உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

நீயும் நானும் இனி "எதிரிகள்"* சுற்றம் ஒரு புறம்
சுயநல கொடி விரிக்க...
உடன்பிறந்தோர் வாழ்வில்
நம்மால் பிழை வரும் என,
நம் பெற்றோர்  உரைக்க..
போட்டுக் கொண்டோம்
புதிய முகமூடி
நீயும் நானும்
இனி "எதிரிகள்"  என்று...

* நீயும் நானும் வேறு வேறாய்
இருக்க நம்மில் வேர் விட்ட
நம் காதலுக்கு
சொல்லிவிடு
இனி  நீயும் நானும்
"எதிரிகள்"

* ம் காதல் வளர்த்த
கடற்க்கரை மணலுக்கும்,
காதல் பேசி நம் காலடி வந்த
கடற்க்கரை அலைகளுக்கும்
சொல்லி விடு
இனி நீயும் நானும்
"எதிரிகள்"

* குற்றவாளிகள் போல்
நம்மை குத்திக் கூடையும்
நம் சொந்தங்களின்
பார்வைக்கு பட்டென்று
சொல்லிவிடு
இனி நீயும் நானும்
"எதிரிகள்"  என்று..


* விலகிப் போகிறோம்
என்று தெரிந்தும்,
விலகாமல் நமைத்தடுக்கும்
நம் நட்புக்கு
சொல்லிவிடு
இனி  நீயும் நானும்
"எதிரிகள்" 

ம் !!!!
* எதிர்ப்படும் வாழ்க்கை
நமக்காய் இருந்தும்,
திருமணமாக உன் தங்கைக்கும்,
மணமாக காத்திருக்கும்
என் சகோதரிக்குமாய்
நம் காதல்  போட்டுக்கொண்டது
ஒரு முகமூடி..

* னைப்பிரிந்து என்
நலம் விசாரிப்புகளும்
நலமற்று போக...
எனைத் தீண்டும் உன் பார்வையின்
ஆளுமை எனை விட்டு போக,
நடை பிணமென அலைந்துகொண்டிருக்கிறேன் ,
நீ நலமாய் இருப்பாய்
என்ற நம்பிக்கையில்
எனைத்தேற்றிக் கொள்கிறேன்,
காரணம்
நீயும் நானும்

இனி "எதிரிகள்" 

* ம் காதல் தோல்வியைத்
தழுவியது என்று யாரேனும்
சொன்னால், தயங்காமல்
சொல், உன்னை நானும்,
என்னை நீயும், உயிர் இருக்கும்வரை
நம் உயிரில் கருவாய் சுமப்போம்...
ஏன்னென்றால்
நீயும் நானும்
இனி "எதிரிகள்"

* திர்படும் எல்லாரும் நமக்கு
எதிரியாய்ப்போக, காதலை
சுமந்துகொண்டு,காலத்தின் முன்
நீயும் நானும்
இனி "எதிரிகள்"


* சுற்றம் ஒரு புறம்
சுயநல கொடி விரிக்க...
உடன்பிறந்தோர் வாழ்வில்
நம்மால் பிழை வரும் என,
பெற்றோர்  உரைக்க..
போட்டுக் கொண்டோம்
புதிய முகமூடி
நீயும் நானும்
"எதிரிகள்"  என்று...

(இதற்க்கு முந்தய என் தமிழன் என்ற தமிழக மீனவர் படுகொலைக்கு எழுதிய கண்டன கவிதையையும் படித்து உங்கள் கருத்துக்களை சொல்லலாமே!!!!)


அன்புடன்
உன் எதிரி
ரேவா 

35 நேசித்த உள்ளங்கள்:

{ மாணவன் } at: 1/30/2011 3:32 பிற்பகல் சொன்னது…

"எதிரிகள்” வரிகள் ஒவ்வொன்றும் அருமை சகோ,

யதார்த்தம் கலந்த உணர்வுகள்... நல்லாருக்குங்க சகோ

{ மாணவன் } at: 1/30/2011 3:32 பிற்பகல் சொன்னது…

// சுற்றம் ஒரு புறம்
சுயநல கொடி விரிக்க...
உடன்பிறந்தோர் வாழ்வில்
நம்மால் பிழை வரும் என,
பெற்றோர் உரைக்க..
போட்டுக் கொண்டோம்
புதிய முகமூடி
நீயும் நானும்
"எதிரிகள்" என்று...//

டச்சிங்......

