உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

வெள்ளி, 3 டிசம்பர், 2010

அன்பென்பது யாதெனில்


* அண்டம் என்னும்
அகண்ட வெளியில்
அனுமானங்களை சில நேரங்களில்
கடந்து விடுகிறது இந்த அன்பு...

* படிப்பினைக்கும் பல நேரங்களில் 
பாடம் கற்பிக்கின்றது  இந்த அன்பு...

* தோற்றவனையும் வெற்றிபெற 
வைக்கிறது இந்த அன்பு...

*  இருக்கின்ற ஒன்றை இல்லாமல் 
ஆக்கவும், இல்லாத ஒன்றை
உருவாக்கவும் பிறந்தது  தான் இந்த அன்பு...

* அழுகின்ற கண்ணில் விழுகின்ற
நீரை துடைத்து விடும் கைகள் தான் இந்த அன்பு...

* மாற்றம் என்பது
மாறாதிருக்க மனிதனின் மனிதம்
காக்க உதவுவது தான் இந்த அன்பு...

* அடையாளமற்று அழிகின்ற
உயிரை ஆட்சிசெய்வது தான்  அன்பு...

* இருளின் வழியில் வாழ்கின்ற
உயிரை உனக்காய் நான் இருக்கிறேன்
என்று ஒன்றை சொல்லில் உயிர்பிக்க
செய்யும்  கனிவு தான் இந்த அன்பு...

* முகவரிகள் தெரியாமால்.
முன்னுரை எழுதும் பல உறவிற்கு
ஆணிவேர் தான் இந்த அன்பு...

* அழுகின்ற குழந்தைக்கு
தருகின்ற இனிப்பு தான் இந்த அன்பு...

* தொலைதூர உறவையும்,
தொடுகின்ற உணர்வு தான் இந்த அன்பு...

* கோபத்தில் புதையுண்ட மனதையும்,
தனிமையின் தணலில்  தக்கிக்கும் மனதையும்,
அமைதி படுத்துவது தான் இந்த அன்பு....


* வரமேன்பது சில நேரங்களில்
சாபமாய் போக, வருகின்ற பிறர்
துயர்க்காய் வருந்தி துடிப்பது
தான் இந்த அன்பு...

* சொல்ல முடியா வேலைகளிலும்
சொல்லி அழும் காலங்களிலும்
அன்னை மடியாய்
ஆறுதல் தருவது தான் இந்த  அன்பு...

* காதல் என்னும் மாயையில்
மடிந்து போகும் மனதிற்கு
நட்பின் ஆறுதல் மருந்தாய்
இருப்பது தான் இந்த அன்பு...

* வலியவனும், எளியவனும்,
அவனவனாய் வாழ்வதற்கு காரணமாய் விளங்கும்
ஆதாரப் பொருள் தான்  இந்த அன்பு...

* வாழ்கை வருகின்ற வரைக்கும்...
முடிகின்றவரைக்கும் நம்மை
பலவாறு வடிவமைக்கும் கலை தான் இந்த அன்பு...

* அன்பு!!!!
அன்பு  இதை உச்சரித்து உணர்ந்தவன்
மனிதனாவான்...
அன்பு இதை எச்சரித்து அறிந்தவன்  
ஞாநியாவான்.....

 * இறுதியாய்,
மனிதனை மனிதனாக்குவதும்
மனிதனை மனத்தால் இறைவனாக்குவதும்
இந்த அன்பு...

* அண்டம் என்னும்
அகண்ட வெளியில்
அனுமானங்களை சில நேரங்களில்
கடந்து விடுகிறது அன்பு...

அன்புடன் 
ரேவா6 கருத்துகள்:

நா.மணிவண்ணன் சொன்னது…

நல்ல அன்பான கவிதை

ரேவா சொன்னது…

நா.மணிவண்ணன் said...

நல்ல அன்பான கவிதை

அன்பான கருத்துக்கு நன்றி நா.மணிவண்ணன் அவர்களே........

பாரத்... பாரதி... சொன்னது…

நல்ல கவிதை. அன்பு மழை வலுக்கட்டும்..

பாரத்... பாரதி... சொன்னது…

please remove word verification.

படிப்பவர்கள் பின்னூட்டம் இடாமல் செல்ல வாய்ப்புள்ளது,,.

ரேவா சொன்னது…

பாரத்... பாரதி... said...

நல்ல கவிதை. அன்பு மழை வலுக்கட்டும்..

நன்றி பாரத்... பாரதி.அவர்களே........

எவனோ ஒருவன் சொன்னது…

////* காதல் என்னும் மாயையில்
மடிந்து போகும் மனதிற்கு
நட்பின் ஆறுதல் மருந்தாய்
இருப்பது தான் இந்த அன்பு...////

காதல் == அன்பு :-)