உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

உச்சியேறும் விளையாட்டின் வெயில்


சொற்ப வெயிலை ஏற்கும்படி
அடத்தோடு நுழைகிறது
குளிர் பொழுதின் தட்ப வெட்பம்

டீபாயில் குவிந்துள்ள செய்தி
காபி டம்ளரின் சூட்டுக்கு இசையப் பழகிய பின்
இதழ் ஏற்கும் பதம்
இன்னதென்பதின் சுவாரஸ்யம்
பித்தமேறி விழுங்கும் எச்சில் கசப்பு

பிடித்ததின் அபத்த கணம்
அரங்கேற்றும் தப்பிதம்
சறுக்கி விடும் மலை முகடு

சிராய்ப்புகளில் உறுத்தும்
ஈர மண் தழும்பில் மொய்ப்பதாக இருக்கிறது
உச்சியேறிய விளையாட்டின்
வெயில் சொல்

(painting :Kauber-Carol )

- ரேவா0 கருத்துகள்: