உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

புதன், 18 ஜனவரி, 2012

எதிர்பார்புகள் நிறைந்த வீடு...
பல சலனப் பார்வைக்கு
மத்தியில்,
உன்னை எனக்காய்
என் குடும்பம் கண்டெடுத்த நாள் அது..

எனக்கு முகவரி
கொடுத்த தந்தையின்
முதல் எழுத்தும் மாற்றியாகிவிட்டது,
என் தந்தையின் இடத்தில்
உன்னை சுமந்து
எதிர்பார்ப்புகள் நிறைந்த
நான் வாழ்ந்த வீட்டில் இருந்து
வாழப் போகும் வீட்டுக்கு
வந்த கணம் அது..

சுமக்க முடிய மனச்சுமை
என்னை பயமுறுத்த,
புதிதாய் கிடைத்த
சொந்தகளின் சிரிப்பும்
அன்னியமாய்த் தெரிய,
ஆறுதல் என்னவோ
ஆழப் பொதிந்திருந்த
உன் மீதான நம்பிக்கை
மட்டும் தான்.

உயிர் கொடுத்த
உறவில் தொடங்கி,
அடித்து விளையாடும்
என் உடன்பிறந்தவரில் இருந்து ,
விரும்பிக் குடித்த
தேநீர் குவளை,
அணைத்துறங்கும்
என் செல்ல பொம்மையென,
அனைவரையும் 
நீ சூடிய
ஒற்றை கயறோடு
பிரிந்து வந்தாகிற்று...

உன் பிரமாண்டம்
என்னை பயமுறுத்த,
அம்மாவின் இடத்தில் அத்தையும்,
அப்பாவின் இடத்தில் மாமாவையும்,
தம்பியின் இடத்தில் கொழுந்தனையும்,
தங்கையின் இடத்தில் நாத்தனாரையும்,
என் இஷ்ட தெய்வத்தின்
இடத்தில் உன் குலதெய்வத்தையும்,  
வைக்கையில் உணர்ந்தேன்
ஆணாய் பிறந்திருக்கலாம் என்று..

வேரோடு பிடிங்கிய
மரமாய் நான் நிற்க,
மரத்தாலான ஜன்னலும்,
கதவும், உன் வீட்டின் பிரமாண்ட
வரவேற்பறையும்,
இனி என் கனவுகளின் கூடாரம்
இது என்று விமர்சிக்க,
எதார்த்தங்களின் வாசிகியாய்
என் முதல் அடியை வைக்கின்றேன்.

விமர்சனங்கள் நிறைந்த வீடு
என்னை வரவேற்க
காத்திருக்க,
என் கனவுக்கு உயிர் கொடுக்கும்
என்ற நம்பிக்கையில்
முதல் அடியை வைக்கின்றேன்..

45 கருத்துகள்:

சௌந்தர் சொன்னது…

புதிய வீட்டுக்கு சென்று இருக்கீங்க வாழ்த்துக்கள் ரேவதி...

கவிதைல உங்க உணர்வு சூப்பர்....!!

மனசாட்சி சொன்னது…

உணர்ச்சி கவிதை - புகுந்த வீட்டில் அடிஎடுத்து வைத்தமைக்கு வாழ்த்துக்கள் - வாழிய பல்லாண்டு

தமிழ்வாசி பிரகாஷ் சொன்னது…

புது வீடுக்கு புகுந்தமையை உணர்த்தி கவிதை... அழகான வரிகள் சகோ..

நிரூபன் சொன்னது…

வணக்கம் அக்கா,
டெம்பிளேட் டிசைனிங் சூப்பரா இருக்கு.
வாழ்த்துக்கள்.

நிரூபன் சொன்னது…

அழகிய கவிதை,
பிறந்த வீட்டை விட்டு,
கணவன் கரம் பிடித்துப் புகுந்த வீட்டினுள் செல்லும் பெண்ணின் உணர்வுகளைச் சொல்லும் அற்புதமான கவிதை.

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

எக்சலண்ட்....! உணர்வுகள் அற்புதமாக வெளிப்பட்டிருக்கின்றன. இது திருமணமாகும் அனைத்துப் பெண்களுக்கும் ஏற்படும் அனுபவம்தான். ஒரு பெண்ணால்தான் இந்தளவுக்கு உணர்வுகளை உள்வாங்கி எழுத முடியும், எழுதி இருக்கிறீர்கள். வாழ்த்துகள்!

