உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

வளைவதில் வசப்படும் இரவு*
என்றுமில்லாதபடி கரிசனம் காட்டத்தொடங்கியிருக்கும்  
இரவை  
இரவால் கொல்வதென்று திட்டம்

உன்  
என்  
நழுவத்தொடங்கிவிட்ட  
பிம்பத்தின் முற்றத்தில் நிலா ஆடுகிறது  
கல்லெறிந்த குளத்தின் தவிப்போடு

0 கருத்துகள்: