உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

சனி, 29 ஜனவரி, 2011

எதற்கு இந்த விலை....

அன்பு நண்பர்களுக்கு வணக்கம்.. இது கவிதைக்கான தளமாக மட்டும் இருந்து விடக்கூடாது என்ற என் நண்பர்களின் எண்ணப்படி பெண் மனதில், பெண்ணை பெற்றவர் மனதில் தோன்றும் எண்ணக்குமுறல்களை என் எழுத்தாய் இங்கே பதிவு செய்து இருக்கிறேன்...

அதற்க்கான முதல் களமாக எதற்கு இந்த விலை என்ற சிந்தனைத் தொகுப்பை
ஆரம்பிக்கிறேன்...

சமீபத்தில்  என் மனதை பாதித்த செய்தி, பேச்சிலும், செய்கையிலும், படிப்பிலும் என்னை விட கெட்டிக்காரி என் சினேகிதி... இப்பொது மேலாண்மை படிப்பை முடித்து மனிதவள மேம்பாட்டு அதிகாரியாக ஒரு அலுவலகத்தில் வேலை செய்து கொண்டு இருக்கிறாள்..

திருமண வயதை அடைந்த பெண் உள்ளோர் எல்லார் வீட்டிலும்
நடக்கும் பெண் பார்க்கும் படலத்திருக்கு என் தோழியும் ஆயத்தமானால்...

குடும்பம் சகிதமாக மாப்பிளை வீட்டார் என் தோழியின் வீட்டிற்கு வந்து சேர... சினிமா பாணியில் சில சம்பிரதயங்களும் அரங்கேறியது...
வழக்கமாய் விட்டுச்செல்லும் வார்த்தையே இங்கும்... வீட்டுக்கு போயி தகவல்  அனுப்புரோம்னு...

ஆனா மாப்பிளை ரொம்ப கெட்டிக்காரர்... முதல் பார்வையிலே என் தோழியை பிடித்துப் போக என் தோழியின் தொலை பேசி எண்களை வாங்கிவிட்டு சென்றிருக்கிறார்...என் தோழியின் குடும்பத்தாருக்கும், மாப்பிளை வீட்டாருக்கும் பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டு இருக்கஎன் தோழியும் தோழியின் மாப்பிள்ளையாய் அறிமுகம்  ஆனவரும்
பரஸ்பரம் நலம் விசாரித்தலில் தொடங்கி  இருவரும் காதலில்
விழுந்தனர்...

இந்த நேரத்துல situvation சாங் "தோழியா என் காதலியா யாரடி என் கண்ணே" ஒரு வழியா இவங்க பழகுறது மாப்பிளை வீட்டாருக்கு தெரியவர கல்யாணப்பேச்சு சீரியஸ் அஹ நடந்துகிட்டு இருக்கிற நேரத்துல தான் கதைல ட்விஸ்ட்டு என்னனு கேக்குறேன்ங்களா அதாங்க நாம மாப்பிள்ளைக்கு அரசு அலுவலகத்துல வேலை கிடைச்சிடுச்சு.. விடுவாங்களா....!!!!! பையனோட ஷேர் மார்க்கெட் value அதிகமாகிடுச்சு...

கடைசியா பையனோட அம்மா அந்த பையனுக்கு ரேட் பிக்ஸ் பண்ணுனாங்க  பாருங்க உங்க ரேட் இல எங்க ரேட் இல்லைங்க... 5 லட்சம் ரொக்கம்...100 சவரன் நகை...ஒரு சான்றோ கார்... என் தோழி வீட்டுல எல்லாருக்கும் விழிபிதுங்கி  போயிடுச்சு.... இல்லையாபின்ன கொஞ்ச நஞ்ச ரேட் அஹ அது... கடைசில சமந்தம் கைமாற பையன் உறுதியா இருப்பானு பாத்தா அவனும் அம்மா பக்கம் விழுந்தாச்சு...