{ ரேவா } at: 1/30/2011 3:35 பிற்பகல் சொன்னது…

மாணவன் said...

"எதிரிகள்” வரிகள் ஒவ்வொன்றும் அருமை சகோ,

யதார்த்தம் கலந்த உணர்வுகள்... நல்லாருக்குங்க சகோ...


நன்றி சகோ.... வருகைக்கும் வாழ்த்துக்கும்...

{ ரேவா } at: 1/30/2011 3:37 பிற்பகல் சொன்னது…

மாணவன் said...

// சுற்றம் ஒரு புறம்
சுயநல கொடி விரிக்க...
உடன்பிறந்தோர் வாழ்வில்
நம்மால் பிழை வரும் என,
பெற்றோர் உரைக்க..
போட்டுக் கொண்டோம்
புதிய முகமூடி
நீயும் நானும்
"எதிரிகள்" என்று...//

டச்சிங்......


சகோ ரொம்ப நன்றிங்கோ...

{ MANO நாஞ்சில் மனோ } at: 1/30/2011 3:51 பிற்பகல் சொன்னது…

கவிதை சூப்பர்.....

{ ரேவா } at: 1/30/2011 3:56 பிற்பகல் சொன்னது…

MANO நாஞ்சில் மனோ said...

கவிதை சூப்பர்.....


நன்றி MANO நாஞ்சில் மனோ உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்....

{ # கவிதை வீதி # சௌந்தர் } at: 1/30/2011 4:05 பிற்பகல் சொன்னது…

நீயும் நானும் மட்டுமல்ல
குடும்பத்திற்காக காதலை குழிதோ்ண்டி புதைத்து விட்டு..
காதலிக்கு மட்டுமல்லாமல்.. காதலுக்கும் எதிரியாகத்தான் வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம்...
கவிதை அருமை..

{ ரேவா } at: 1/30/2011 4:17 பிற்பகல் சொன்னது…

# கவிதை வீதி # சௌந்தர் said...

நீயும் நானும் மட்டுமல்ல
குடும்பத்திற்காக காதலை குழிதோ்ண்டி புதைத்து விட்டு..
காதலிக்கு மட்டுமல்லாமல்.. காதலுக்கும் எதிரியாகத்தான் வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம்...
கவிதை அருமை..

உண்மைதான் நண்பரே.... வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி..
தொடர்ந்து வாரு(சியு)ங்கள்...

{ அரசன் } at: 1/30/2011 6:36 பிற்பகல் சொன்னது…

நல்ல வரிகளில் அற்புதமாய் சொல்லி இருக்கும் உங்கள் திறமை கண்டு வியக்கிறேன் ...
கவிதை அருமை ... கொஞ்சம் பெரியதாய் தோன்றுகிறது .....
வாழ்த்துக்கள் ... தொடர்ந்து வழங்க வாழ்த்துகளுடன் ---- அரசன் ---

{ Ramani } at: 1/30/2011 6:42 பிற்பகல் சொன்னது…

உணர்வு பூர்வமான கவிதை
வாழ்த்துக்கள்

{ ரேவா } at: 1/30/2011 7:06 பிற்பகல் சொன்னது…

அரசன் said...

நல்ல வரிகளில் அற்புதமாய் சொல்லி இருக்கும் உங்கள் திறமை கண்டு வியக்கிறேன் ...
கவிதை அருமை ... கொஞ்சம் பெரியதாய் தோன்றுகிறது .....
வாழ்த்துக்கள் ... தொடர்ந்து வழங்க வாழ்த்துகளுடன் ---- அரசன் ---

உங்கள் பின்னூட்டம் கண்டபிறகு ஓரிரு பத்திகள் நீக்கிவிட்டேன்....
தொடர்ந்து வாரு(சியு)ங்கள்... நன்றி நண்பர் அரசன் அவர்களே...