Mega சொன்னது…

Hi I am a great fan of your writings. this one is awesome. I just show my self in it. Just Great.

ஒண்ணுமே தெரியாத ஐடியாமணி சொன்னது…

வாவ்! என்ன சொல்றதுன்னே தெரியல ரேவா! கவிதை அவ்வளவு அருமையா இருக்கு! பன்னி அண்ணன் சொன்னது போல கண்டிப்பாக ஒரு பெண்ணின் உணர்வுகளை ஒரு பெண்ணால் தான் மிகச்சரியாக வெளிப்படுத்த முடியும்!

புதிதாக திருமணமான ஒரு பெண்ணின் மன உணர்வுகளை அப்படியே சொல்லியிருக்கீங்க!

நீங்கள் புகுந்திருக்கும் வீட்டிலிருந்து, உங்கள் மீது விமர்சனம் எழக் கூடாது! இதுவே என் பிரார்த்தனை!

வாழ்த்துக்கள் ரேவா!

ரேவா சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
ரேவா சொன்னது…

ஒண்ணுமே தெரியாத ஐடியாமணி கூறியது...

வாவ்! என்ன சொல்றதுன்னே தெரியல ரேவா! கவிதை அவ்வளவு அருமையா இருக்கு! பன்னி அண்ணன் சொன்னது போல கண்டிப்பாக ஒரு பெண்ணின் உணர்வுகளை ஒரு பெண்ணால் தான் மிகச்சரியாக வெளிப்படுத்த முடியும்!

புதிதாக திருமணமான ஒரு பெண்ணின் மன உணர்வுகளை அப்படியே சொல்லியிருக்கீங்க!

நீங்கள் புகுந்திருக்கும் வீட்டிலிருந்து, உங்கள் மீது விமர்சனம் எழக் கூடாது! இதுவே என் பிரார்த்தனை!

வாழ்த்துக்கள் ரேவா!

ஐய்யய்யோ மணி நீயுமா?ஏதோ புகுந்த வீட்டுக்கு போற பொண்ணோட மனநிலை எப்படி இருக்கும்னு நினைச்சு கவிதை எழுதுனா நீ பிராத்தனை பண்ணவே கிளம்பிட்டயா?... கவிதை என் சொந்த சோகமா தான் இருக்கனுமா?... எனக்கு வரப் போறவருக்கு நல்ல நேரம் போல இன்னும் கண்ணுல சிக்கல, சிக்குனா அதுக்கு தனி பதிவே போடுறேன் நண்பா....

ஒண்ணுமே தெரியாத ஐடியாமணி சொன்னது…

என்னது இது வெறும் கற்பனைக் கவிதைதானா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்! அப்போ இன்னிக்கு பல்பு எனக்கா?
நானும் சரி பயபுள்ளைக்கு கல்யாணம் ஆகுதே, நல்லா வாழட்டும்னு சொல்லி இங்கிருந்துகிட்டே மதுரை மீனாட்சிக்கு நேர்திலாம் வைச்சேன்!
வெறும் கற்பனைதானா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்!

ரேவா சொன்னது…

ஒண்ணுமே தெரியாத ஐடியாமணி கூறியது...

என்னது இது வெறும் கற்பனைக் கவிதைதானா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்! அப்போ இன்னிக்கு பல்பு எனக்கா?
நானும் சரி பயபுள்ளைக்கு கல்யாணம் ஆகுதே, நல்லா வாழட்டும்னு சொல்லி இங்கிருந்துகிட்டே மதுரை மீனாட்சிக்கு நேர்திலாம் வைச்சேன்!
வெறும் கற்பனைதானா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்!

ஹி ஹி உனக்கு தான் பல்பு, அதிலென்ன சந்தேகம் உனக்கு
,... சரி நண்பா அப்போ யாரவது கவிதை எழுதினா அது அவங்க சொந்த சொறியலா தான் நினைபாங்களோ?.... ஐயையோ....என் கவிதை எல்லாம் கற்பனைங்கோ...கற்பனைங்கோ...

