உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

யாதுமாகி நின்றாய்!!!!~.. ~ "அகரம் தொடங்கி
சிகரம் அடைய துடிக்கும்
எல்லோர் வாழ்விலும்,
ஆசை துறந்து, கர்வம் மறந்து
சுயம் மறைத்து, நாம் வளர
வேராய் நம்மை தாங்கி பிடிக்கும்
ஓர் உன்னத உயிராய்
யாதுமாய் நிறைந்திருக்கும் தந்தைக்காய்
இந்த கவிதை....

~~கருவான உரு, உயிராகும்
வரை கண்ணுறக்கம் தான்
மறந்து தாய்க்கு சமமாய்
பிரசவவலி கண்டு நம் எல்லார்
வாழ்விலும் விடியல் கொடுத்து
யாதுமாய் நீக்கமற நிறைந்திருக்கும்
நம் வாழ்வியல் ஆசானுக்காய்
இந்த கவிதை...

~~தந்தையே,
பூமி வந்து உன்
பூமுகம் கண்ட முதல் நாள்
உன் (ஆண்மையின்) முழு நாள்....

~~ தவழும் வயதிலும், தடை மீறி
உன் விரல் பிடித்து நடை பயின்ற
நாட்களிலும்,
மழலையின் மடியினில்
கிடந்த பொழுதுகளிலும்,,
நீயே என் தலைவனாய் நின்றாய்...

~~ நீ காணாத உலகம்,
நான் காணவேண்டி,
என் அடையாளம் தனை
நான் பெற, பள்ளி சென்ற அந்த
நாட்களில் எல்லாம் பாடச்சுமையை விட- உன்
பாசச்சுமையே எனக்கு உயர வேண்டும்
என்ற அழுத்தத்தை தந்தது...

~~பெண்ணியம் பேசும் பலர்
இந்த பூமியில் இருந்தாலும்,
பெண்ணை பிறந்த காரணத்தால்
தடை படும் பல உரிமை நான் பெற
காரணமாய் இருந்து
பெண்ணியம் போற்றிய
தந்தையே!!!!

~~ பெண்மையின் முதல் படியை
அடைந்த நாட்களிலிருந்து,
உன் அன்பு மடியில் இருந்து
விலகி நின்ற வேலைகள்.,
உன் தோள் மீது அம்பாரி
போகும் பொழுதுகள்.,
உன் மார்பில் தலை வைத்து
தூங்கும் இரவுகள்.,
என் எல்லாவற்றிற்கும் என்
தாய் தடை போட்டாலும்,
உண்மையை பக்குவமாய் விளக்கி
உனக்குமெனக்குமென இடையே
இடைவேளிதனை இல்லாமல்
என்னை வளர்த்த என் தந்தையே !!!

~~கல்லூரி காலங்களில் பரிசுகள்
பல நான் பெற வெற்றியின் களிப்பு
என்னை விட உனக்கே அதிகம்..
நான் வென்ற பரிசுகளை கொண்டு
ஊருக்குள் ஊர்கோலம் நடத்தும்
என் தந்தையே!!!

~~ உன்னைப்போல் தந்தையே
வேண்டுமென என் தோழிகள்
என்னிடம் சொல்ல, அதை
என் தோழனாய் நான் உன்னிடம் சொல்ல
அனுமதித்த என் தந்தையே!!!

~~ என் வாழ்வில் வளர்பிறை
தந்த நாயகனே!
ஆசை, எதிர்பார்ப்பு ஏமாற்றம்
என்னும் தேய்பிறை எனை
நெருங்காமல், என் விருப்பம்
தனை முழுதாய் செய்து முடிக்கும்
என் தந்தையே!!

~~விடியல் வரும் வேளையிலும்
விதி என் வழி வந்து
விளையாடிய வேளையிலும்
என்னை விட்டு நீங்க
என்னிரண்டாம் நிழலே!!

