உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

வியாழன், 7 ஜூன், 2012

சின்ன சின்னதாய் காதல்....4உனக்காக எங்கு காத்திருந்தாலும்
அவ்விடத்தையெல்லாம்
விட்டுவிட்டு
நீ இருக்கும் இடத்தை நோக்கியே
இழுத்துவருகிறது
மனது...

 உன் தோள்களில்
சாய்ந்துகொள்வதற்காவே
பேருந்து பயணத்தையே
தேர்வு செய்கின்றேன்யென்பதை
நீ அறிவாயா?........


 உன் அழகு சுமந்துவரும்
இந்த கவிதையை
இறக்க இடம் காணாமல்
தேடுகிறேன்
இப்புவி முழுவதும்....
கல்லில் சிலைவடிக்கும்
சிற்பியாய்
என்னில் காதல் வரவைத்த
கலைஞன்
நீ.........சிரிப்பதும்
பின் அணைப்பதுமாய்
நீள்கிறது
நம் சண்டைக்கு பின்னான
தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்.........

எத்தனையோ முறை
உன்னை மறக்க
முயற்சித்தும்
பூஜ்ஜியங்களிலே
வந்து முடிக்கின்றது
மனம்..........

 
மற்ற ஆணிடமிருந்து
உன்னை
தனித்து காட்டும் சொல்
காதல்.......


உன்னை நினைத்தவுடனே
கண் முன்னே கட்டிப்போட
எப்படி தெரிகிறது
என் கவிதைக்கு..
 
உன் நினைவுத்தலையணையில்
பத்திரமாய் உறக்குகிறது
என் காதல்......


ஊரெங்கும் அடைமழை
உள்ளுக்குள் நிறைந்து
வழிகிறாய்
நீமுந்தைய பதிவு : 10 கருத்துகள்:

கோவி சொன்னது…

சூப்பரான கவிதைகள்..

Seeni சொன்னது…

sinna kavithai!

silirkka vaiththa kavithai!

Ramani சொன்னது…

மனம் கவர்ந்த அருமையான கவிதை
தொடர வாழ்த்துக்கள்

Ramani சொன்னது…

Tha.ma 1

செய்தாலி சொன்னது…

இதமாய்
வருடுகிறது
சின்ன சின்ன காதல் துளிகள்

Sasi Kala சொன்னது…

ஊரெங்கும் அடைமழை
உள்ளுக்குள் நிறைந்து
வழிகிறாய்
நீ// காதல் மொழி ததும்புகிறது வரிகளில் .

இந்திரா சொன்னது…

//எத்தனையோ முறை
உன்னை மறக்க
முயற்சித்தும்
பூஜ்ஜியங்களிலே
வந்து முடிக்கின்றது
மனம்..........//


அழகான வலி..
கசக்கும் மருந்து போல.

நிலவன்பன் சொன்னது…

ஊரெங்கும் அடைமழை
உள்ளுக்குள் நிறைந்து
வழிகிறாய்
நீ
/// நைஸ்

பிரவின் குமார் சொன்னது…

அனைத்துக் கவிதைகளும் அருமையாக உள்ளது.

S.டினேஷ்சாந்த் சொன்னது…

காதல் நிரம்பி வழிவது
காதலர் மனத்தில் மட்டுமல்ல
உங்களின் கவிதைகளிலும் தான்