ஒண்ணுமே தெரியாத ஐடியாமணி சொன்னது…

முன்னாடி ஒருவாட்டி, அத்தைப் பையன் வந்தான்! அவனுக்குச் சமைச்சுக் கொடுத்தேன்னு செம பல்பு குடுத்தே! அப்பவும் ஏமாந்தோம்! இப்ப மறுபடியும் பல்ப்பா?

ஹா ஹா ஹா ரேவா, இனிமே உனக்கு நிஜமாவே கல்யாணம் ஆனாலும் நாம நம்ப மாட்டோம்!

காட்டான் சொன்னது…

புகுந்த வீட்டுக்கு போகும் பெண்ணின் மனதை அழகாக படம் பிடிச்சிருக்கின்றது கவிதை.
வாழ்த்துக்கள்..!!

விக்கியுலகம் சொன்னது…

மருமகப்பொண்ணு கலக்கல் கவிதை!

ரேவா சொன்னது…

சௌந்தர் கூறியது...

புதிய வீட்டுக்கு சென்று இருக்கீங்க வாழ்த்துக்கள் ரேவதி...

கவிதைல உங்க உணர்வு சூப்பர்....!!

நீ ஆரம்பிச்சு வச்ச புரளிய கடைசிவரைக்கும் எல்லாரும் காப்பாத்திருக்காங்க..ஏன் டா தம்பி இந்த கொலவெறி உனக்கு....

ரேவா சொன்னது…

மனசாட்சி கூறியது...

உணர்ச்சி கவிதை - புகுந்த வீட்டில் அடிஎடுத்து வைத்தமைக்கு வாழ்த்துக்கள் - வாழிய பல்லாண்டு

வணக்கம் மனசாட்சி இந்த புது டெம்ளேட் தானே புகுந்த வீடுனு சொல்றேங்க, மிக்க மகிழ்ச்சி உங்கள் வருகைக்கு, தொடர்ந்து வாருங்கள் சகோ...

ரேவா சொன்னது…

தமிழ்வாசி பிரகாஷ் கூறியது...

புது வீடுக்கு புகுந்தமையை உணர்த்தி கவிதை... அழகான வரிகள் சகோ..

நன்றி சகோ உங்கள் வருக்கைக்கும் கருத்திற்கும்...

ரேவா சொன்னது…

நிரூபன் கூறியது...

வணக்கம் அக்கா,
டெம்பிளேட் டிசைனிங் சூப்பரா இருக்கு.
வாழ்த்துக்கள்.

நன்றி நிரூபன் டெம்பிளேட் மாத்தி இப்போ தான் வரியா நீ?...

ரேவா சொன்னது…

நிரூபன் கூறியது...

அழகிய கவிதை,
பிறந்த வீட்டை விட்டு,
கணவன் கரம் பிடித்துப் புகுந்த வீட்டினுள் செல்லும் பெண்ணின் உணர்வுகளைச் சொல்லும் அற்புதமான கவிதை.

மிக்க நன்றி நிரூபன், உன் வருகைக்கும், வழமைபோல உன் பின்னூட்டத்திற்கும்...மகிழ்ந்தேன்...தொடர்ந்து வாருங்கள்

ரேவா சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

எக்சலண்ட்....! உணர்வுகள் அற்புதமாக வெளிப்பட்டிருக்கின்றன. இது திருமணமாகும் அனைத்துப் பெண்களுக்கும் ஏற்படும் அனுபவம்தான். ஒரு பெண்ணால்தான் இந்தளவுக்கு உணர்வுகளை உள்வாங்கி எழுத முடியும், எழுதி இருக்கிறீர்கள். வாழ்த்துகள்!

வெகுநாள் கழித்து என் தளம் வந்திருப்பதாக அறிகின்றேன்...மிக்க மகிழ்ச்சி...நன்றி உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் அண்ணா....

ரேவா சொன்னது…

Mega கூறியது...

Hi I am a great fan of your writings. this one is awesome. I just show my self in it. Just Great.

உங்கள் பின்னூட்டம் கண்டு மகிழ்ந்தேன் தோழி.... நன்றி உங்கள் முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் தொடர்ந்து வாருங்கள் :)

ரேவா சொன்னது…

ஒண்ணுமே தெரியாத ஐடியாமணி கூறியது...

