உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

சனி, 9 ஜூன், 2012

பயணங்கள் புதிதில்லை...ஆனாலும் புதிதாய்.....


வணக்கம் உறவுகளே... அனைவரும் நலமா?.... கவிதை தளத்தில் பயணங்கள் பற்றி பகிர்ந்திட நினைத்ததின் நோக்கம், சில பயணங்கள் நாம் நினைத்ததையும் தாண்டி ஏதோ ஒரு மாற்றத்தை நிகழ்த்திவிட்டு போகும், அப்படி எனக்குள்ளான மாற்றங்களை எழுத்தில் ஏற்றிடத்தான் இந்த பதிவு... ஏற்கனவே என் சென்னை வாழ்க்கையை பற்றி தொடர ஆரம்பிச்சு இன்னைக்கு தொடரமுடியாமல் இருப்பது வருத்தமா இருந்தாலும், இதுவும் சென்னையப்பற்றிய பதிவுதான்ங்கிறது கொஞ்சம் ஆறுதலான விஷயமா இருக்கு...

சென்னை எனக்கு ரொம்ப பிடிச்ச ஊர்ன்னு சொல்லலாம்..எப்பவும் ஓடிட்டே இருக்கிற மனுசங்க, பரபரப்பா எதையாவது தேடிட்டே இருக்கிற முகங்கள், கொஞ்சம் அசந்தாலும் முளைச்சலவை மூலம் சாயம் போக காத்திருக்கும் வாழ்க்கைன்னு பல முகங்களை தனக்குள்ள வச்சுக்கிட்டு சக்கரமா சுத்துற ஊரு... சென்னையில வேலையவிட்டு வந்தப்பயெல்லாம் மாதம் ஒரு தடவைன்னு சென்னைக்கு போய் என் நினைவுகளை புதுப்பிச்சுட்டு வருவேன்... இப்ப அப்படியெல்லாம் இருக்க முடியலை... குடும்ப சூழல் ஒரு பக்கம் கழுத்தை நெறிக்க, சென்னை தந்த நினைவுகள் கொஞ்சம் கனக்கன்னு காலம் எப்படியோ போயிட்டு இருக்கு...வருடம் ஒன்னாச்சு சென்னைக்கு போயி.. என் நினைவுகளை சுமந்துகிட்டு இருக்கிற பழைய இடங்கள் எல்லாம் எப்படி இருக்கும்ன்னு அப்ப அப்ப நினைச்சு பார்க்கிறது உண்டு...

இப்ப மே மாதம் இறுதியில் சென்னைக்கு போகுற வாய்ப்பு கிடைச்சது... பல எதிர்பார்ப்புகளை சுமந்துகிட்டு தாயத்தேடி ஓடும் பிள்ளையா சென்னைய நோக்கி வந்தேன்...அப்பப்பா எத்தனை மாற்றம் இந்த ஒருவருட காலத்தில் சென்னை சந்திச்சிருக்கு... சென்னையில எனக்கு மனசுக்கு நெருக்கமான இடம்ன்னா டி. நகர் வீதிகள் தான், நான் வேலை பார்த்த பகுதியென்பதால் அங்கு அங்கு என் பிள்ளை குறும்புகள் கொட்டிக்கிடக்கின்ற இடம் அது...
டி நகர் வீதியில் தொடங்கி போக் ரோடுகள் வரை ரொம்ப பரிச்சையமான வீதிகள்.. காலமாற்றத்தில் வந்திட்ட மாற்றங்கள் தான் எத்தனை எத்தனை...

  நான் சென்னையில பணிபுரிந்த காலங்களில் தான் லூக்காஸ் பாலம் கட்டுமானப்பணிகள் ஆரம்பமாகின, அப்ப எல்லாம் அந்த இடம் வாகன நெருக்கடிகளால் மூச்சுத்தெணரி நிற்கும்.. இன்று பணிகள் நிறைவடைந்து அதோட பிரம்மாண்ட தோற்றத்தப்பார்க்கும் போது ரொம்ப மகிழ்ச்சியாகவும், பல சோகங்களை போக்க அந்த கட்டுமானப்பணிகளுக்கு வெளி ஊர்ல இருந்து வந்து டெண்ட் போட்டுகிட்டு வேலை பார்த்த அந்த சகோதரர்களின் முகமும் நினைவுக்கு வந்து போகுது...

எப்போதும் பஸ் பயணித்தில் அதோட அழகை ரசிச்ச எனக்கு என் தம்பியோட இரு சக்கர வாகனத்தில் பயணம் செய்தது மகிழ்ச்சியாகவும் புது சந்தோஷத்தையும் தந்தது..அவனுக்கு பழக்கப்பட்டுப்போன இந்த வசதிகளுக்கு பின்னான ஆரம்ப கட்ட செய்திகளை சொல்லிகிட்டே அந்த இடம் விட்டு நகர்ந்தேன்...

