உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

வெள்ளி, 27 ஜனவரி, 2012

தனியாக நான்...


தனிமையில் இருந்தேன்
தவம் என்ன புரிந்தேன்,
இருக்கின்ற இடத்தில்
என் சுயத்தோடு கிடந்தேன்...

இருளின் மடியிலும்
பயமற்று திரிந்தேன்..
எனக்கென்ற விருப்பென்று
புரியாமல் சுழன்றேன்..

சொந்தமென்று வந்தாய்..
என் சுயத்தை 
தொலைக்கச்செய்தாய் 

கட்டுபாடுகளுக்கும்,
கட்டளைகளுக்கும்
கட்டுப்படசெய்தாய்..

அன்பென்று எண்ணி
அடங்கினேன் அன்றி 
அடக்கிலேன்,

என் ஒவ்வொரு நிகழ்வுக்கும்
வர்ணனைகள் படைத்தாய்..
வகைவகையாய் அன்பு செய்தாலும்
வக்கிலை என்று 
வசைமாலை சூடினாய் ..

நான் நானாக இருக்க
எண்ணி
இன்று நான் எதுவாகவுமின்றி 
இதுவாக இருக்கிறேன்...

சொல்லத்தெரியா வலி
வந்து,
தொண்டையில் சிக்கிய
முள்ளாய் உறுத்த,
புரியாத அன்புக்கு அருகில் 
இருந்து பயனிலை 
என்று 
விட்டு பிரிகின்றேன் உன்னை...

என் சுயம் தொலைக்க 
விரும்பாத நான்
மீண்டும் 
தனிமையை துணைக்கு அழைக்கின்றேன்...