முன்னாடி ஒருவாட்டி, அத்தைப் பையன் வந்தான்! அவனுக்குச் சமைச்சுக் கொடுத்தேன்னு செம பல்பு குடுத்தே! அப்பவும் ஏமாந்தோம்! இப்ப மறுபடியும் பல்ப்பா?

ஹா ஹா ஹா ரேவா, இனிமே உனக்கு நிஜமாவே கல்யாணம் ஆனாலும் நாம நம்ப மாட்டோம்!

அட கவலைய விடு ரஜீவன், அரசியல்ல இதெல்லாம் சாதாரணம் அப்பா, ஹி ஹி ..நன்றி நண்பா உன் வருக்கைக்கும் மறுமொழிக்கும்,

ரேவா சொன்னது…

காட்டான் கூறியது...

புகுந்த வீட்டுக்கு போகும் பெண்ணின் மனதை அழகாக படம் பிடிச்சிருக்கின்றது கவிதை.
வாழ்த்துக்கள்..!!மிக்க நன்றி அண்ணா உங்கள் கருத்துரைக்கு, தொடர்ந்து வாருங்கள்...

ரேவா சொன்னது…

விக்கியுலகம் கூறியது...

மருமகப்பொண்ணு கலக்கல் கவிதை!

நன்றி அண்ணா உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் :)

dhanasekaran .S சொன்னது…

அழகு தமிழில் அழகான கவிதை வாழ்த்துகள்.

எவனோ ஒருவன் சொன்னது…

அட்டகாசம் ரேவா. புகுந்த வீட்டில் முதல் அடியை எடுத்து வைக்கப் போகும் மணப் பெண்ணின் மன உணர்வை மிக அற்புதமாக கூறி இருக்கிறீர்கள். செம டச்சிங். உங்களின் மிகச் சிறந்த கவிதைகளில் இதுவும் ஒன்று.

பாராட்ட வார்த்தைகள் இல்லை என்னிடம். தலை வணங்குகிறேன் :)

////உயிர் கொடுத்த
உறவில் தொடங்கி,
அடித்து விளையாடும்
என் உடன்பிறந்தவரில் இருந்து ,
விரும்பிக் குடித்த
தேநீர் குவளை,
அணைத்துறங்கும்
என் செல்ல பொம்மையென,
அனைவரையும் நீ சூடிய
ஒற்றை கயறோடு
பிரிந்து வந்தாகிற்று... ////

எனக்கு மிகவும் பிடித்த வரிகள் ....

சரியில்ல....... சொன்னது…

ச்சே.... உங்களுக்குள்ள ஒரு குட்டி 'தாமரை' குடியிருக்காங்க..... மறக்காமல் வாடகை வாங்கிக்குங்க.....

veedu சொன்னது…

வேரோடு பிடிங்கி வேறிடத்தில் வைக்கப்பட்ட மரம் அன்பு எனும்
தண்ணீரால் தழைக்கலாம்...
அதன் துளிர்களில்
தான் வாழ்ந்த இடத்தின்...
பெருமைகள் அடங்கியிருக்கும்...

இந்திரா சொன்னது…

இந்தப் பதிவிற்குப் பின் எழுதிய சமீபத்திய பதிவிற்கு கருத்து சொல்ல வந்தேன்.
ஆனால் comment box திறக்கவில்லை.
ஆதலால் இங்கே..

//புரியாத அன்புக்கு அருகில்
இருந்து பயனிலை //

அர்த்தமுள்ள ஆழமுள்ள வரிகள்.
பலருடைய மனநிலை இதுதான்.
ஆனால் பயனில்லை எனத் தெரிந்தும் விலக முடிவதில்லையே.. காரணம் புரியாத புதிராய் வாழ்க்கை.

அருமையான பதிவு.
பாராட்டுக்கள்.

siva sankar சொன்னது…

:)so sweet revakkka

siva sankar சொன்னது…

what to say. am also living with great poets like you..thanks again. keep on rocking.

ரேவா சொன்னது…

dhanasekaran .S கூறியது...

அழகு தமிழில் அழகான கவிதை வாழ்த்துகள்.

மிக்க நன்றி சகோ உங்கள் முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும்.,...தொடர்ந்து வாருங்கள் :)

ரேவா சொன்னது…

எவனோ ஒருவன் கூறியது...

