உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

ஞாயிறு, 29 ஜனவரி, 2012

அவரவர் அனுபவம்

நண்பன் என்று 
பெயரிட்டு 
அறிமுகப்படுத்தியும் ,
ஆணுக்கும், பெண்ணுக்குமான
நட்பை சில உறவுகளிடம்
நியாயப்படுத்தவே முடியவில்லை..
அனைவரின் பயமும் 
அவரவர் அனுபவங்களில் 
கிடைத்த அவர்களாகவே இருக்கிறார்கள்..  

15 கருத்துகள்:

koodal bala சொன்னது…

இன்றைய சமூக நிலை ...கவிதை அருமை!

செய்தாலி சொன்னது…

முற்றிலும் உண்மை
கவிதை சமூக யதார்த்தம்

சித்தாரா மகேஷ். சொன்னது…

உண்மைதான் அக்கா.சகோதரர்களையே புரிந்து கொள்ளாத உலகம் நண்பர்களையா புரிந்து கொள்ளப் போகிறது?

நிரூபன் சொன்னது…

வணக்கம் அக்காச்சி,
மனித குலத்தின் இழி நிலையினை,
எமது சமூகத்தின் கறைபடிந்த பக்கங்களை,

இந்த உலகில் ஆண் பெண் நட்பினை நோக்கத் தெரியாத மூடர்களைச் சாடி நிற்கிறது இக் கவிதை.

மதுமதி சொன்னது…

யதார்த்தமான விசயத்தை சொல்கிறது கவிதை..வாழ்த்துகள்..

ரேவா சொன்னது…

koodal bala கூறியது...

இன்றைய சமூக நிலை ...கவிதை அருமை!


நன்றி சகோ உங்கள் வருகைக்கும், கருத்துரைக்கும்...தொடர்ந்து வாருங்கள்....

ரேவா சொன்னது…

செய்தாலி கூறியது...

முற்றிலும் உண்மை
கவிதை சமூக யதார்த்தம்


கண்டிப்பாக சகோ, என் அறிமுகத்தில் நான் உணர்ந்த ஒன்று இது... நன்றி உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்.......

ரேவா சொன்னது…

சித்தாரா மகேஷ். கூறியது...

உண்மைதான் அக்கா.சகோதரர்களையே புரிந்து கொள்ளாத உலகம் நண்பர்களையா புரிந்து கொள்ளப் போகிறது?


சரியாய்ச் சொன்னாய் சித்தாரா... நண்பர்களை புரிந்து கொள்ளாத உலகம் என்று சொல்வதை விட, எதிர் பாலினங்களோடு நட்பு பாரட்டுவதை கண்டு பயப்படும் உறவுகளே அதிகம்.. நன்றி உன் வருகைக்கும் வாழ்த்துக்கும் சகோ :)

ரேவா சொன்னது…

ரூபன் கூறியது...

வணக்கம் அக்காச்சி,
மனித குலத்தின் இழி நிலையினை,
எமது சமூகத்தின் கறைபடிந்த பக்கங்களை,

இந்த உலகில் ஆண் பெண் நட்பினை நோக்கத் தெரியாத மூடர்களைச் சாடி நிற்கிறது இக் கவிதை.

வழமை போல் சரியான புரிதலோடு உன் மறுமொழி கண்டு மகிழ்ந்தேன் சகோ... நன்றி உன் கருத்துரைக்கும் வருகைக்கும் நிருபன்...

ரேவா சொன்னது…

மதுமதி கூறியது...

யதார்த்தமான விசயத்தை சொல்கிறது கவிதை..வாழ்த்துகள்..


மிக்க நன்றி உங்கள் முதல் வருகைக்கும், வாழ்த்துக்கும், தொடர்ந்து வாருங்கள் சகோ;;; :)

Ananthi (அன்புடன் ஆனந்தி) சொன்னது…

என்று புரிந்திருக்கிறது..?
இன்று புரிந்து கொள்ள..?

நல்லா இருக்குங்க.

நம்பிக்கைபாண்டியன் சொன்னது…

\\\\நட்பை சில உறவுகளிடம்
நியாயப்படுத்தவே முடியவில்லை///

உண்மையான வரிகள்!

ரேவா சொன்னது…

Ananthi (அன்புடன் ஆனந்தி) கூறியது...

என்று புரிந்திருக்கிறது..?
இன்று புரிந்து கொள்ள..?

நல்லா இருக்குங்க.


ரொம்ப நன்றி அக்கா உங்கள் வருகைக்கும், கருத்திற்க்கும்... :)

ரேவா சொன்னது…

நம்பிக்கைபாண்டியன் கூறியது...

\\\\நட்பை சில உறவுகளிடம்
நியாயப்படுத்தவே முடியவில்லை///

உண்மையான வரிகள்!


நன்றி சகோ.. :)

எவனோ ஒருவன் சொன்னது…

உண்மை ரேவா. தங்கள் அனுபவித்தில் எப்போதும் மற்றவரைக் காண்பது மனித இயல்போ :(