன்பால் அரவணைக்கும்
குணம் கொண்டவள்
நீ தானே!!!

** சுற்றும் உலகம் சற்று
நின்று போனாலும் போகும்...
கொண்ட உறுதியில் உயிரை
வைத்து என் உயிர் வளர்க்கும்
என் பாசத்தலைமகள்
நீ தானே!!!
** உருகும் மெழுகாய்
" நீ " இருந்தாலும்
ஒளிரும் இந்த உலக
வாழ்க்கை எனக்கு
நீ தந்தது தானே!!!
என் தாயே!!!!!


அன்புடன்
ரேவா

(இந்த கவிதை என் இணைய நண்பனின்
இணையில்லா இனிய தோழி "ஸ்ரீ" க்காய் மற்றும் என் அன்னைக்காய்)

2 கருத்துகள்:

எவனோ ஒருவன் சொன்னது…

நல்லா இருக்குங்க. அன்னையை எவ்வளவு நேசிக்கிறீர்கள் என்பதை உங்கள் கவிதைகள் எடுத்துரைக்கின்றன.

ரேவா சொன்னது…

எவனோ ஒருவன் said...

நல்லா இருக்குங்க. அன்னையை எவ்வளவு நேசிக்கிறீர்கள் என்பதை உங்கள் கவிதைகள் எடுத்துரைக்கின்றன.


முதல் காதல் இங்க இருந்து தானே நண்பா ஆரம்பம் ஆகுது...
வாழ்த்துக்கு நன்றி நண்பா