உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

திங்கள், 18 ஜூன், 2012

இப்படியாய் சில அறிமுகம்.....



என் நண்பனின் நண்பனாய்
முன்பொரு தருணத்தில்
நீ
எனக்கு அறிமுகமானதாய்
ஞாபகம்....

 இன்று
பரஸ்பர அறிமுகத்துக்குபின்
சிக்கன சிரிப்பில்
சிறைபிடித்துக்கொண்டேன்
உன் சிநேகத்தை..

உள்ளுக்குள் ஒர் உராய்வு
உந்தன் விழிகள்
என்னை நோக்குகையில்..
வெளிகாட்டா வகையில்
கடந்து சென்றேன்
அவ்விழியிடம்...

பேசிக்கொண்டே நீ இருக்க
கேட்டுக்கொண்டே நான் மறக்க
தொலைத்திருந்தோம்
சில மணி நேரங்களை...

தூரத்தில் கடக்கும் ரயிலிருந்து
தூரல்விழும் மழையில்,
தொடங்கி
எதிர் இருக்கை குழந்தையின் சிரிப்புயென
அர்த்தமில்லாமல் அடித்து பெய்தது
நம் உரையாடல்.....

உன் தோளில் நான் உறங்கிப்போக
தூக்கிவைத்தால் கலைந்திடுமோயென்று
என் கவனமீர்த்தாய்
கலைந்த தூக்கத்தின் நடுவே...

கேட்க நான் மறந்து
கொடுக்க நீ மறந்த
தொலைபேசி எண்ணில்
தொலைக்கப்பட்டிருந்தது
எப்போதும் போல
இந்த இரயில் சினேகிதமும்..........


31 கருத்துகள்:

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

இரயில் ஸ்நேகம் பற்றிய வெகு அழகான கவிதை வரிகள்.

// இன்று
பரஸ்பர அறிமுகத்துக்குபின்
சிக்கன சிரிப்பில்
சிறைபிடித்துக்கொண்டேன்
உன் சிநேகத்தை..// ;)

பாராட்டுக்கள்.

MARI The Great சொன்னது…

கவிதையின் பல வரிகள் ரசிக்க வைத்தது.!

சசிகலா சொன்னது…

பேசிக்கொண்டே நீ இருக்க
கேட்டுக்கொண்டே நான் மறக்க
தொலைத்திருந்தோம்
சில மணி நேரங்களை...
ரசித்த வரிகள் அருமை சகோ .

செய்தாலி சொன்னது…

ரயில் சிநேகத்தின்
உணர்வு வெளிப்பாடு மிகவும் அருமை சகோ

ஆத்மா சொன்னது…

நல்ல கவிதை...:)
நண்பர்கள் நண்பர்களாவது இப்படித்தான்

///
என் நண்பனின் நண்பனாய்
முன்பொரு தருணத்தில்
நீ
எனக்கு அறிமுகமானதாய்
ஞாபகம்....///

மகேந்திரன் சொன்னது…

படபடக்கும் வண்ணத்துப் பூச்சிபோல
அழகாய் உருவான சிநேகம்
இமை மூடி விழிப்பதற்குள்
காணாமல் போனதோ....

அருமையா எழுதி இருக்கீங்க சகோதரி...

கவி அழகன் சொன்னது…

பாராட்டுக்கள்.

S.A. நவாஸுதீன் சொன்னது…

Arumaya vanthirukku. I love it.

கீதமஞ்சரி சொன்னது…

\\பேசிக்கொண்டே நீ இருக்க,
கேட்டுக்கொண்டே நான் மறக்க\\

இந்த வரிகளில் வெளிப்படுகிறது, சிநேகம் தாண்டிய துள்ளல் ஒன்று.

தொலையவிரும்பாத சிநேகம் ஒன்று, தன்னைத்தானே தன்னில்தானே தொலைக்கமுற்பட்டு, தோற்றுப்போனது, பரிமாறப்படாத இலக்கங்களின் காரணமாய்.

