உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

சனி, 16 ஜூன், 2012

புரியாக்காலமது...




புழுதிமண் பரக்க
நாம்
விளையாண்ட விளையாட்டில்
விளையாட்டாய் விடப்பட்ட
வார்த்தைகளில் விரிசல்கண்ட
பிரியமது....

உண்மைக்கும் பொய்மைக்கும்
சரிக்கும் தவறுக்கும்
வித்தியாசம் பெரிதாய்  விளங்கிடாத
வயதுமது...

இருந்த பிரியங்களையும் 
புரிந்த சண்டைப்புதைமணலில்
புதைத்துக்கொண்ட
பருவமது...

கிட்டகிடைந்த அன்பிலிருந்து
கிட்டதட்ட பிரிந்த
வேளையது..

வேண்டுமென்றே தவிர்த்த நேரத்திலும்
வேண்டாமென்று இருந்த பொழுதிலும்
துயரம் நிறைத்து தூரமாகிப்போன
ப்ரியமது..


இன்று
காலம் நகர்ந்தாலும்
காயம் மறைந்தாலும்
உன்னைக்காணும் நாட்களில்
மட்டும்
நாம் சண்டையிட்ட
திண்ணைக்குப்பின்
தேடிப்பார்க்கின்றேன்
தவறவிட்ட பிரியமொன்றின்
புரியாக்காலத்தை....


28 கருத்துகள்:

S.A. நவாஸுதீன் சொன்னது…

Adikkadi vanthu pohum antha urainilai unarvual veyil padathil varum paadal kaatchi pola pasumayaai maatrivittathu ungalin varikal.

Yaathoramani.blogspot.com சொன்னது…

இன்று
காலம் நகர்ந்தாலும்
காயம் மறைந்தாலும்
உன்னைக்காணும் நாட்களில்
மட்டும்
நாம் சண்டையிட்ட
திண்ணைக்குப்பின்
தேடிப்பார்க்கின்றேன்
தவறவிட்ட பிரியமொன்றின்
புரியாக்காலத்தை....


நானும் தேடித் திரிந்திருக்கிறேன்
ஆனால் இத்தனை அழகாக
சொல்லத் தெரியாது தவித்திருக்கிறேன்
மனம் கவர்ந்த அருமையான பதிவு.வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com சொன்னது…

Tha.ma 1

rajamelaiyur சொன்னது…

//வேண்டுமென்றே தவிர்த்த நேரத்திலும்
வேண்டாமென்று இருந்த பொழுதிலும்
துயரம் நிறைத்து தூரமாகிப்போன
ப்ரியமது.
//

அருமையான வரிகள்

செய்தாலி சொன்னது…

கவிதை
வாசித்தபின் சிலிர்த்தேன் சகோ
ம்ம்ம் என்ன சொல்ல

சசிகலா சொன்னது…

அந்த நாள் ஜாபகம் வந்ததே .... பாடல் நினைவுக்கு வருகிறது . ஒன்றும் சொல்ல முடியாமல் நினைவில் மூழ்கியபடி நான் .

MARI The Great சொன்னது…

கேட்டாலும் கிடைக்காதது குழந்தைப்பருவம்.!

அருமையான கவிதை சகோ.!

ஆத்மா சொன்னது…

ஒவ்வொருவரும் சுவைத்த நினைவுகள்...:)

மறக்கவும் முடியாத நிஜங்கள்

அருமை சகோ

மகேந்திரன் சொன்னது…

அது ஒரு பொற்காலம் தான் சகோதரி...

சீனு சொன்னது…

//நாம் சண்டையிட்ட
திண்ணைக்குப்பின்
தேடிப்பார்க்கின்றேன்
தவறவிட்ட பிரியமொன்றின்
புரியாக்காலத்தை....//

அழகைச் சொல்லி இருகிறீர்கள்,

//வேண்டுமென்றே தவிர்த்த நேரத்திலும்
வேண்டாமென்று இருந்த பொழுதிலும்//

எதார்த்தமான வரிகள்....தொடருங்கள் தொடர்கிறேன்

படித்துப் பாருங்கள்

வாழ்க்கைக் கொடுத்தவன்

Praveenkumar சொன்னது…

காலத்தால் அழியாத நினைவுகளின் சங்கமம் தங்கள் கவிதையில் உணர முடிந்தது. அருமையான பகிர்வு ரேவா..!! சூப்பர்.

கவி அழகன் சொன்னது…

அருமையான படைப்பு

Seeni சொன்னது…

azhakaana kavithai!

ரைட்டர் நட்சத்திரா சொன்னது…

Nice feel

Unknown சொன்னது…

S.A. நவாஸுதீன் கூறியது...

Adikkadi vanthu pohum antha urainilai unarvual veyil padathil varum paadal kaatchi pola pasumayaai maatrivittathu ungalin varikal.