~`~தந்தையே
* ன்பின் பிறப்பிடமாய்
என் வாழ்வினில் நின்றாய்...
*ற்றலின் ஆசானாய்
என் அறிவினில் நின்றாய்...
* யல்பின் இருப்பிடமாய்
என் இதயத்தில் நின்றாய்...
* கையின் விளக்கமாய்
என் இயல்பினில் நின்றாய்...
* ண்மையின் உருவமாய்
என் உயிரினில் நின்றாய்..
* க்கத்தின் உத்வேகனாய்
என் உள்ளத்தில் நின்றாய்...
* ளிமையின் திருவுருவாய்
என் வாழ்வினில் நின்றாய்...
* ற்றத்தின் படிகளாய்
எனக்கு வளர்பிறை தந்தாய்...
* ஐயத்தின் போது காப்பாளானாய்
என்னருகில் நின்றாய்...
* ழுக்கத்தின் பிறப்பிடமாய்
எனக்கு படிப்பினை தந்தாய்...
*ய்வின்றி உழைக்கும்
யுக்தியால் உயர்ந்து நின்றாய்
* ஒளவை தமிழாய்
வாழ்வில் அர்த்தங்கள் தந்தாய்...
* எகின் உறுதியாய்
என் வாழ்வில் யாதுமாய் நின்றாய்...

என் தந்தையே,
என் வாழ்வில் நீக்கமற
நிறைந்திருக்கும்
என் நீஜ நாயகனே.,
உன்னோடு இனி நகரும் நாட்களிலும்
என் கணவன் கைப்பற்றி
உன் விழி பார்த்து நான்
நடக்கும் நாட்களிலும் என் வாழ்வியல்
எல்லா நிகழ்வுகளிலும்
யாதுமாய் நீயே நின்றாய்...

~.. ~ "அகரம் தொடங்கி
சிகரம் அடைய துடிக்கும்
எல்லோர் வாழ்விலும்,
ஆசை துறந்து, கர்வம் மறந்து
சுயம் மறைத்து, நாம் வளர
வேராய் நம்மை தாங்கி பிடிக்கும்
ஓர் உன்னத உயிராய்
யாதுமாய் இருக்கும் தந்தைக்காய்
இந்த கவிதை....

அன்புடன்
அன்பு மகள்
..ரேவா..

7 நேசித்த உள்ளங்கள்:

{ Jayanthy } at: 8/29/2010 8:55 பிற்பகல் சொன்னது…

Really super. My reallife hero is my dad. I just thank him at this moment. SUPER

{ Arun.K.Natraj } at: 8/29/2010 9:49 பிற்பகல் சொன்னது…

உன்னைப்போல் தந்தையே
வேண்டுமென என் தோழிகள்
என்னிடம் சொல்ல, அதை
என் தோழனாய் நான் உன்னிடம் சொல்ல
அனுமதித்த என் தந்தையே!!!///

arumai thozhsss...

annai avvaiyin aaththichoodiyai vida umadhu aaththeechoodikku porul adhigam.. madhippum adhigam...

keep going... ekkanamum un mudhal rasiganai irukka virumbum

un thozhan...

{ Lancelot } at: 8/30/2010 4:42 முற்பகல் சொன்னது…

another master piece...its so true for every girl her dad is the first crush and for every boy his mom is the first crush...I hope u have read my poem on my mom...in the same lines...u seem to be improving with every poem these days- I need to start competing with u soon ;)hope u write 100 poems soon and publish them as a book...good luck...and watch out for my blog from Thursday :)

{ ரேவா } at: 8/30/2010 12:57 பிற்பகல் சொன்னது…

நன்றி ஜெயந்தி

{ ரேவா } at: 8/30/2010 12:59 பிற்பகல் சொன்னது…

என் நட்பின் ரசிகனுக்கு நன்றி
நன்றி அருண்

{ ரேவா } at: 8/30/2010 1:03 பிற்பகல் சொன்னது…

நன்றி அருண்(லண்டன்).
நட்பின் அன்பு போட்டிக்கு
நானும் தயார். உமது ப்ளாக்கும்
அருமை....

{ divya } at: 9/06/2010 6:39 பிற்பகல் சொன்னது…

super line..... this time i miss my dad... good wrk reva