நூறு  குயர்   நோட்டுல அவன் எழுதிவச்சு என் தோழிகிட்ட பேசுன காதல் வசனம் வீணா போச்சு... மாப்பிள்ளை   எஸ்கேப்... எங்க அம்மா சொல்லுற பொண்ணத்தான் நான் கல்யாணம் பண்ணிப்பேன்னு சொல்ல.... இப்போ தான் என் தோழியா மருத்துவமனைல பாத்துட்டு வரேன் ஏன்னு  கேக்குறேங்களா... கேணச்சி விஷம் சாப்டாங்க...

ஏதோ இந்த விசயத்த இவ்ளோ நேரம் நான் விளையாட்ட சொல்லிருந்த்தாலும், நம்ம எவ்ளோ மார்டனா மாறினாலும், " ஐ அம்  சோ மாடர்ன் யு நோ " னு  நுனிநாக்கு இங்கிலீஷ் பேசினாலும், நாம இன்னும் மாறலைங்க.... சரி நாகரிகம்கிற பேருல எல்லாம் வந்தாச்சு, கிட்ட தட்ட ஒரு குட்டி வெளிநாடா இந்திய மாறிடுச்சு பழக்கவழக்கதுல? ஆனா உங்களுக்கு ஒன்னு தெரியுமா எந்த வெள்ளைக்காரனும் கல்யாணம் பண்ணிக்க டவுரி கொடுக்கமட்டானுங்க ...

இந்தியால எல்லாம் பிடிக்கும் ஆனா ஒரு பொண்ணு, தன் சொந்த பந்தம், எல்லாத்தையும் விட்டுட்டு வேற ஒரு சுழல்ல ஒரு ஆணை நம்பி வருரா, அங்க கணவர் குடும்பத்தை தான் குடும்பமாய் எடுத்துகிட்டு அவங்க ஆசை, ஆவங்க துக்கத்துல தானும் ஒரு ஆளா நிக்கிறா, கணவனுக்கு எல்லாமா அவ இருக்க, கல்யாணம் பண்ணிக்க போற பசங்க தான்  பொண்ணு வீட்டுக்காரங்களுக்கு பணம் குடுக்கனும்னு, நீங்க ஏன் பசங்களுக்கு வரதட்சணை,கொடுக்கிறேங்கனு  என் வெள்ளைக்கார தோழி கேட்க பதில் தெரியாம நான் மௌனமாகிட்டேன்...(அவ நம்பர்லாம் கேக்ககூடாது பிச்சு பிச்சு)
இப்போ என் தோழி நலமா இருக்கா  இருந்தாலும் உயிர் போனா வருமா?
பணம் தான் தேவைனா கல்யாணம் பண்ணிக்காம பணத்தைமட்டும் சேக்கலாமே.. ஏன் ஏன் எதற்கு  இந்த விலை...

 வரதட்சணை பத்தி  உண்மையான கருத்துக்கணிப்பு என்ன சொல்லுதுனா, ஆரம்பிச்சுட்டா பொம்பள ரமணானு சொல்லாதிங்க....
வரதட்சணை சாவு நம்ம இந்தியாவுல ரொம்ப அதிகம்.. அதோட எந்த பகுதில அதிகம் தெரியுமா ஆதாங்க  இந்த படிச்சவுங்க அதிகமா இருக்கி றாங்கல்ல, அதான் நம்ம தாஜ்மஹால் இருக்கே ஆங்..... டெல்லி தான்...அதே மாதிரி வரதட்சணை சாவு இல்லாத மாநிலம் எது தெரியுமா படிப்பு வாசனை ரொம்ப கம்மிய இருக்கிற நம்ம அருணாச்சலப்பிரதேசம்...

இதுல வரதட்சணை உயிரிழப்புகள் ஒரு வருடத்திருக்கு பன்னிரண்டாயிரம் முதல் பதினைந்தாயிரம்... இல்லாமையை இல்லாமல் ஆக்குவோம்.... புளிய பாதுகாக்கிறத விட்டுட்டு பொண்ணுங்கள பாதுகாப்போம்னு  forward மெசேஜ் அனுப்புனா பத்தாது...