{ ரேவா } at: 1/30/2011 7:07 பிற்பகல் சொன்னது…

Ramani said...

உணர்வு பூர்வமான கவிதை
வாழ்த்துக்கள்

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி திரு ரமணி அவர்களே...

{ பலே பிரபு } at: 1/30/2011 11:37 பிற்பகல் சொன்னது…

அருமை தோழி!!!!

{ ரேவா } at: 1/31/2011 9:57 முற்பகல் சொன்னது…

பலே பிரபு said...

அருமை தோழி!!!!

நன்றி நண்பா

{ "குறட்டை " புலி } at: 1/31/2011 11:03 முற்பகல் சொன்னது…

எதிரியாய் இருக்கும் போது தான் நட்பின் சுகம் தெரியும்...

{ ரேவா } at: 1/31/2011 11:33 முற்பகல் சொன்னது…

"குறட்டை " புலி said...

எதிரியாய் இருக்கும் போது தான் நட்பின் சுகம் தெரியும்..

நன்றி "குறட்டை " புலி அவர்களே!!!!!
முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி...
தொடர்ந்து வாரு(சியு)ங்கள்

{ எவனோ ஒருவன் } at: 1/31/2011 11:35 முற்பகல் சொன்னது…

'நீயும் நானும் இனி "எதிரிகள்"' தலைப்பே அட்டகாசமாய் உள்ளது.

உங்கள் கவிதைகளை படிக்கும் பொழுது என்னையும் அறியாமல் கண் கலங்கி விடுகிறேன் தோழி. அருமையாக எழுதுகிறீர்கள். உங்கள் எல்லா பதிவுகளையும் வாசிக்க மிக ஆவலாக உள்ளேன். சீக்கிரம் ஒரு நாள் அதற்காக ஒதுக்க வேண்டும் :-)

////* நம் காதல் தோல்வியைத்
தழுவியது என்று யாரேனும்
சொன்னால், தயங்காமல்
சொல், உன்னை நானும்,
என்னை நீயும், உயிர் இருக்கும்வரை
நம் உயிரில் கருவாய் சுமப்போம்...
ஏன்னென்றால்
நீயும் நானும்
இனி "எதிரிகள்"////

நான் மிகவும் ரசித்த வரிகள் :-)

{ ஜெ.ஜெ } at: 1/31/2011 11:38 முற்பகல் சொன்னது…

கவிதை அருமை ரேவா...

{ ரேவா } at: 1/31/2011 11:45 முற்பகல் சொன்னது…

எவனோ ஒருவன் said...

'நீயும் நானும் இனி "எதிரிகள்"' தலைப்பே அட்டகாசமாய் உள்ளது.

உங்கள் கவிதைகளை படிக்கும் பொழுது என்னையும் அறியாமல் கண் கலங்கி விடுகிறேன் தோழி. அருமையாக எழுதுகிறீர்கள். உங்கள் எல்லா பதிவுகளையும் வாசிக்க மிக ஆவலாக உள்ளேன். சீக்கிரம் ஒரு நாள் அதற்காக ஒதுக்க வேண்டும் :-)

////* நம் காதல் தோல்வியைத்
தழுவியது என்று யாரேனும்
சொன்னால், தயங்காமல்
சொல், உன்னை நானும்,
என்னை நீயும், உயிர் இருக்கும்வரை
நம் உயிரில் கருவாய் சுமப்போம்...
ஏன்னென்றால்
நீயும் நானும்
இனி "எதிரிகள்"////

நான் மிகவும் ரசித்த வரிகள் :-)

நன்றி நண்பா
நீங்கள் கொடுக்கும் உற்சாகமே என்னை எழுத தூண்டுகிறது....கிடைக்கும் நேரத்தில் என் பதிவுகளை படியுங்கள்... உங்களிடம் இருந்து மேலான கருத்துக்களை எதிர்பாத்திருக்கிறேன்...வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

{ ரேவா } at: 1/31/2011 11:48 முற்பகல் சொன்னது…

ஜெ.ஜெ said...