அட்டகாசம் ரேவா. புகுந்த வீட்டில் முதல் அடியை எடுத்து வைக்கப் போகும் மணப் பெண்ணின் மன உணர்வை மிக அற்புதமாக கூறி இருக்கிறீர்கள். செம டச்சிங். உங்களின் மிகச் சிறந்த கவிதைகளில் இதுவும் ஒன்று.

பாராட்ட வார்த்தைகள் இல்லை என்னிடம். தலை வணங்குகிறேன் :)

////உயிர் கொடுத்த
உறவில் தொடங்கி,
அடித்து விளையாடும்
என் உடன்பிறந்தவரில் இருந்து ,
விரும்பிக் குடித்த
தேநீர் குவளை,
அணைத்துறங்கும்
என் செல்ல பொம்மையென,
அனைவரையும் நீ சூடிய
ஒற்றை கயறோடு
பிரிந்து வந்தாகிற்று... ////

எனக்கு மிகவும் பிடித்த வரிகள் ....

மிக்க நன்றி நண்பா உன் மனமார்ந்த பாரட்டுதலுக்கு, மகிழ்ந்தேன்...

ரேவா சொன்னது…

சரியில்ல....... கூறியது...

ச்சே.... உங்களுக்குள்ள ஒரு குட்டி 'தாமரை' குடியிருக்காங்க..... மறக்காமல் வாடகை வாங்கிக்குங்க.....

இது சரியில்லையே, ஹி ஹி நன்றி உங்கள் வருகைக்கு சகோ... தொடர்ந்து வாருங்கள் :)

ரேவா சொன்னது…

veedu கூறியது...

வேரோடு பிடிங்கி வேறிடத்தில் வைக்கப்பட்ட மரம் அன்பு எனும்
தண்ணீரால் தழைக்கலாம்...
அதன் துளிர்களில்
தான் வாழ்ந்த இடத்தின்...
பெருமைகள் அடங்கியிருக்கும்...

மிகச்சரியாக சொன்னீர்கள் சகோ, அன்பால் தான் மனித உயிர் தழைக்கும்... மிக்க நன்றி உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்... தொடர்ந்து வாருங்கள் :)

ரேவா சொன்னது…

இந்திரா கூறியது...

இந்தப் பதிவிற்குப் பின் எழுதிய சமீபத்திய பதிவிற்கு கருத்து சொல்ல வந்தேன்.
ஆனால் comment box திறக்கவில்லை.
ஆதலால் இங்கே..

//புரியாத அன்புக்கு அருகில்
இருந்து பயனிலை //

அர்த்தமுள்ள ஆழமுள்ள வரிகள்.
பலருடைய மனநிலை இதுதான்.
ஆனால் பயனில்லை எனத் தெரிந்தும் விலக முடிவதில்லையே.. காரணம் புரியாத புதிராய் வாழ்க்கை.

அருமையான பதிவு.
பாராட்டுக்கள்.

முதலில் மன்னிக்கவும் தோழி, என் உற்ற நட்பாய் நான் முதலில் கருதுவது என் தளத்தைய்தான், என் சந்தோஷங்களையும் , சோகங்களையும் இங்கே தான் முதலில் சொல்வேன், ஏதோ ஒரு மனக்கசப்பில் எழுதியது, அதனாலே கருத்துப்பெட்டியை நீக்கினேன்..
உங்கள் வருகைக்கு மிக்க நன்றி தோழி, இனி வரும் பதிவுகளில் உங்கள் வரவை எதிர்பார்க்கிறேன்....

ரேவா சொன்னது…

siva sankar கூறியது...

:)so sweet revakkka

thankyou so much siva brother..............

bala சொன்னது…

உன் பிரமாண்டம்
என்னை பயமுறுத்த,
அம்மாவின் இடத்தில் அத்தையும்,
அப்பாவின் இடத்தில் மாமாவையும்,
தம்பியின் இடத்தில் கொழுந்தனையும்,
தங்கையின் இடத்தில் நாத்தனாரையும்,
என் இஷ்ட தெய்வத்தின்
இடத்தில் உன் குலதெய்வத்தையும்,
வைக்கையில் உணர்ந்தேன்
ஆணாய் பிறந்திருக்கலாம் என்று..

penkalin manathai padam pidithirukkum kavithai thozhiye superb mega arumai
kavithaiil etharththam irukinrathu
vazhthukkal reva

veedu சொன்னது…

"சகோ உங்கள் வலையினை வலைசரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளோம் நன்றி

ரேவா சொன்னது…

bala கூறியது...