எதுக்கு படிக்கிறோம், நல்ல டவுரி வாங்கவா... இல்லையே, நாம நாகரிக வளர்ச்சி அடையாம இருந்தாக்குட நாம நாமளா இருந்திருப்போம்போல, நண்பர்களே யோசிங்க சாவு கொடுமைதான், ஆனா வரதட்சணை சாவு ரொம்ப கொடுமை, இல்லாமையால அவங்க சாகிறது பெறும் கொடுமை  இல்லையா..எவ்வளவோ .கனவுகளோட இருக்கிற பொண்ணுங்களுக்கும், பொண்ணப்பெத்தவங்களுக்கும் இந்த நிலை கொடுமை இல்லையா....யோசிங்க....
எங்க போறேங்க எவ்ளோ வரதட்சணை வாங்கலாம்னு யோசிக்கவா?

(இந்த பதிவை எழுத எனை தூண்டிய சகோதரர் கார்த்திக்குமார் http://muraimaman.blogspot.com/ கு என் மனமார்ந்த நன்றி.... என் புது முயற்சி... பிடித்திருந்தால் பாராட்டலாமே!!!! )

28 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

சுட்டியை சொடுக்கி படிக்கவும்.

தமிழன் ஒரு இளிச்சவாயன். ‍ ஜடம்.

.

எல் கே சொன்னது…

நல்ல பகிர்வு. அனைவரும் ஒரு உறுதிமொழி ஏற்க வேண்டும். வரதட்சணை தரமாட்டேன் /வாங்கமாட்டேன் என்று.

மாணவன் சொன்னது…

உங்கள் தோழிக்கு நடந்த நிகழ்வையே எடுத்துகாட்டுடன் விளக்கி தெளிவாக வரதசட்சனையைப்பற்றி அருமையாக சொல்லியிருக்கீங்க சகோ உங்களின் இந்த முயற்சிக்கு முதலில் வாழ்த்துக்கள் சகோ,

மாணவன் சொன்னது…

//எதுக்கு படிக்கிறோம், நல்ல டவுரி வாங்கவா... இல்லையே, நாமா நாகரிக வளர்ச்சி அடையாம இருந்தாக்குட நாம நாமளா இருந்திருப்போம்போல, நண்பர்களே யோசிங்க சாவு கொடுமைதான்
ஆனா வரதட்சணை சாவு ரொம்ப கொடுமை இல்லையா...எவளவோ கனவுகளோட இருக்கிற பொண்ணுங்களுக்கும், பொண்ணப்பெத்தவங்களுக்கும் இந்த நிலை கொடுமை இல்லையா....//

அனைவரும் சிந்திக்க வேண்டிய ஒன்று...நச்சுன்னு சொல்லியிருக்கீங்க...

மாணவன் சொன்னது…

இந்த பதிவு எழுதுவதற்கு காரணமாய் அமைந்த பங்காளி கார்த்திக்கும் எனது நன்றி

இதுபோன்று எனது நண்பனின் சகோதரிக்கும் ஒரு நிகழ்வு நடந்தது அப்போதே நானும் இந்த வரதட்சனையைப்பற்றி ஒரு பதிவு எழுத வேண்டும் என நினைத்திருந்தேன்...விரைவில் வரதட்சனையின் கொடுமையை சொல்லும் ஒரு நாட்டுப்புறபாடல் தொகுப்புடன் எழுதுகிறேன்...

பகிர்வுக்கு நன்றிங்க சகோ...

karthikkumar சொன்னது…

கொஞ்சம் விவரம் தெரிஞ்ச அதாவது நாலு விசயமும் பேசுற நம்மை போன்ற சகோதர சகோதரிகள் வரதட்சணை வாங்கவும் கொடுக்கவும் மாட்டேன். என்று உறுதி கொள்ள வேண்டும்... மத்தவங்களுக்கும் இதை சொல்லி புரிய வெக்கணும். முடியலையா அவங்களோட திருமணத்திற்காவது இதை செய்யணும்..

karthikkumar சொன்னது…

நல்லா எழுதி இருக்கீங்க சகோதரி.....:)