கவிதை அருமை ரேவா...
வாழ்த்துக்கு நன்றி தோழி ஜெ.ஜெ...

{ karthikkumar } at: 1/31/2011 11:58 முற்பகல் சொன்னது…

நல்ல கவிதை. சகோதரி.. நல்லா இருக்கு :)

{ siva } at: 1/31/2011 1:43 பிற்பகல் சொன்னது…

வாசித்தேன் எதிரி...


அன்புடன்
உன் எதிரி

{ Samudra } at: 1/31/2011 2:11 பிற்பகல் சொன்னது…

நன்றாக இருக்கிறது..

{ ரேவா } at: 1/31/2011 2:45 பிற்பகல் சொன்னது…

karthikkumar said...

நல்ல கவிதை. சகோதரி.. நல்லா இருக்கு :)

நன்றி சகோ.... வருகைக்கும் வாழ்த்துக்கும்...

{ ரேவா } at: 1/31/2011 2:47 பிற்பகல் சொன்னது…

siva said...

வாசித்தேன் எதிரி...


அன்புடன்
உன் எதிரி

ஹஹா... நன்றி எதிரி நண்பா ... வருகைக்கும் வாழ்த்துக்கும்..

{ ரேவா } at: 1/31/2011 2:48 பிற்பகல் சொன்னது…

Samudra said...

நன்றாக இருக்கிறது..

நன்றி நண்பா..... வருகைக்கும் வாழ்த்துக்கும்...

{ மாத்தி யோசி } at: 2/01/2011 2:42 முற்பகல் சொன்னது…

முதல்தடவையாக வருகிறேன்! " எதிரிகள் " என்ற உங்கள் கவிதை ரசிக்கும் படியாகவும், சுவையாகவும் இருந்தது! பார்த்தீர்களா? ' எதிரிகள் ' கவிதை மூலமாக நாம் நண்பர்களாகிவிட்டோம்!

{ ரேவா } at: 2/01/2011 9:59 முற்பகல் சொன்னது…

மாத்தி யோசி said...

முதல்தடவையாக வருகிறேன்! " எதிரிகள் " என்ற உங்கள் கவிதை ரசிக்கும் படியாகவும், சுவையாகவும் இருந்தது! பார்த்தீர்களா? ' எதிரிகள் ' கவிதை மூலமாக நாம் நண்பர்களாகிவிட்டோம்!


நன்றி நண்பா....உங்கள் முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும்... தொடந்து வாரு(சியு)ங்கள்....

{ logu.. } at: 2/01/2011 11:14 முற்பகல் சொன்னது…

\\எதிர்படும் எல்லாரும் நமக்கு
எதிரியாய்ப்போக, காதலை
சுமந்துகொண்டு,காலத்தின் முன்
நீயும் நானும்
இனி "எதிரிகள்" \\

unmaithan.

{ சே.குமார் } at: 2/01/2011 3:14 பிற்பகல் சொன்னது…

யதார்த்தம் கலந்த உணர்வுகள்...

{ ரேவா } at: 2/01/2011 4:22 பிற்பகல் சொன்னது…

சே.குமார் said...

யதார்த்தம் கலந்த உணர்வுகள்...

.... வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி..நண்பரே
தொடர்ந்து வாரு(சியு)ங்கள்...

{ ஆயிஷா } at: 2/01/2011 5:22 பிற்பகல் சொன்னது…

வரிகள் ஒவ்வொன்றும் அருமை.

வாழ்த்துக்கள்.

{ ரேவா } at: 2/06/2011 12:00 பிற்பகல் சொன்னது…

ஆயிஷா said...

வரிகள் ஒவ்வொன்றும் அருமை.

வாழ்த்துக்கள்.வாழ்த்துக்கு வருகைக்கும் நன்றி தோழி

divya at: 3/27/2011 1:31 பிற்பகல் சொன்னது…

CUTE LINES........

{ ரேவா } at: 3/27/2011 7:31 பிற்பகல் சொன்னது…

divya said...

CUTE LINES........

Thanks Divyaa