மிக்க நன்றி சகோ உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் :)

Unknown சொன்னது…

Ramani கூறியது...

இன்று
காலம் நகர்ந்தாலும்
காயம் மறைந்தாலும்
உன்னைக்காணும் நாட்களில்
மட்டும்
நாம் சண்டையிட்ட
திண்ணைக்குப்பின்
தேடிப்பார்க்கின்றேன்
தவறவிட்ட பிரியமொன்றின்
புரியாக்காலத்தை....


நானும் தேடித் திரிந்திருக்கிறேன்
ஆனால் இத்தனை அழகாக
சொல்லத் தெரியாது தவித்திருக்கிறேன்
மனம் கவர்ந்த அருமையான பதிவு.வாழ்த்துக்கள்


மிக்க நன்றி ஜயா உற்சாகம் மேலும் தொற்றிக்கொள்கிறது உங்களின் மறுமொழி காண்கையில் :)

Unknown சொன்னது…

"என் ராஜபாட்டை"- ராஜா கூறியது...

//வேண்டுமென்றே தவிர்த்த நேரத்திலும்
வேண்டாமென்று இருந்த பொழுதிலும்
துயரம் நிறைத்து தூரமாகிப்போன
ப்ரியமது.
//

அருமையான வரிகள்

மிக்க நன்றி சகோ :)

Unknown சொன்னது…

செய்தாலி கூறியது...

கவிதை
வாசித்தபின் சிலிர்த்தேன் சகோ
ம்ம்ம் என்ன சொல்ல

செய்தாலி சகோவோட டிரேட் மார்க் ம்ம்ம்ம் ஹஹா நன்றி சகோ :)

Unknown சொன்னது…

Sasi Kala கூறியது...

அந்த நாள் ஜாபகம் வந்ததே .... பாடல் நினைவுக்கு வருகிறது . ஒன்றும் சொல்ல முடியாமல் நினைவில் மூழ்கியபடி நான் .


நன்றி சசி, மீண்டிவிட்ட கவிதைக்கும் கவிதைக்கு உற்சாகம் தரும் உங்கள் வருகைக்கும் :)

Unknown சொன்னது…

வரலாற்று சுவடுகள் கூறியது...

கேட்டாலும் கிடைக்காதது குழந்தைப்பருவம்.!

அருமையான கவிதை சகோ.!


மிக்க நன்றி சகோ :)

Unknown சொன்னது…

சிட்டுக்குருவி கூறியது...

ஒவ்வொருவரும் சுவைத்த நினைவுகள்...:)

மறக்கவும் முடியாத நிஜங்கள்

அருமை சகோ


நிச்சயம் அனைவரும் பருகிய ஒன்று தான் இந்த பால்யம்... நன்றி சகோ உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் :)

Unknown சொன்னது…

மகேந்திரன் கூறியது...

அது ஒரு பொற்காலம் தான் சகோதரி...


நிச்சயம் அண்ணா :)

Unknown சொன்னது…

சீனு கூறியது...

//நாம் சண்டையிட்ட
திண்ணைக்குப்பின்
தேடிப்பார்க்கின்றேன்
தவறவிட்ட பிரியமொன்றின்
புரியாக்காலத்தை....//

அழகைச் சொல்லி இருகிறீர்கள்,

//வேண்டுமென்றே தவிர்த்த நேரத்திலும்
வேண்டாமென்று இருந்த பொழுதிலும்//

எதார்த்தமான வரிகள்....தொடருங்கள் தொடர்கிறேன்

படித்துப் பாருங்கள்

வாழ்க்கைக் கொடுத்தவன்


மிக்க நன்றி சகோ, தொடர்ந்த வருகைக்கும் தொடர்வதற்கும் :)

Unknown சொன்னது…

பிரவின் குமார் கூறியது...

காலத்தால் அழியாத நினைவுகளின் சங்கமம் தங்கள் கவிதையில் உணர முடிந்தது. அருமையான பகிர்வு ரேவா..!! சூப்பர்.


நன்றி பிரவின் உங்களின் முதல் மறுமொழிக்கு :)

Unknown சொன்னது…

கவி அழகன் கூறியது...

அருமையான படைப்பு


மிக்க நன்றி சகோ :)

Unknown சொன்னது…

Seeni கூறியது...

azhakaana kavithai!


மிக்க நன்றி சகோ :)

Unknown சொன்னது…

ரைட்டர் நட்சத்திரா கூறியது...

Nice feel

நன்றி நட்சத்திரா :)

Vijayan Durai சொன்னது…

விவரமறியா வயதில் விளைந்திட்ட பிரியமும் ,தெரியாமல் நிகழ்ந்துவிட்ட பிரிவும் ...
அழகான கவிதை ,
ரசித்தேன் ,என் இளைய காலங்களை கண் முன் காண நேரம் இழையோட செய்தது கவிதை .