உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

காதல் செய்தால் பாவம்


** காதலால்,
உயிர் வலிக்கும்,
உண்மையும் வலிக்கும்,
உருக்கமாய் அவனோ, அவளோ
இருக்கமாய் அவர்களுக்குள்
இருந்தாலும், காலம் மறந்து,
காட்சிகள் மறந்து,
"நம் முகவரி நாமே தொலைக்கும் "
இந்த காதல் செய்தால் பாவம்....


உயிருக்குள் உயிர் கொடுத்து,
உதிரத்தில் உன்னை நனைத்து
உன் உயர்வுக்காய், தன்னை
உருக்கும் தாயை
மறந்தோ (மறுத்தோ)
நாம் காதல் செய்தால் பாவம்....


விந்தில் உன்னை வைத்து ,
விதையாய் உன்னில்
அன்பு வைத்து, விருச்சமாய்
வரும் உன் வளர்ச்சியின்
வேராய் இருக்கும்
தந்தையை மறந்தோ (மறுத்தோ)
நாம் காதல் செய்தால் பாவம்....
முகவரியும் தெரியாது,
உன் முகவுரையும் அறியாது,
உயிர் வழி பாசம் துளியும்
கிடையாது..ஆனால்,
உனக்கொன்றென்றால் அவன்
உயிர் வலிக்கும், உன் துக்கம்
அவன் தொண்டையடைக்கும்,
இப்படிப்பட்ட உண்மை
நட்பை மறந்தோ (மறுத்தோ)
நாம் காதல் செய்தால் பாவம்....

** காதலால்,

@ புரியாத வலியோ
தொண்டை அடைக்கும்...

@ அழுகையின் அவலம்
தெரிந்தும் அழுவோம்...

@ தாயிடம் சிரிப்போம்,
தனிமையில் அழுவோம்..

@ கூட்டமாய் இருந்தாலும்
கூட்டுக்குள் உயிராய் அவனோ,
அவளோ கூடவே இருப்பதாய் நினைப்போம்

@ மௌனமாய் இருந்தாலும்
மனதிற்குள்ளே பேசிக்கொள்வோம்...

@ நித்திரையில் நித்தமும் ஒரு
யுத்தமும் கொள்வோம்...

இப்படி காரணமின்றி,
காரணம் தேடி,, கனவுடனே
காலம் கழித்து, நம்
எதிர்காலம் புதைத்து,
உண்மை மறுத்து,
உயிரை அறுக்கும்
இந்த காதல் செய்தால் பாவம்....

ஆம்....
காதலால்,
உயிர் வலிக்கும்,
உண்மையும் வலிக்கும்,
உருக்கமாய் அவனோ, அவளோ
இருக்கமாய் அவர்களுக்குள்
இருந்தாலும், காலம் மறந்து,
காட்சிகள் மறந்து,
"நம் முகவரி நாமே தொலைக்கும் "
இந்த காதல் செய்தால் பாவம்....

அன்புடன்
ரேவா

4 நேசித்த உள்ளங்கள்:

{ Lancelot } at: 8/28/2010 9:12 பிற்பகல் சொன்னது…

mind blowing few years back I wrote a poem on the same title... it is no where as good as this...will try and post it soon :)

{ ரேவா } at: 8/29/2010 11:47 முற்பகல் சொன்னது…

சீக்கிரம் அந்த கவிதையை உங்க ப்ளாக் ல போடுங்க nanba
நானும் ஆவலோடு இருக்கிறேன் உங்கள் கவிதையை காண

{ எவனோ ஒருவன் } at: 2/01/2011 2:41 பிற்பகல் சொன்னது…

காதல் மேல் அப்படி என்ன கோபம் தோழி தங்களுக்கு?

{ ரேவா } at: 2/01/2011 4:25 பிற்பகல் சொன்னது…

எவனோ ஒருவன் said...

காதல் மேல் அப்படி என்ன கோபம் தோழி தங்களுக்கு?


சில நேரங்களில் காதலும் ஒரு வித மரண வேதனை தானே... அந்த கோவம் தான்...வருகைக்கு நன்றி நண்பா