உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

வெள்ளி, 21 ஜனவரி, 2011

ஒரு தலைக்காதல்

 
** எதையோ எழுத பயணித்து 
எதிலோ வந்து முடியும் 
என் கவிதை
பயணிப்பது என்னமோ 
ஒரு வழிப்பாதை தான்....
காதலோடு உன்பெயரையே 
எழுதிக்கொண்டிருப்பதால்....


** நன்றி சொல்கிறேன்...
நீ தூக்கி எரிந்தபின்னும்
துளிர்விடும், 
என் காதல் கவிதைகளுக்கு...
** கோவத்தை நீ எப்போது   
கொடுத்தாலும், அதையுட்க்கொண்டு
அன்பு  எனும் ஒளிச்சேர்க்கை மூலம் 
காதல் தருவேன்...
காலத்தோடு ஏற்றுக்கொள்.... 
என் காதலை...
 
** நிமிட இடைவெளியில் கூட 
உன்னை நினைக்க மறப்பதே 
இல்லை என் இதயம்...
ஆம்!!!!
என் காதலாக நீ  இல்லாவிடிலும் 
காலம்தோறும் என் காதல்
நினைவுகளை
என் இதயத்தில் சுமக்க 
தயாராக இருக்கின்றேன்....
ஒரு தலைக் காதலோடு...

 அன்புடன்
ரேவா 

10 கருத்துகள்:

karthikkumar சொன்னது…

nice :))

sakthistudycentre-கருன் சொன்னது…

காதல் மணம் கமழும் கவிதை!
ரொம்ப நல்லா இருக்கு..
Really Superb.

See,
http://sakthistudycentre.blogspot.com/2011/01/blog-post_21.html

ப்ரியமுடன் வசந்த் சொன்னது…

// கோவத்தை நீ எப்போது
கொடுத்தாலும், அதையுட்க்கொண்டு
அன்பு எனும் ஒளிச்சேர்க்கை மூலம்
காதல் தருவேன்...
காலத்தோடு ஏற்றுக்கொள்....
என் காதலை..//

பிடிச்சிருக்கு பாஸ்!!

Ramani சொன்னது…

காதல் தோல்வி அனைவருக்கும் வருத்தம் தரக்கூடியதுதான்
ஆனால் அதனால் நல்ல கவிதைகள் கிடைக்குமாயின்
காதல் தோல்வி கூட ஒருவகையில் நல்லதுதானோ?
நல்ல கவிதை படித்த திருப்தி.வாழ்த்துக்கள்

ரேவா சொன்னது…

karthikkumar said...

nice :))

நன்றி சகோ.. வருகைக்கும் வாழ்த்துக்கும்....

ரேவா சொன்னது…

sakthistudycentre-கருன் said...

காதல் மணம் கமழும் கவிதை!
ரொம்ப நல்லா இருக்கு..
Really Superb.

See,
http://sakthistudycentre.blogspot.com/2011/01/blog-post_21.html


இப்போ ஞாபகம் வந்துருச்சு... என் நம்காதல் பதிவில் இந்த பின்னூட்டம் தானே கொடுத்திருந்தேங்க... ஹ ஹா...நன்றி நண்பரே!!! வருகைக்கும் வாழ்த்துக்கும்....

ரேவா சொன்னது…

ப்ரியமுடன் வசந்த் said...

// கோவத்தை நீ எப்போது
கொடுத்தாலும், அதையுட்க்கொண்டு
அன்பு எனும் ஒளிச்சேர்க்கை மூலம்
காதல் தருவேன்...
காலத்தோடு ஏற்றுக்கொள்....
என் காதலை..//

பிடிச்சிருக்கு பாஸ்!!

நன்றி பிரியமுடன் வசந்த்... தங்கள் வருகைக்கும், உங்கள் மறுமொழிக்கும்...
தேங்க்ஸ் பாஸ்!!!!

ரேவா சொன்னது…

Ramani said...

காதல் தோல்வி அனைவருக்கும் வருத்தம் தரக்கூடியதுதான்
ஆனால் அதனால் நல்ல கவிதைகள் கிடைக்குமாயின்
காதல் தோல்வி கூட ஒருவகையில் நல்லதுதானோ?
நல்ல கவிதை படித்த திருப்தி.வாழ்த்துக்கள்

உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி திரு. ரமணி அவர்களே....

எவனோ ஒருவன் சொன்னது…

////
** நிமிட இடைவெளியில் கூட
உன்னை நினைக்க மறப்பதே
இல்லை என் இதயம்...
ஆம்!!!!
என் காதலாக நீ இல்லாவிடிலும்
காலம்தோறும் என் காதல்
நினைவுகளை
என் இதயத்தில் சுமக்க
தயாராக இருக்கின்றேன்....
ஒரு தலைக் காதலோடு...////

சூப்பர் :-)

பெயரில்லா சொன்னது…

Hi there, an outstanding report buddy. Nice present. However Now i'm experiencing difficulty aided by the Feed. Struggling to sign up for it. Actually does anybody else looking at equivalent Rss complications? Somebody who could assistance please respond to. Appreciate it.