உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

வெள்ளி, 31 டிசம்பர், 2010

வருக புத்தாண்டே !!!!!

***********
 
*********
* பிறக்கும் புத்தாண்டில்,
எல்லோர் மனதிலும்
மகிழ்ச்சி நிலவட்டும்....

*னவுகள், லட்சியம்,
ஆசை, எதிர்பார்ப்பு,
ஏக்கம்,  என
நம் எல்லோர் மனதிலும்
நிறைவேறாமல்
நிறைந்து கிடக்கும் எண்ணங்கள்
யாவும் வெற்றி என்னும்
ஒற்றை மந்திரத்தில்  உயிர்பெறட்டும்...

* நாணயத்தின் இரு பக்கம் போல்
வெற்றியும் , தோல்வியும்
நம் வாழ்வில் நிறைந்திருக்க..
நாணயமானோரே இங்கு நலமுடன்
வளர்வார் என்பதை  நல்லோர் மனம்
புரிந்துகொள்ளட்டும்...

 * திட்டமிடலும்,
திரும்பிப் பார்ப்பதும்
நம் வாழ்வின் வளர்சிக்கு உதவும்..
சமாதானம் என்னும் சொல்லின் மூலம்
அன்பு நிலவும்.மனதில் அமைதி தழுவும் ..
முடிந்தவரை உன் எதிரிக்கும்...
உன் அன்பை பரிசளி...
கடந்து செல்கின்ற வருடத்தில்
நாம் விதைத்த விசயத்தின்
விதையை எடுத்து இந்த
புது வருடத்தில்
புதிய மனிதானாய்
பயணிப்போம்....

ம் புதிய மனிதனாய்
பயணிப்போம்......அதற்கு
இலக்கை நோக்கி பறந்து செல்வோம்
தடைகள் வந்தால் தாண்டிச் செல்வோம்...
அன்பை வைத்து உலகை அளந்துப் பார்ப்போம்...
அனுமதித்தால் அதற்கும் ஓர் அளவு வைப்போம் ..
 பிறந்த பிள்ளை போல்
நேசம் கொள்வோம்...
நேசம் கொள்ளும்,
தூரோகம் மறப்போம்...
அச்சம் தவிர்ப்போம்...
ஆணவம் களைவோம்...
விழுந்தாலும் வீரியம் மிக்க விதையாய் எழுவோம்..

ண்பா!!!

* முடியாத "இலக்கு"  என்று எதுவும் இல்லை
முடிந்தால் இமயம் கூட தூரம் இல்லை..
தோல்வியில் துவண்டாலும்,
தோற்றிடாத உன் நம்பிக்கை கொண்டு
புதிய பாதை செய்...
தோல்வி என்பது தோற்றதில் இல்லை...
தோற்ற ஒன்றின் தோற்றத்தில்
இருந்து தெளிந்த பின்னும்
தொடராமல் இருப்பது
என்பதை புரிந்து  
பயணிப்போம் இந்த இனிய புத்தாண்டில்...

என் நண்பர்கள் அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்...
வளங்கள் யாவும் உங்கள் வீட்டில் குடிபுகவும் , மாற்றம் தரும்  ஏற்றத்திற்காய் காத்திருக்கும் உள்ளங்களுக்கும்.... வேண்டியவை வேண்டியபடியே கிட்ட ... எல்லாம் வல்ல அன்பெனும் ஆண்டவன் துணை கொண்டு  வேண்டுகிறேன்....  

அன்புடன்
ரேவா

8 கருத்துகள்:

karthikkumar சொன்னது…

புத்தாண்டு வாழ்த்துக்கள்....

ரேவா சொன்னது…

நன்றி கார்த்தி....உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்

ரஹீம் கஸாலி சொன்னது…

இன்றும் நாளையும் யார் எந்த பதிவு போட்டாலும் அதற்க்கான பின்னூட்டம் மட்டும் டெம்ப்ளேட் பின்னூட்டம்தான். அது
புத்தாண்டு வாழ்த்துக்கள்.

Lakshmi சொன்னது…

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

எஸ்.கே சொன்னது…

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! இவ்வருடம் தங்களுக்கு பல இனிய நிகழ்வுகளை அளிக்கட்டும்!

ரேவா சொன்னது…

Lakshmi said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

நன்றி லக்ஷ்மி அம்மா உங்களுக்கும் என்னுடைய புதுவருட வாழ்த்துக்கள்....

ரேவா சொன்னது…

எஸ்.கே said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! இவ்வருடம் தங்களுக்கு பல இனிய நிகழ்வுகளை அளிக்கட்டும்!

நன்றி எஸ்.கே உங்களுக்கும் என்னுடைய புதுவருட வாழ்த்துக்கள்....

எவனோ ஒருவன் சொன்னது…

2010 பதிவும் எல்லாவற்றையும் முடித்து விட்டேன். 2011ல் சிந்திப்போம் :-)