அடுத்து என்னோட பல நினைவுகளை ஒளிச்சு வச்சுகிட்டு இருக்கிற இடம் கோயம்பேடு வீதிகள், நாதன்ஸ் கபேல தொடங்கி கோயம்பேடு மார்கெட், விஜயகாந்த் கல்யாண மண்டபம், அப்பறம் ரோகிணி தியேட்டர் வரைக்கும் பஸ்க்காக காத்திருந்த நாட்களில் தோழமைகளோடு கதை பேசி நடந்ததுண்டு, இன்று மெட்ரோ ரயில் திட்டத்திற்க்கான வேலைகளால் பழைய முகத்தை கொஞ்சம் மறைச்சுவச்சுகிட்டு என்னை வரவேற்றது அந்த வீதிகள்.. சில நினைவுகளை மீட்டெடுத்து மீளமுடியா நினைவுகளோடு திரும்பி வந்தேன்... கோயம்பேடு நிறுத்ததில் அமர்ந்துகொண்டு பல சாயல் கொண்ட முகங்களையும் மனிதர்களையும் எவ்வளவு நேரம் வேணாலும் பார்க்கிற தியானம் எனக்கு ரொம்ப பிடிக்கும்...

அடுத்து கோடம்பாக்கம் வீதிகள், ஹாஸ்டலுக்காக அலையோ அலையோன்னு நண்பர்களோட அலைஞ்ச இடம், என் வயதிற்கே ஆனா குறும்புத்தனங்களால் பிரச்சனைகளை ஹேண்ட் பேக்ல போட்டுட்டு சுத்துன சந்தோஷ காலம்...கோடம்பாக்கம் ரயில் நிலையத்துல டிக்கெட் கவுண்டருக்கு எதிரில் இருக்கும் இரண்டாவது இருக்கைகளில் எப்போதும் அமர்ந்திருக்கும் என் நண்பனின் முகம் இன்னும் அவ்விடங்களை கடக்கும் போதெல்லாம் என்னை பார்த்து சிரிப்பதாய் ஒரு உணர்வு...இவ்வீதிகளும் மெட்ரோ திட்டத்தில் மாறித்தான் போயின.

டி. நகருக்கு அடுத்து நான் பணிபுரிந்த இடம் மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ளது..ஆரம்பத்தில் இந்த வீதிகளின் மீது பெறிதும் ஈடுபாடு இல்லாமல் போனாலும் போகப்போக ரொம்ப பிடிக்க ஆரம்பிச்சிடுச்சு... சென்னையோட இன்னொரு முகம் ஜெமினி தொட்டாலே தெரிஞ்சிடும்..அந்த பரந்த வீதிகளில் பயணம் செய்யுறதே அலாதிதான், அதுவும் இரவு நேரங்களில் 29C க்கு காத்துகிடந்து கூட்டத்தில காணமப்போற பலருல நானும் ஒருத்தி...
எப்படியோ வாழும் சூழலை மாத்திக்க பலரும் போன சென்னைக்கு நானும் போனேன்..ஆனாலும் என் மதுரைக்கு அடுத்து நான் அதிகம் நேசிக்கிற இடம் சென்னை தான்...ஆரம்பகாலத்தில் சென்னை மீது வெறுப்பு வந்தாலும் வாழும் முறைய சொல்லிக்கொடுத்தது சென்னை தான்...தோல்விகளும் வலிகளும் அதிகம் என்றாலும் வாழ்வை சொல்லிகொடுத்தது சென்னை தான்......

சென்னை பத்தி சொல்லனும்னா சொல்லிட்டே இருப்பேன்...இந்த பயணம்  நான் நினைச்ச படி இருந்ததான்னா இல்லைன்னு தான் சொல்லனும், இங்க பழைய நினைவுகளை புதுப்பிச்சுக்கிட்டாலும் அந்த நினைவுகளை தந்த பல உறவுகள் இன்னைக்கு காலப்பிரட்சியால காணமப் போனதும், பல நண்பர்களின் கல்யாணத்தின் மூலம் நட்புக்கு முற்று புள்ளி வைத்ததும், பலர் தொடர்பை துண்டித்தும், துண்டிக்கப்பட்டும் தொலைந்து போன நட்பின் தொலையா நினைவுகளால் ஒருவாறு மனம் கனத்து போய் தான் அந்த நினைவுகளை எடுத்துட்டு வந்தேன்... இறுதியா சொல்லனும்னா I Miss You...................


I miss you all the time, but I miss you most when i lay awake at night and think of all the wonderful times we spent with each other; for those were some of the best times of my life.


எதிர்பாராமல் சென்னை வந்ததால் பல உறவுகளை சந்திக்க முடியவில்லை, அதற்கு இந்த பதிவின் மூலம் மன்னிக்க வேண்டுகிறேன்...