சக்தி கல்வி மையம் சொன்னது…

உங்கள் புதிய முயற்சி வெற்றிபெற வாழ்த்துக்கள்...

http://sakthistudycentre.blogspot.com/2011/01/mr.html

ஞாஞளஙலாழன் சொன்னது…

சமூகத்தின் மிகக் கொடுமையான நோய் இது. உங்கள் தோழி உயிர் பிழைத்ததில் மிக்க மகிழ்ச்சி. ஆனால் வரதட்சணை வேண்டாம் என்றால், பையனுக்கு ஏதாவது நோய் இருக்குமோ என்று பெண்ணை பெற்றவர்கள் நினைத்து விடுவார்களோ என்று நாங்கள் கவலைப்படுகிறோம். இதுவும் உண்மை தானே?

sulthanonline சொன்னது…

உங்களது இந்த முயற்சிக்கு வாழ்த்துக்கள் . அதுவும் புலிய பதுகாக்கிறத விட்டுட்டு பொண்ணுங்கள பாதுகாப்போம் . ..ம்ம் இதே மாதிரி ஏழுதுங்க. வருங்கால பெண் ரமணா! ரேவா வாழ்க!

ரேவா சொன்னது…

Anonymous said...

சுட்டியை சொடுக்கி படிக்கவும்.

தமிழன் ஒரு இளிச்சவாயன். ‍ ஜடம்.

வருகைக்கு நன்றி

ரேவா சொன்னது…

எல் கே said...

நல்ல பகிர்வு. அனைவரும் ஒரு உறுதிமொழி ஏற்க வேண்டும். வரதட்சணை தரமாட்டேன் /வாங்கமாட்டேன் என்று.

கட்டாயம் உறுதிமொழி எடுக்க வேண்டும்... வருகைக்கும் உங்கள் கருத்துக்கும் நன்றி நண்பா

ரேவா சொன்னது…

மாணவன் said...

உங்கள் தோழிக்கு நடந்த நிகழ்வையே எடுத்துகாட்டுடன் விளக்கி தெளிவாக வரதசட்சனையைப்பற்றி அருமையாக சொல்லியிருக்கீங்க சகோ உங்களின் இந்த முயற்சிக்கு முதலில் வாழ்த்துக்கள் சகோ,

நன்றி மாணவன்... என் முயற்சியை பாராட்டி நீ தெரிவித்த கருத்துக்கு நன்றி சகோ ...

ரேவா சொன்னது…

மாணவன் said...

//எதுக்கு படிக்கிறோம், நல்ல டவுரி வாங்கவா... இல்லையே, நாமா நாகரிக வளர்ச்சி அடையாம இருந்தாக்குட நாம நாமளா இருந்திருப்போம்போல, நண்பர்களே யோசிங்க சாவு கொடுமைதான்
ஆனா வரதட்சணை சாவு ரொம்ப கொடுமை இல்லையா...எவளவோ கனவுகளோட இருக்கிற பொண்ணுங்களுக்கும், பொண்ணப்பெத்தவங்களுக்கும் இந்த நிலை கொடுமை இல்லையா....//

அனைவரும் சிந்திக்க வேண்டிய ஒன்று...நச்சுன்னு சொல்லியிருக்கீங்க...

நன்றி மாணவன்..... வருகைக்கும் வாழ்த்துக்கும்... ஏதோ என் ஆதங்கம்..பாக்கலாம் மாற்றம் வருமான்னு

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

நல்ல முயற்ச்சி................பயனுள்ள பதிவும் கூட.......................வாழ்த்துக்கள்....

கவிநவன் சொன்னது…

வரதட்சிணை கொடுமை, வரதட்சிணை ஒழிப்பு பற்றி எவ்வளவோ கதைகள் பதிவுகள் கவிதைகள் படித்திருக்கிறோம். ஆனால் உங்கள் பகிர்வு எனை ஒரு கணம் திகைக்க செய்து விட்டது.
எனக்கும் கல்யாண வயதில் பையன் இருக்கிறான்.
என் மகனை விலைக்கு விற்க மாட்டேன். என் மருமகள் உணர்வில் மகளாய் வாய்க்கட்டும்.

ரேவா சொன்னது…

மாணவன் said...

இந்த பதிவு எழுதுவதற்கு காரணமாய் அமைந்த பங்காளி கார்த்திக்கும் எனது நன்றி

இதுபோன்று எனது நண்பனின் சகோதரிக்கும் ஒரு நிகழ்வு நடந்தது அப்போதே நானும் இந்த வரதட்சனையைப்பற்றி ஒரு பதிவு எழுத வேண்டும் என நினைத்திருந்தேன்...விரைவில் வரதட்சனையின் கொடுமையை சொல்லும் ஒரு நாட்டுப்புறபாடல் தொகுப்புடன் எழுதுகிறேன்...

பகிர்வுக்கு நன்றிங்க சகோ...

விரைவில் வரதட்சனையின் கொடுமையை சொல்லும் ஒரு நாட்டுப்புறபாடல் தொகுப்பை உங்களிடம் இருந்து எதிர்பார்க்கிறேன் சகோ...

ரேவா சொன்னது…

karthikkumar said...

கொஞ்சம் விவரம் தெரிஞ்ச அதாவது நாலு விசயமும் பேசுற நம்மை போன்ற சகோதர சகோதரிகள் வரதட்சணை வாங்கவும் கொடுக்கவும் மாட்டேன். என்று உறுதி கொள்ள வேண்டும்... மத்தவங்களுக்கும் இதை சொல்லி புரிய வெக்கணும். முடியலையா அவங்களோட திருமணத்திற்காவது இதை செய்யணும்..

நீ சொல்லுறது உண்மை தான் கார்த்தி... வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சகோ .

ரேவா சொன்னது…

karthikkumar said...

நல்லா எழுதி இருக்கீங்க சகோதரி.....:)

ஹ ஹ ஹா என்னை எழுதவச்ச உனக்கு தான் நான் நன்றி சொல்லணும் சகோ

ரேவா சொன்னது…

sakthistudycentre-கருன் said...

உங்கள் புதிய முயற்சி வெற்றிபெற வாழ்த்துக்கள்...

http://sakthistudycentre.blogspot.com/2011/01/mr.html

நன்றி கருன் .... வருகைக்கும் வாழ்த்துக்கும்..

ரேவா சொன்னது…

ஞாஞளஙலாழன் said...

சமூகத்தின் மிகக் கொடுமையான நோய் இது. உங்கள் தோழி உயிர் பிழைத்ததில் மிக்க மகிழ்ச்சி. ஆனால் வரதட்சணை வேண்டாம் என்றால், பையனுக்கு ஏதாவது நோய் இருக்குமோ என்று பெண்ணை பெற்றவர்கள் நினைத்து விடுவார்களோ என்று நாங்கள் கவலைப்படுகிறோம். இதுவும் உண்மை தானே?

சில மாற்றங்கள் நாம் உருவாக்க தயாரானால்., அதற்க்கான வழிகள் நம்மை வந்துசேரும்.... புறியவைத்தளிலும், புரிதலிலும் நாம் சளைத்தவர்கள் இல்லை தானே.... முதல் வருக்கைக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பரே!!!! தொடர்ந்து வாருங்கள்...

ரேவா சொன்னது…

sulthanonline said...

உங்களது இந்த முயற்சிக்கு வாழ்த்துக்கள் . அதுவும் புலிய பதுகாக்கிறத விட்டுட்டு பொண்ணுங்கள பாதுகாப்போம் . ..ம்ம் இதே மாதிரி ஏழுதுங்க. வருங்கால பெண் ரமணா! ரேவா வாழ்க!

ஹஹஅஹா நண்பரே... நான் ஏதோ எனக்கு வந்த frwd msg பத்திதான் சொன்னேன்..உங்கள் ஊக்கத்தால் வளர்கின்றேன்... தொடர்ந்து வாருங்கள் என் வார்த்தைகள் வளம் பெறும்... வருக்கைக்கும் வாழ்த்துக்கும் நன்றி...

