உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

வெள்ளி, 17 டிசம்பர், 2010

இனியும் வரப்போவதில்லை....னியவனே!!!!!
உன் முதல் பார்வை என்னுள்
காதலை விதைக்க.,
காத்திருந்தவன் போல் நீயும் 
உன் காதலைச் சொல்ல.,
தொடக்கம் எங்கென்று  தெரியாமல்
தொடங்கிய நம் காதல் காலம்
இனியும் வரப்போவதில்லை...

* ன் கண்ணில் விழுந்து,
என் கருத்தை கவர்ந்த 
என் அன்பு காதலி நீ  தான்  என்று
சொல்லிச் சொல்லி என் கவனம்
ஈர்த்த என் காதலனே!!!!!


* பொய்மைக்கும் மெய்மைக்கும்
இடைப்பற்ற ஒன்றை உருவாக்கி
என் நம்பிக்கைக்கு உரித்தாகி
என் உயிர் கலந்த என் காதல் நீ
தான் என்று  ஊருக்கு
உரக்க சொன்ன காலம்
இனியும் வரப் போவதிலை.....

*ன் பாதி நீ என்றும்
என் பதி நீ என்றும் கர்வமாய்
உன் கரம் பற்றி நான்
வலம் வந்த நாட்கள்
இனியும் வரப்போவதில்லை....

*றக்கம் மறந்து,
உண்மை மறந்து
உன்னையே என் உயிராக
உருகி உருகி நான் உயிர் தவித்த பொழுதுகள்
இனியும் வரப்போவதில்லை...

* சிறு சிறு தவறுகளாலும், அர்த்தமற்ற
உன் சந்தேகங்களாலும், சரிவை நோக்கிய
நம் காதலை சமாதானத்தின் முலம்
சாந்தி படுத்திய காலம்
இனியும் வரப்போவதில்லை... 

* டலின் பின் நீ அர்த்தப்படுத்தும்
நியாங்கள் தவறென்று தெரிந்தாலும்
உன் புன்னைகைக்காய் தவறை மறந்து
புலம் பெயரும் அகதியாய்
நான் என்னை மாற்றிய வேலைகள்
இனியும் வரப்போவதில்லை....

* ங்கோ தொடங்கிய நம்
காதல் அர்த்தமற்ற காரணங்களால்  
காயம் காண, எனை விட்டு செல்
என்று சொல்லியும் விலகாது நிற்கும்  
என் காதலை நீ உணர்ந்து
கொள்ளும் காலம்
இனியும் வரப்போவதில்லை....

*ம் ஏதோதோ காரணங்களுக்காய்
காதல் கொள்ளும் காலத்தில்
உன்னையே உயிராய் நினைத்து
உன் உணர்வுகளுக்காய் என் உணர்வை
புதைத்து நான் வாழ்ந்த பொய்
காலம் இனியும்
திரும்பி வரப்போவதில்லை....

* காதலுக்கு அன்பின் பெயரால்
பலர் பல அர்த்தம் புகட்ட
என்னோடான உன் காதலுக்கு
என்னை நிராகரித்தத்தின் வழியே
புது அர்த்தம் தந்த
இனியவனே....
உன்னோட இனிக்கும் அந்த
காலங்கள்  
இனியும் வரப்போவதில்லை....

 னியவனே!!!!!
உன் முதல் பார்வை என்னுள்
காதலை விதைக்க.,
காத்திருந்தவன் போல் நீயும் 
உன் காதலைச் சொல்ல.,
தொடக்கம் எங்கென்று  தெரியாமல்
தொடங்கிய நம் காதல் காலம்
இனியும் வரப்போவதில்லை...

அன்புடன்
ரேவா

10 கருத்துகள்:

பால் [Paul] சொன்னது…

கவிதை நல்லா இருக்குங்க..!!

ரேவா சொன்னது…

பால் [Paul] said...

கவிதை நல்லா இருக்குங்க..!!

நன்றி பால் [Paul] அவர்களே

அரசன் சொன்னது…

கவிதை நல்லா இருக்குங்க

!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ சொன்னது…

//////ஊடலின் பின் நீ அர்த்தப்படுத்தும்
நியாங்கள் தவறென்று தெரிந்தாலும்
உன் புன்னைகைக்காய் தவறை மறந்து
புலம் பெயரும் அகதியாய்
நான் என்னை மாற்றிய வேலைகள்
இனியும் வரப்போவதில்லை....
/////////

அழகான உணர்வுகள் வார்த்தைகளில் . வார்த்தை அலங்காரம் ரசிக்க வைக்கிறது . கவிதை அருமை . பகிர்வுக்கு நன்றி

ரேவா சொன்னது…

அரசன் said...

கவிதை நல்லா இருக்குங்க

நன்றி அரசன் அவர்களே.....

ரேவா சொன்னது…

!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

//////ஊடலின் பின் நீ அர்த்தப்படுத்தும் நியாங்கள் தவறென்று தெரிந்தாலும்
உன் புன்னைகைக்காய் தவறை மறந்து
புலம் பெயரும் அகதியாய்
நான் என்னை மாற்றிய வேலைகள்
இனியும் வரப்போவதில்லை....
/////////

அழகான உணர்வுகள் வார்த்தைகளில் வார்த்தை அலங்காரம் ரசிக்க வைக்கிறது . கவிதை அருமை . பகிர்வுக்கு நன்றி
............
என் கவிதையின் உணர்வுகளை புரிந்து கொண்டு, உங்கள் உணர்வுகளை என்னிடம்
பகிர்ந்தமைக்கு நன்றி பனித்துளி சங்கர் அவர்களே...!!!!!

மோனிஷா சொன்னது…

ஒரு காதல் வாழ்க்கையையே அப்படியே உங்கள் வரிகளில் உணர்கிறேன்.எங்கேயே ஒத்துபோகிற மாதிரி ஒரு உணர்வு.

ரேவா சொன்னது…

மோனிஷா said...

ஒரு காதல் வாழ்க்கையையே அப்படியே உங்கள் வரிகளில் உணர்கிறேன்.எங்கேயே ஒத்துபோகிற மாதிரி ஒரு உணர்வு.

நன்றி மோனிஷா.... எங்கேயோ ஒத்துபோகிற மாதிரி உணர்வா? என்ன சொல்றீங்க.....உங்கள் கருத்துக்களை பகிர்ந்தமைக்கு நன்றி

எவனோ ஒருவன் சொன்னது…

////காலம் இனியும்
திரும்பி வரப்போவதில்லை////

கடந்தவை, கடந்தவை தானே தோழி :-(
மனதிற்கு வலியைத் தரும் வரிகள்....

the critics சொன்னது…

சூப்பர் ....காதலின் முதல் பருவங்கள என்றும் அருமை