மனம் தொட்ட கவிதை. பாராட்டுகிறேன் ரேவா.

அனைவருக்கும் அன்பு  சொன்னது…

உண்மையில் உணர்ந்த வரிகள் சில படிக்கும் போதே காட்சிகள் கண்முன் ......அருமை

கோவி சொன்னது…

nice..

'பரிவை' சே.குமார் சொன்னது…

பேசிக்கொண்டே நீ இருக்க
கேட்டுக்கொண்டே நான் மறக்க
தொலைத்திருந்தோம்
சில மணி நேரங்களை...

ரசித்தேன்.

வரிக்கு வரி அருமை.

Unknown சொன்னது…

பேசிக்கொண்டே நீ இருக்க
கேட்டுக்கொண்டே நான் மறக்க///
உன் தோளில் நான் உறங்கிப்போக
தூக்கிவைத்தால் கலைந்திடுமோயென்று
என் கவனமீர்த்தாய்
கலைந்த தூக்கத்தின் நடுவே...//

கவிதைக்கு பொய்யழகு ன்னு சொல்வாங்க..
உங்க கவிதைக்கு மெய் யே அழகு!!!
சூப்பர்

Unknown சொன்னது…

வை.கோபாலகிருஷ்ணன் கூறியது...

இரயில் ஸ்நேகம் பற்றிய வெகு அழகான கவிதை வரிகள்.

// இன்று
பரஸ்பர அறிமுகத்துக்குபின்
சிக்கன சிரிப்பில்
சிறைபிடித்துக்கொண்டேன்
உன் சிநேகத்தை..// ;)

பாராட்டுக்கள்.

நன்றி உங்கள் முதல் வருகைக்கும் பாராட்டுதலுக்கும் தொடர்ந்து வாருங்கள் ஜயா :)

Unknown சொன்னது…

வரலாற்று சுவடுகள் கூறியது...

கவிதையின் பல வரிகள் ரசிக்க வைத்தது.!

நன்றி சகோ உங்கள் ரசிப்பிற்கும் வருகைக்கும்....

Unknown சொன்னது…

Sasi Kala கூறியது...

பேசிக்கொண்டே நீ இருக்க
கேட்டுக்கொண்டே நான் மறக்க
தொலைத்திருந்தோம்
சில மணி நேரங்களை...
ரசித்த வரிகள் அருமை சகோ .


நன்றி சசி )

Unknown சொன்னது…

செய்தாலி கூறியது...

ரயில் சிநேகத்தின்
உணர்வு வெளிப்பாடு மிகவும் அருமை சகோ


மிக்க நன்றி சகோ உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் :)

Unknown சொன்னது…

சிட்டுக்குருவி கூறியது...

நல்ல கவிதை...:)
நண்பர்கள் நண்பர்களாவது இப்படித்தான்

///
என் நண்பனின் நண்பனாய்
முன்பொரு தருணத்தில்
நீ
எனக்கு அறிமுகமானதாய்
ஞாபகம்....///

உண்மை தான் சகோ :) நண்பனின் நண்பன் எனக்கும் நண்பன் :)

Unknown சொன்னது…

மகேந்திரன் கூறியது...

படபடக்கும் வண்ணத்துப் பூச்சிபோல
அழகாய் உருவான சிநேகம்
இமை மூடி விழிப்பதற்குள்
காணாமல் போனதோ....

அருமையா எழுதி இருக்கீங்க சகோதரி...

அழகான மறுமொழியோடு உற்சாகம் தந்த அண்ணனுக்கு நன்றி :)

Unknown சொன்னது…

கவி அழகன் கூறியது...

பாராட்டுக்கள்.

நன்றி சகோ :)...

Unknown சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
Unknown சொன்னது…

நவாஸுதீன் கூறியது...

Arumaya vanthirukku. I love it.thirukku. I love it.

மிக்க நன்றி சகோ உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் :)

Unknown சொன்னது…

கீதமஞ்சரி கூறியது...