ரேவா சொன்னது…

MANO நாஞ்சில் மனோ said...

நல்ல முயற்ச்சி................பயனுள்ள பதிவும் கூட.......................வாழ்த்துக்கள்....

நன்றி மனோ முதல் வருக்கைக்கும் வாழ்த்துக்கும்... தொடர்ந்து வாருங்கள்... என் வார்த்தைகள் வளம் பெற.

ரேவா சொன்னது…

கவிநவன் said...

வரதட்சிணை கொடுமை, வரதட்சிணை ஒழிப்பு பற்றி எவ்வளவோ கதைகள் பதிவுகள் கவிதைகள் படித்திருக்கிறோம். ஆனால் உங்கள் பகிர்வு எனை ஒரு கணம் திகைக்க செய்து விட்டது.
எனக்கும் கல்யாண வயதில் பையன் இருக்கிறான்.
என் மகனை விலைக்கு விற்க மாட்டேன். என் மருமகள் உணர்வில் மகளாய் வாய்க்கட்டும்.

முதலில் உங்கள் வருகைக்கும் உங்கள் வயதிற்கும் என் சிரம் பணிந்த வணக்கங்கள்... என் எழுத்தில் முதல் வெற்றியாய் நான் இதை கருதுகின்றேன்...உங்களுக்கு வரும் மருமகள் மகளாகவே அமைய அன்பெனும் ஆண்டவன் துணைகொண்டு வேண்டும் ஒரு மகள்... வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி....

அவனி அரவிந்தன் சொன்னது…

புதிய முயற்சி வரவேற்கத்தக்கது. வரதட்சனை பற்றி பலரும் பலவிதங்களில் பல காலமாக எழுதியிருப்பினும், இன்னமும் இதைப்பற்றி எழுத வேண்டிய தேவை இருப்பது பெருத்த அவமானமே !

ரேவா சொன்னது…

அவனி அரவிந்தன் said...

புதிய முயற்சி வரவேற்கத்தக்கது. வரதட்சனை பற்றி பலரும் பலவிதங்களில் பல காலமாக எழுதியிருப்பினும், இன்னமும் இதைப்பற்றி எழுத வேண்டிய தேவை இருப்பது பெருத்த அவமானமே !

உண்மைதான் அவனி அரவிந்தன்....வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

எவனோ ஒருவன் சொன்னது…

நகைச்சுவை நடையில் இருந்தாலும் சொல்ல வந்ததை சரியாகச் சொல்லி விட்டீர்கள் தோழி. தொடர்ந்து இந்த மாதிரியான கருத்துமிக்க பதிவுகளையும் எழுதுங்கள் உங்கள் காதல் கவிதைகளுடன்.

என் தனிப்பட்ட கருத்து :
வரதட்சணை வாங்கத் தூண்டுபவர்கள் பெற்றோர்களே. அவர்கள் நாம் எழுதும் பதிவுகளைப் படிப்பார்களா என்று எனக்கு தெரியவில்லை. நம்மைப் போன்ற இளைஞர்கள் யாரும் வரதட்சணை, சாதி மத வேறுபாடு, ஏழை பணக்காரன் போன்றவற்றை ஆதரிப்பதில்லை. குமுதம், ஆனந்த விகடன், வாரமலரில் வரும் 'இது உங்கள் இடம்' போன்றவற்றிற்கு இம்மாதிரியான கருத்துக்களை அனுப்பினால் நிறைய மக்களைச் சென்றடையும் வாய்ப்பு உள்ளது. இது என் சொந்தக் கருத்து. ஏதேனும் தவறாகக் கூறி இருப்பின் மன்னிக்கவும்.

Athisaya சொன்னது…

மனித உணர்வுகளும் சில காதலும் கூட வியாபாரமாகிப் போனது தான் காரணம்.பல இளையோருள் ஏகாந்த சிந்தனை முளை விடக்காரணம் இது போன்றதான சில அடிப்படை அற்ற கட்டாயங்கள் தர்.அருமையான பதிவு சொந்தமே..!வாழ்த்துக்கள்.சந்திப்போம்.