பிரிதல் எனும்
உடன்படிக்கையின் வாயிலாய்
உன்னை பிரிந்தாகிற்று,
ஆயினும்,
களைக்கப்படாத
செய்தித்தாள்களில்,
வரிசையாய் அடுக்கப்பட்ட
காலனிகளில்,
சீப்பில் சிக்கிய
உன் கற்றை முடியில்,
படுக்கை கசங்காத
விரிப்புகளில்,
சரியாய் வரிசைப்படுத்தப்படாத
என் முகப்பூச்சுகளில்,
நீ பாதி படித்து முடித்த
புத்தக்கத்தில்,
சுவர் எங்கும்
இருக்கும் உன் முத்த கிறுக்கலில்,
காதல் கக்கும் நாட்குறிப்பில்,
என
அத்தனையிலும்
அழிக்கப்படா உன் நினைவுகள்
எனக்கு நினைவு படுத்துகின்றன...
காதல் சில நேரம் கொடுமையானதென்று...
7 கருத்துகள்:
குறும்பு செய்யும் குழந்தைகளை செல்லமாக குட்டி நாயே என்று திட்டுவது காதல் செய்வதையும் செல்லக் கொடுமை என சொல்லலாம்..சிறப்பு.
அழகிய கவிதை வரிகள் வாழ்த்துகள்.
///காதல் சில நேரம் கொடுமையானதென்று...///
மிக மிக கொடுமையானதென்று...
மதுமதி கூறியது...
குறும்பு செய்யும் குழந்தைகளை செல்லமாக குட்டி நாயே என்று திட்டுவது காதல் செய்வதையும் செல்லக் கொடுமை என சொல்லலாம்..சிறப்பு.
சரியாய் சொன்னீர்கள் சகோ... நன்றி உங்கள் முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும்.. தொடர்ந்து வாருங்கள்...
dhanasekaran .S கூறியது...
அழகிய கவிதை வரிகள் வாழ்த்துகள்.
நன்றி சகோ :)
HOTLINKSIN.com திரட்டி - வலைப்பதிவர்களின் சங்கமம் கூறியது...
///காதல் சில நேரம் கொடுமையானதென்று...///
மிக மிக கொடுமையானதென்று...
உண்மைதான்...:) நன்றி உங்கள் முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும்.. தொடர்ந்து வாருங்கள்...
அத்தனையிலும்
அழிக்கப்படா உன் நினைவுகள்
எனக்கு நினைவு படுத்துகின்றன...
காதல் சில நேரம் கொடுமையானதென்று...
அருமை ரேவா.
பிரிந்த பின் காதல் கொடுமை ஆனது தான் :-)
கருத்துரையிடுக