மிக்க நன்றி சகோ உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்.,...தொடர்ந்து வாருங்கள் :)

ரேவா சொன்னது…

veedu கூறியது...

"சகோ உங்கள் வலையினை வலைசரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளோம் நன்றி

மிக்க நன்றி சகோ என்னை அறிமுகப்படுத்தியதற்க்கு...

தீபிகா(Theepika) சொன்னது…

உயிர் கொடுத்த
உறவில் தொடங்கி,
அடித்து விளையாடும்
என் உடன்பிறந்தவரில் இருந்து ,
விரும்பிக் குடித்த
தேநீர் குவளை,
அணைத்துறங்கும்
என் செல்ல பொம்மையென,
அனைவரையும்
நீ சூடிய
ஒற்றை கயறோடு
பிரிந்து வந்தாகிற்று...
------------

இன்றும்..என்றும்
இந்த ஏக்கங்களை..
பெண்கள் சுமப்பது உண்மை.
வாசிக்கிற போதே...
வலிக்கிற பொழுது..
எழுதும்போது..உங்கள்
இதய உலை..எப்படி கொதித்திருக்கும்?

எத்தனை சொட்டு
கண்ணீர்த்துளிகள் இந்த
கவிதை எழுதிய காகித்தில் விழுந்து
காய்ந்திருக்கும்.

எல்லாம் புரிந்து கொள்கிற
ஆயிரம் மனிதர்கள் வேண்டாம்.
ஒரே ஒரு கணவன்
துணையிருந்தால் போதுமே..

தங்கள் எழுத்துக்களின் வலிகளை
சத்தியத்தன் வார்த்தைகள்
என்று வழிமொழிகிறேன்.

தீபிகா.

பெயரில்லா சொன்னது…

நண்பர்களே. உங்கள் புதிய பதிவுகளையும் காலத்தால் அழியாத பழைய பதிவுகளையுத் தமிழ் திரட்டிகளில் புதிய வரவாக வந்துள்ள கூகிள்சிறியில் இணைக்கலாமே? நீங்களாகவே உடனுக்குடன் உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் Subject பகுதிக்குள்ளும் பதிவின் சுருக்கத்தையும் இணைப்பையும் Body பகுதியிலும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.உங்கள் பதிவுகள் உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் தன்னியக்க முறையில் பிரசுரமாகும்.

நன்றி
யாழ் மஞ்சு

sathish prabu சொன்னது…

//சுமக்க முடிய மனச்சுமை
என்னை பயமுறுத்த,
புதிதாய் கிடைத்த
சொந்தகளின் சிரிப்பும்
அன்னியமாய்த் தெரிய,
ஆறுதல் என்னவோ
ஆழப் பொதிந்திருந்த
உன் மீதான நம்பிக்கை
மட்டும் தான்.

உயிர் கொடுத்த
உறவில் தொடங்கி,
அடித்து விளையாடும்
என் உடன்பிறந்தவரில் இருந்து ,
விரும்பிக் குடித்த
தேநீர் குவளை,
அணைத்துறங்கும்
என் செல்ல பொம்மையென,
அனைவரையும்
நீ சூடிய
ஒற்றை கயறோடு
பிரிந்து வந்தாகிற்று...

உன் பிரமாண்டம்
என்னை பயமுறுத்த,
அம்மாவின் இடத்தில் அத்தையும்,
அப்பாவின் இடத்தில் மாமாவையும்,
தம்பியின் இடத்தில் கொழுந்தனையும்,
தங்கையின் இடத்தில் நாத்தனாரையும்,
என் இஷ்ட தெய்வத்தின்
இடத்தில் உன் குலதெய்வத்தையும்,
வைக்கையில் உணர்ந்தேன்
ஆணாய் பிறந்திருக்கலாம் என்று..//

ஒரு ஆணாய் என்னை குற்ற உணர்வு கொள்ளவைக்கிறது.. கவிதை.. மிகச் சிறந்த படைப்பாக வந்திருக்கிறது..