\\பேசிக்கொண்டே நீ இருக்க,
கேட்டுக்கொண்டே நான் மறக்க\\

இந்த வரிகளில் வெளிப்படுகிறது, சிநேகம் தாண்டிய துள்ளல் ஒன்று.

தொலையவிரும்பாத சிநேகம் ஒன்று, தன்னைத்தானே தன்னில்தானே தொலைக்கமுற்பட்டு, தோற்றுப்போனது, பரிமாறப்படாத இலக்கங்களின் காரணமாய்.

மனம் தொட்ட கவிதை. பாராட்டுகிறேன் ரேவா.

சரியான புரிதலோடு அக்கா இட்ட இந்த மறுமொழி என் உள்ளம் தொட்டது :)

Unknown சொன்னது…

கோவை மு.சரளா கூறியது...

உண்மையில் உணர்ந்த வரிகள் சில படிக்கும் போதே காட்சிகள் கண்முன் ......அருமை


மிக்க நன்றி தோழி உங்களின் உற்சாக மறுமொழிக்கு :)

Unknown சொன்னது…

கோவி கூறியது...

nice..


நன்றி சகோ :)

Unknown சொன்னது…

சே. குமார் கூறியது...

பேசிக்கொண்டே நீ இருக்க
கேட்டுக்கொண்டே நான் மறக்க
தொலைத்திருந்தோம்
சில மணி நேரங்களை...

ரசித்தேன்.

வரிக்கு வரி அருமை.

மிக்க நன்றி அண்ணா வெகு நாள் கழித்து தளம் வந்திருப்பதாய் அறிகிறேன் தொடர்ந்து வாருங்கள் :)

Unknown சொன்னது…

Kamalakkannan c கூறியது...

பேசிக்கொண்டே நீ இருக்க
கேட்டுக்கொண்டே நான் மறக்க///
உன் தோளில் நான் உறங்கிப்போக
தூக்கிவைத்தால் கலைந்திடுமோயென்று
என் கவனமீர்த்தாய்
கலைந்த தூக்கத்தின் நடுவே...//

கவிதைக்கு பொய்யழகு ன்னு சொல்வாங்க..
உங்க கவிதைக்கு மெய் யே அழகு!!!
சூப்பர்


மிக்க நன்றி சகோ பொய்யும் மெய்யுமாய கலந்திருக்கும் இந்த கவிதையை ரசித்தமைக்கு :)

சீனு சொன்னது…

// உன் தோளில் நான் உறங்கிப்போக
தூக்கிவைத்தால் கலைந்திடுமோயென்று
என் கவனமீர்த்தாய்
கலைந்த தூக்கத்தின் நடுவே...//

காதல் பொங்கும் அற்புதமான வரிகள் அருமை படித்தேன் ரசித்தேன்

Moortthi JK சொன்னது…

அன்பு தோழி, தங்கள் என் வலைத்தளத்தில் இணைந்து நெடு நாள் ஆகிறது. ஆனால் நான் இன்று தான் தங்கள் வலைதளத்தை எட்டி பார்த்தேன்.... அப்பா என்ன வரிகள்..... நிறைய படிக்கிற பழக்கம் என்னிடம் உண்டு. கண்டிப்பாக உங்கள் தொகுப்புகளை ஒன்று விடாமல் படிப்பேன். சமயம் கிடைக்கும் பொது என்னுடைய வலை தளத்தையும் எட்டி பார்க்கவும். கொஞ்சம் குப்பை தான், தயவு செய்து சகித்துகொள்ளவும்.

என்னை கவர்ந்த வரிகள்:

உன் தோளில் நான் உறங்கிப்போக
தூக்கிவைத்தால் கலைந்திடுமோயென்று
என் கவனமீர்த்தாய்
கலைந்த தூக்கத்தின் நடுவே...

அழகான நட்பை என்னுள் உணர்கிறேன்...... நன்றி...

Seeni சொன்னது…

appadi enna thookkam!?

rasikkumpadiyaaka irunthathu!0

...αηαη∂.... சொன்னது…

ரசிச்சு எழுதி இருக்கிங்க.. குட்