10 கருத்துகள்:

பிரவின் குமார் சொன்னது…

வாவ்....!!! சென்னையை பற்றிய அருமையான மலரும் நினைவுகளின் பகிர்வு..! தங்களது அனுபவப் பகிர்வு சுவாரஸ்யமாகவும் ரசிக்கும்படியாகவும் உள்ளது..!! தொடரட்டும் தங்கள் பயணங்கள்...!! மாற்றம் ஒன்றே மாறாதது..!! போகப் போகப் அதுவும் மாறிப்போகும்..!! ஹி.. ஹி.. ஹி...

சிட்டுக்குருவி சொன்னது…

நல்லதொரு பயண அனுபவம்...:)

அங்கு அங்கு என் பிள்ளை குறும்புகள் கொட்டிக்கிடக்கின்ற இடம் அது...//

ம்ம்ம்ம்ம்ம்ம்ம் குறும்புக்காரி தொடருங்கள் உங்கள் சென்னைப் பயனத்தை

வரலாற்று சுவடுகள் சொன்னது…

நினைவுகளை அழகாய் பதிவிட்டுள்ளீர்கள் சகோ..,

புலவர் சா இராமாநுசம் சொன்னது…

சொல்லும் செய்தி எதுவானாலும் அதை சொல்லுகின்ற முறை சுவையாக இருக்கு மானால் முழுதும் படிக்கத் தூண்டும் என்பதற்கு தங்கள் பதிவு ஓர் எடுத்துக்காட்டு அருமை!

புலவர் சா இராமாநுசம்

த ம ஓ 3

Seeni சொன்னது…

anupavangal entrume-
puthumai!

Kamalakkannan c சொன்னது…

உலக்த்துலையே மிகவும் அசுத்தமான ஊர் சென்னைதான். நான் சிங்கப்பூர்,மலேசியா,தாய்லாந்த்,வியட்னாம்,ஆஸ்திரேலியா,லிபியா,இந்தோனேசியா ஆகிய நாடுகளின் சில நகரங்களுக்கு போயிருக்கேன்.ஆனா சென்னை மாதிரி அசுத்தத்தை பார்க்கல.சென்னை விமான நிலையம் வந்தா கூட நகரம் பக்கமே போக மாட்டேன்.இப்பலாம் திருச்சி விமான நிலையத்தைத்தான் பயன்படுத்துறேன்.

ரேவா சொன்னது…

Kamalakkannan c கூறியது...

உலக்த்துலையே மிகவும் அசுத்தமான ஊர் சென்னைதான். நான் சிங்கப்பூர்,மலேசியா,தாய்லாந்த்,வியட்னாம்,ஆஸ்திரேலியா,லிபியா,இந்தோனேசியா ஆகிய நாடுகளின் சில நகரங்களுக்கு போயிருக்கேன்.ஆனா சென்னை மாதிரி அசுத்தத்தை பார்க்கல.சென்னை விமான நிலையம் வந்தா கூட நகரம் பக்கமே போக மாட்டேன்.இப்பலாம் திருச்சி விமான நிலையத்தைத்தான் பயன்படுத்துறேன்.


உலகம் சுற்றும் சகோக்கு என் வணக்கம்... அசுத்தம் சுத்தம் எல்லாம் பேணி பாதுக்காக்க வேண்டியது நம்ம கையிலதான் இருக்கு.... எப்பவும் அடுத்தவர் மேல குறைகளை தூக்கி போடுற மனபாங்கு நம்மில பலருக்கு இருக்கு.. என்னையும் உட்பட இதை சொல்லுறேன்... எத்தனை பேரு இன்னைக்கு பயணவிதிகளை சரியா பின்பற்றுகிறார்கள் சொல்லுங்க? கிடையாது... அதோடு இது சுத்தம் பேசும் பதிவும் இல்லை....

என் அம்மா ஒப்பனைகள் இல்லாம இருந்தாலும் எனக்கு அழகு தான் அது போலத்தான் எனக்கு சென்னையும்..... ஒவ்வொருவருக்கு அவரவர் பார்வை சார்ந்த எண்ணம் இருக்கலாம்... இது என் எண்ணம்...

Athisaya சொன்னது…

சிறப்பான அனுபவப்பகிர்வு.உண்மை தான்.தாயும் தாய் தேசமும் ஒப்பனையற்ற அற்புததமான அழகு தான்.அதில் மறு கருத்தில்லை எனக்கு.ச்திப்போம் சொந்தமே

இராஜராஜேஸ்வரி சொன்னது…

சென்னையின் மலரும் நினைவுகள் ரசிக்கவைத்தன.. பாராட்டுக்கள்..

! ❤ பனித்துளி சங்கர் ❤ ! சொன்னது…

அதிகம் சுற்றியதில்லை ஆனால் அதையும் சரி செய்துவிட்டது இந்தப் பதிவு என்று சொல்வேன் . அருமையா அனுபவத் தொகுப்பு . வாழ்த்துக்கள்