உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

சனி, 4 டிசம்பர், 2010

உயிரற்ற என் கவிதை!!!!

என்னுள் கருவாகி
என் எழுத்தின் உயிராகி
என்னுள் கலந்த என் இதயமே
உனக்காய் உருவாக்கப்பட்ட
என் கவிதை உன் பார்வைக்கு 
வராமலே சிதைக்கு இரையாய்
போனதால் இதுவும் 
 ஓர் உயிரற்ற கவியே!!!.
******
வெகுநாட்களாய் எனக்கோர் ஆசை 
என்னை எழுதவைத்து எனக்குள் 
என்னை ஆட்டிவைக்கும் என்னவன் 
என் கவியை படிக்கவேண்டும்....
 அது வரை 
இதுவும்  ஓர் உயிரற்ற கவியே!!!!
 ************
நிதர்சனங்களை நீக்க 
தெரிந்தவன் நீ என்பது எனக்கு 
தெரியும்... அதனாலே உன்னால் 
புறந்தள்ளப்படும்
என் கவிதையும் கூட 
**உயிரற்ற ஓர் கவிதையே...** 

அன்புடன் 
ரேவா

9 கருத்துகள்:

வார்த்தை சொன்னது…

nice

(if possible remove word verification for comments)

சம்பத்குமார் சொன்னது…

அருமை மிக அருமை

ரேவா சொன்னது…

வார்த்தை said...

nice

(if possible remove word verification for comments)

உங்கள் கருத்துக்கு நன்றி. வார்த்தை அவர்களே..

ரேவா சொன்னது…

சம்பத்குமார் said...

அருமை மிக அருமை

நன்றி சம்பத்குமார் அவர்களே.

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

தங்களை இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியிருக்கிறேன்.
http://blogintamil.blogspot.com/2010/12/blog-post_11.html

நன்றி!

ரேவா சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி said...

தங்களை இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியிருக்கிறேன்.
http://blogintamil.blogspot.com/2010/12/blog-post_11.html

நன்றி!


வலைச்சரம் தளத்தில் என்னை அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றி... உங்கள் கருத்துகள் எனக்கு உற்சாகத்தை அளிக்கிறது
நன்றி....

எஸ்.கே சொன்னது…

அழகான கவிதை!

ரேவா சொன்னது…

எஸ்.கே said...

அழகான கவிதை!

நன்றி எஸ்.கே அவர்களே..

எவனோ ஒருவன் சொன்னது…

////வெகுநாட்களாய் எனக்கோர் ஆசை
என்னை எழுதவைத்து எனக்குள்
என்னை ஆட்டிவைக்கும் என்னவன்
என் கவியை படிக்கவேண்டும்....
அது வரை
இதுவும் ஓர் உயிரற்ற கவியே!!!!////

என்னை மிகவும் கவர்ந்த வரிகள் :-)