உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

வியாழன், 21 ஜூன், 2012

சற்றுமுன் நடந்த கொலை....
ஊரெல்லாம் உறங்கிப்போன
ஓர் இரவில்
உறக்க மறந்த நிமிடங்களினால்
உறைந்து போய் நானிருக்க,

அறையின் ஓரத்தில் யாரோ
அழுவதுபோன்ற குரல் 
அடித்துப்போட்டது 
என் கவனத்தை..

கவனமீர்த்த திசைநோக்கி
 நடந்துசெல்கிறேன்,
மீதமாய் மிதந்தலையும்
அவன் நினைவுகள்
கழுத்தை நெறிக்க
கண்ணீரோடு கரைந்து போயிருந்தேன்...

 பின் நிதானம் பிடிபட
மெல்ல மெல்ல 
அழுகைவந்த இடம் சென்றடைந்தேன்..
சற்றுமுன் உக்கிர நடனம்
ஆடிவிட்டுச்சென்ற காதலின்
வார்த்தை சலங்கைகள்
அங்கங்கே  சிதறிக்கிடக்க,
அதை ஒவ்வொன்றாய் கோர்த்து
பார்த்து பார்த்து
அழுதுகொண்டிருந்தது
இந்த பொல்லாத
காதல்..........

மரணம் சில
வார்த்தைகளால் கூட
நிகழ்ந்துவிடும்.....................
14 கருத்துகள்:

இந்திரா சொன்னது…

இந்தக் காயங்கள் வடுக்களானாலும் வலி மட்டும் குறைவதே இல்லை..

இந்திரா சொன்னது…

இந்தக் காயங்கள் வடுக்களானாலும் அதன் வலி மட்டும் என்றும் குறைவதேயில்லை..

S.A. நவாஸுதீன் சொன்னது…

Vaarthaikal kooda vendam, sila nerangalil siru paarvai ondre pothum sileerendra valiyodu uyir pirikka.

செய்தாலி சொன்னது…

//மரணம் சில
வார்த்தைகளால் கூட
நிகழ்ந்துவிடும்.....................//

கண்டிப்பா சகோ

கவிதை சொன்னவிதமும் சொல்லாக்கமும்
மிக அழகாய் யதார்த்தமாய்

சிட்டுக்குருவி சொன்னது…

வாவ்.........wow...:)

சிட்டுக்குருவி சொன்னது…

மரணம் சில
வார்த்தைகளால் கூட
நிகழ்ந்துவிடும்.....................//

உண்மையை அழகாக சொல்லியிருக்கிறீர்கள் வார்த்தைகளை அல்லி வீசிவிட்டு பின் ஏண் இப்படி கதைத்தோம் என்று நிம்மதியில்லாமல் அலையும் எத்தனையோ நல்ல உள்ளங்களைப் பார்த்திருக்கிறேன்....:)

Sasi Kala சொன்னது…

அப்பப்பா வார்த்தை சலங்கை சத்தம் கேட்கிறது சகோ . அருமை .

மதுமதி சொன்னது…

கொன்று விட்டீர்கள்..

வரலாற்று சுவடுகள் சொன்னது…

அருமை.!

கோவி சொன்னது…

super..

Athisaya சொன்னது…

அப்பாபாபாபா...எத்தனை வலிகள்.அப்படியே உண்மைதான்..உங்கள் கவதைக்கு என் கண்கள் கூட ஙங்கீகதரம் தந்துவிட்டன...!சந்திப்போம் சொந்தமே..

Seeni சொன்னது…

kaayangal kaayum!

விஜயன் சொன்னது…

தங்கள் கவிதை அருமையாக உள்ளது .,
//வார்த்தை சலங்கைகள்//
அழகான உவமை

கீதமஞ்சரி சொன்னது…

ரேவா, சதங்கையின் புலம்பல் ஒலி கவிதை முழுவதும் எதிரொலித்து மனம் பிசைகிறது. அருமை.