உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

வியாழன், 19 ஜனவரி, 2017

தீராக்கடலின் மறுபிரதிதொலைந்து போய்விடும் படி
வந்து சேருகின்ற ஆணையொன்றை
வெகுநேரம் கையில் வைத்திருக்கின்றேன்எழுத்துக்கூட்டி வரும் நினைவின் கடல்
ஒற்றையாய் அலைவுறுகிற
படகின் துடுப்பாக்க

செலுத்துதலின் வேகம்
சோர்வுற வைக்கும் காற்று
கருணை வேண்டி காத்திருப்பு
பலனளிக்கா வானிலைக்கு
அடிபணியும் அபத்தம்

நின்று பார்ப்பதெனும் போராட்டம்
சுழிக்குள் இழுக்கும் சூட்சுமம்
ஒப்படைத்தலில் இறுக்கி பிடித்திருக்கும் படகை
கைவிடுதலில் கரைந்துபோகிறது
பெருங்கடல்

-ரேவா

0 கருத்துகள்: