வணக்கம் வணக்கம் வணக்கம்...என்னடா இத்தன தடவ வணக்கம் சொல்றாலேன்னு பாக்குறேங்களா ? அட வேற ஒன்னும் இல்லைங்க, நமக்கு பிடிச்ச ஒரு விஷயத்த பத்தி பேசும் போதோ, இல்லை கேக்கும் போதோ நம்மையும் அறியாம ஒரு எனர்ஜி வரும் பாருங்க அது தாங்க இது... என்ன டா
இவ அது இது எதுன்னு ஏதோ சிவா கார்த்திகேயன் மாதிரி ஷோ போடா போரளானு பாக்குறேங்களா? அட போங்க பாஸ் நமக்கு ஷோ காட்டவும் தெரியாது, ஜு காட்டவும் தெரியாது மீ சின்ன புள்ள...
ஒவ்வொரு மனுசனுக்கும் அவன் வளர்ந்த காலங்கள்ல சில காலம்
மறக்க முடியா காலமா இருக்கும், மழலை காலத்துல இருந்து, இளமை காலத்து வரை , நிறைய விஷயங்களை கடந்து வந்தாலும், சில விஷயங்கள் மட்டும் நமக்கு எப்போவும் இதயத்துக்கு பக்கமாவே இருக்கும், அப்படிஎன்னை கவர்ந்த என் சென்னை காலத்தை பத்தி தான் இந்த பதிவு முழுதும்..
எங்கேயும் எப்போதும் படம் பக்கும் போதே, இப்படி ஒரு பதிவு எழுதனும்னு நினச்சேன், ஆனாலும் சுய சுரண்டல்கள் எதுக்குன்னு நினைச்சு எழுதாம
விட்டுட்டேன், அப்பறம் இப்போ ஏன் எழுதுனங்கிற உங்க மைன்ட் வாய்ஸ் எனக்கு கேட்டுடுச்சு, இனி எனக்கு தோணுற விஷயங்களை எந்த தயக்கமும் இல்லாம செய்யபோறேன்னு நான் முடிவு எடுத்துருக்கேனுங்க.. ஹி ஹி..
சரி விஷயத்துக்கு வாறேன். இந்த இருபத்தியாறு வருட வரலாற்றுல இந்திய தொலைகாட்சிகளில் முதல் முறையா? கொஞ்சம் ஓவர் அஹ இருக்கோ சரி நொவ் டியூன் சேஞ்சு மாமு..
எங்கேயும் எப்போதும் படம் என்ன மனதளவுல ஈர்த்த படம்னு சொல்லலாம், ஆரம்ப கால என் சென்னை வாழ்க்கைய எனக்கு என் கண்முன்னாடி நிறுத்துன மாதிரி தான் இருந்தது. என் சென்னை பயணம் ரொம்ப வித்தியாசமானது..
நான் வளர்ந்த விதத்துல இருந்து அப்டியே மாறுபட்ட ஒரு சுழலுக்கு என்ன கொண்டு போனது இந்த காலம் தான்.. கல்லூரி படிப்ப முடிச்சு, சுயமா வேலை செய்யணும்ன்னு நினைச்சு, நானே சொந்த செலவுல சூனியம் வச்சு கிட்டது தனி கதை.. அப்பறம் குடும்ப வண்டி அப்படி இப்படி ன்னு தடம்புரள, குடும்ப சூழலுக்காக சென்னை நோக்கி என் பயணம் ஆரம்பம்...
நான் வளர்ந்த உலகம் ஆண்கள் இல்லாத உலகம்.. உங்க அப்பா ஒரு ஆண் தானேன்னு கேக்கலாம்..அதுக்கும் நாங்க பதில் வச்சு இருக்கோம்ப்பா, என் குடும்பத்து உறுபினர்களை தவிர வேறு ஒரு ஆணிடம் நட்பு கூட வச்சுகிட்டது கிடையாது... ஏன்னா ஏன்னா எங்க அப்பா ஒரு ஸ்ட்ரிக்ட் ஆபிசர், ஆபிசர் னதும் உணவு உலகத்துக்கு போய்டாதீங்க, என் குடும்பம் ரொம்ப கட்டுக் கோப்பான குடும்பம், சொந்தம் ன்னு சொல்லி யாரும் வந்தாலும், வாங்கனு சொல்லிட்டு வீட்டுக்கு உள்ள போய்டனும், அப்படி தான் நானும் என் தங்கையும் வளர்க்கப் பட்டோம்.
பள்ளிப் படிப்பும் சரி, கல்லூரிப் படிப்பும் சரி பெண்கள் கல்லூரியில தான், கல்லூரி போட்டிகள்ள கூட பெண்கள் கல்லூரி போட்டியா பாத்து தான் விண்ணப்பிபேன். அதற்க்கான காரணம் எனக்கு என்னனு புரியல, என்னப்
பொறுத்தவரை, உறவல்லாத எல்லா ஆண்களும் அப்போ ஏதோ எனக்கு ரொம்ப பயத்த தான் கொடுத்தாங்க, கொடுத்தாங்கன்னு சொல்ல முடியாது, எல்லாம் என் பாட்டி பண்ணுன வேலை... சின்ன வயசுல இருந்தே பசங்க கிட்ட சேரக்கூடாதுன்னு சொல்லி வளத்துட்டாங்க..
பலபேரு அறிவுரைக்கு அப்பறம், சென்னைக்கு என் உறவினர் வீட்டுல தங்க அனுமதி வாங்கி பொறப்பட்டேன்.
ஒரு வழிய சென்னை எக்மோர் அஹ அடஞ்சாச்சு. ஜனம் பெருத்த ஊருன்னு
சரியத் தான் சொன்னங்க.. சென்னைய பாத்ததும் பயம் தொத்திக்கிச்சு, எங்க மதுரை தூங்கா நகரம் தான், அங்கேயே எவ்ளோ நேரம்னாலும் நாங்களெல்லாம் அசால்ட்டா சுத்துவோம், இது என்ன பெரிய சென்னைன்னு பீத்திக்கிட்டு வந்தேன், எக்மோர் அஹ பாத்ததுமே நான் சொன்னது தப்புன்னு ஒத்துக்கிட்டேன்...
ஒரு வழியா சொந்தக்காரங்க வீட்டுல தங்கியாச்சு, முதல் தடவை அம்மாவின் அருகாமையை, தம்பி தங்கச்சியோட சண்டைய, அப்பாவோட ஆறுதல் பேச்ச ரொம்ப மிஸ் பண்ணுன நேரம் அது. முதல் முதல் அஹ ஒரு interviewku போறேன்...இன்டெர்வியூல செலக்ட் ஆனேனா இல்லையா? அத அடுத்த பதிவில சொல்றேன், கண்டிப்பா இந்த பதிவு மெகா செரியல் தான் பாஸ். பின்ன மூணு வருஷம்ல ஒரே போஸ்ட் அஹ போட்டுட முடியுமா? அடுத்த பதிவில பாக்கலாம்...ஹி ஹி....
7 கருத்துகள்:
சொந்த பதிவையே தொடர் பதிவா எழுதிட்டிங்க சுவாரசியமா இருக்கு. இனி வருஷம் முழுதும் தொடர் பதிவுதானா?
அடுத்தவங்க சொந்தக் கதையை கேட்கிறது ஒரு சுவாரசியம் ரேவா. அப்படித் தான் உள்ளது உங்கள் பதிவு. அடுத்த பதிவிற்கு காத்திருக்கிறேன்.
எனக்கும் நான் சென்னையில் இருந்த நாட்களைப் பற்றி எழுத வேண்டும் போல உள்ளது இப்பதிவை படித்ததும் :-)
நீங்க மட்டும்தான் போடுவீங்கள நாங்களும் விரைவில்
சென்னை தொடர் ஆரம்பாமம்ம்ம்ம் ...
Way to telling is so sweet revathi..
keep on rocking..
உன்னோட லைப் புல்லா எனக்கு தெரிஞ்சாலும் இப்போ நீ சொல்ற விதம் சூப்பர் டீ ., எனக்கும் சென்னை லைப் பத்தி எழுதணும்னு தோணுது டீ
வணக்கம். இன்றுதான் முதன் முதலில் உங்கள் வலைத்தளத்திற்கு வந்திருக்கிறேன். உங்கள் பதிவைப் படித்தவுடன் எனக்கும் என் சென்னைக்காலம் நினைவிற்கு வருகிறது. உன்கள் கவிதைகள் அனைத்தும் நன்றாக இருக்கிறது. வாழ்த்துக்கள்
வணக்கம். இன்றுதான் முதன் முதலில் உங்கள் வலைத்தளத்திற்கு வந்திருக்கிறேன். உங்கள் பதிவைப் படித்தவுடன் எனக்கும் என் சென்னைக்காலம் நினைவிற்கு வருகிறது. உன்கள் கவிதைகள் அனைத்தும் நன்றாக இருக்கிறது. வாழ்த்துக்கள்
வணக்கம். இன்றுதான் முதன் முதலில் உங்கள் வலைத்தளத்திற்கு வந்திருக்கிறேன். உங்கள் பதிவைப் படித்தவுடன் எனக்கும் என் சென்னைக்காலம் நினைவிற்கு வருகிறது. உன்கள் கவிதைகள் அனைத்தும் நன்றாக இருக்கிறது. வாழ்த்துக்கள்
கருத்துரையிடுக