உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

ஞாயிறு, 2 ஜனவரி, 2011

என் காதல் எதிர்பார்ப்பு

 
* காதலாய் முதல் முதல்
என் இதயம் தொட்ட 
என் கள்வனே!!!

* ன் இதயம் உன்னிடம்  மாறிய
காலம் முதலே உன்னோடான
என் காதல்  எதிர்ப்பார்புகள்
நீளத்துடங்கின..

* ழுகையில் ஆரம்பித்து
புரிதலில் தொடங்கி,
அரவணைப்பில் முடியும்
என் வாழ்வின் பக்கங்கள்
உன் வரவையே
எதிர்பார்த்து  காத்திருக்கின்றன....

* செல்ல சினேகிதா!!!
உன் காதல் சொல்லி நீ
எனக்காய் காத்திருந்த காலம்
எல்லாம் கர்ஜனையோடு 
உன்னை வெறுப்பதாய்
என் அழகோடு நான் கர்வம் கொண்டேன்...

* ன் காத்திருத்தலின் வேகம்,
உன் அன்பின் ஆழமும் 
என்னையும் காதல் கொல்லச்செய்தது ...

* ன் வழிவரும்வரை
என் விழிப்பார்வைக்கு
காத்திருந்த நீ.,
இன்று விழிமேல் வழிவைத்து
காத்திருந்தும் வேலையின் பெயர் சொல்லி
என்னை காக்கவைப்பதேன் 
காதலா?ன் எதிர்பார்ப்பெல்லாம்  
* தலை சாய்ந்து படுக்கும்
போது... அரவணைக்கும் தோளாய்
கோதுகின்ற விரலாய்,
 உன் நேசம் எனக்காய் இருக்க  வேண்டும்...

* ண்டையின் போது சமாதான 
தூதுவனாய் உன் முத்தம்
எனக்காய் இருக்க வேண்டும்...

* லுவலக நேரத்தில் 
அலுக்காமல்  உன் அலைபேசியில் 
எனை அழைத்து அன்புகதை
நீ  பேசிடவேண்டும் ...
* விரும்பிய நேரத்தில்
என் விழிகள் தேடும் தூரத்தில்
உன் பிம்பம்.நான் காண வேண்டும்.

* சோதனைகள் வந்தாலும்..
சாதனைகள் புரிந்தாலும்
உன் தோள்சாய்ந்து
நான் வெற்றி கூச்சலிட
நட்பாய் நீ எனக்கு வேண்டும்...

தோல்வியின் வேதனையிலும்...
வெற்றியின் பாதியிலும்
பலம் தரும் பாதுகாவலாய்
நீ எனக்கு வேண்டும்..

* றவாய் வந்து என் உணர்வில்
கலக்கும் என் உயிராய் நீ எனக்கு வேண்டும்..

* நான் வாழ்கின்ற வரைக்கும் 
என் காதல் மரணம் தொட்டு முடியும் 
வரைக்கும் உன் காதல் எனக்காய் வேண்டும்... 

* ன் இதயம் கவர்ந்த கள்வனே !!!!
உன்னோடான என் எதிர்பார்ப்புகள்
ஏமாற்றத்தை தந்தாலும்.. 
எதிர்பார்க்காமல் என்
எதிர்கால வாழ்வை
வாழ கற்றுத்தந்தது உன்னோடான
என் எதிர்பார்ப்பு...
ஆம்!!!!
* ன்பு கொண்ட நெஞ்சில் எல்லாம்
ஆயிரம் அசைகள் இருக்கும்
என்றால்...
ஆன்பால் எனைவென்ற என்
ஆடவனே!!!
நீயின்றி நீளும் என் நாட்களின்
எதிர்பார்ப்பெல்லாம்....
உன் குரல் கேட்டு
என் பொழுது விடியவேண்டும்...
உன் மடியில்
என் இரவு முடியவேண்டும்...

ன்புன் 
ரேவா

10 கருத்துகள்:

நீச்சல்காரன் சொன்னது…

[ma+]நீர்க்குழி ஊதிய நீர்க்குமிழ் போன்ற முத்தான வரிகள்[/ma+]

பால் [Paul] சொன்னது…

//உன் குரல் கேட்டு
என் பொழுது விடிய வேண்டும்..
உன் மடியில்
என் இரவு முடிய வேண்டும்..//

மிக அழகான காதல் கடிதம் :) மிகவும் ரசித்து படித்தேன்..!! குறிப்பாக அந்த இறுதி வரிகள்..!!

ரேவா சொன்னது…

நீச்சல்காரன் said...

நீர்க்குழி ஊதிய நீர்க்குமிழ் போன்ற முத்தான வரிகள்..

நன்றி சகோதரரே!!!

ரேவா சொன்னது…

பால் [Paul] said...

//உன் குரல் கேட்டு
என் பொழுது விடிய வேண்டும்..
உன் மடியில்
என் இரவு முடிய வேண்டும்..//

மிக அழகான காதல் கடிதம் :) மிகவும் ரசித்து படித்தேன்..!! குறிப்பாக அந்த இறுதி வரிகள்..!!

நன்றி பால் [Paul] நண்பா!!!

Samudra சொன்னது…

காதலைத் தாண்டியும் நிறைய எழுதுங்கள்...

ரேவா சொன்னது…

Samudra said...

காதலைத் தாண்டியும் நிறைய எழுதுங்கள்...

கண்டிப்பாக.காதலை தாண்டி எழுத முயற்ச்சிக்கிறேன் . வருகைக்கும் உங்கள் மறுமொழிக்கும் நன்றி.....

sakthistudycentre.blogspot.com சொன்னது…

//காதலைத் தாண்டியும் நிறைய எழுதுங்கள்...//
காதல் இல்லாமல் ரேவா கவிதைகளா? எதிர்பார்த்து காத்துகொண்டிருக்கிறேன்.

ரேவா சொன்னது…

sakthistudycentre.blogspot.com said...

//காதலைத் தாண்டியும் நிறைய எழுதுங்கள்...//
காதல் இல்லாமல் ரேவா கவிதைகளா? எதிர்பார்த்து காத்துகொண்டிருக்கிறேன்.

நன்றி நண்பா!!!

எவனோ ஒருவன் சொன்னது…

கவிதை ரொம்ப நல்லா இருக்கு. என்னை இந்த வரிகள் மிகவும் கவர்ந்துவிட்டன :-)

* அலுவலக நேரத்தில்
அலுக்காமல் உன் அலைபேசியில்
எனை அழைத்து அன்புகதை
நீ பேசிடவேண்டும் ...

A.R.RAJAGOPALAN சொன்னது…

காதலியின்
காதல்
சந்தோஷ
சமிங்கைகளை மிக
சமீபமாக்கிய
சந்தன கவிதை
பெண்ணியத்தின்
கண்ணியத்தையும் அதன்
காரணத்தையும்
கட்டியம்
கூறும்
கற்பக
கவிதை
கற்பூரமாய் மனதை ஆக்கிரமிக்கிறது
வாழ்த்துக்கள் தோழி