உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

புதன், 5 ஜனவரி, 2011

நினைவிருக்கா????


*முதன் முதலாய் என்னைப்பார்த்தபின் 
 என் அலைபேசி, எண்கள் கேட்டு
நீ என் தோழியை நச்சரித பொழுதுகள்
உனக்கு நினைவிருக்கிறதா??

* வாங்கிய எண்ணில்
உன் எண்ணங்களை வகைப்படுத்தி
நீ அனுப்பிய குறும்செய்திகள்
நினைவிருக்கிறதா....

* குட்டி போட்ட பூனை போல
என்னை சுற்றி சுற்றி
வந்து நீ ஆர்ப்பரித்த அந்த ஆனந்த
தருணங்கள் நினைவிருக்கா?

* உன் காதலை வழிமொழிந்து
என் காதலை நானும் சொல்ல
வானுக்கும் பூமிக்கும் நீ குதிக்க, 
நீ செய்த  சேஷ்டையை  வேடிக்கை பார்த்த
அந்த பஸ் நிறுத்த போலீஸ்
அதிகாரி உன்னை கண்டித்தது
நினைவிருக்கா?

* உதடு கடித்து சிரிக்கும், உன் சிரிப்பு 
அழகு என்ற உரைத்தபோது,
இரட்டைபொருள்தரும் ஒற்றை கவிதை
சொல்லி சிரித்தாயே... அந்த
இதம் தரும் நாட்கள் நினைவிருக்கிறதா???

* என் முதல் ஊதியத்தை
ஆர்வமாய் உன்னிடம் கொடுக்க....
காலரை தூக்கி விட்டு... அன்பு ஆணாதிக்கம்
புரிந்த அந்த அந்திநேரம் நினைவிருக்கா?

* கோபத்தில் நான் பொறிந்து
தள்ள, அமைதியாய் கேட்டுவிட்டு,
பின் என் அமைதிகுலைத்து
நீ பேசாமல் என்னை தவிக்க விட்ட
நாட்கள் நினைவிருக்கா????


* நான்  அனுப்பிய குறுச்செய்தியை
இன்றும் அழிக்காமல்...
என் சுவாசம் இது
என்று  காத்து என் காது கடித்த
காலம் நினைவிருக்கா?

* நம் காதலை நம் பெற்றோர்
அறிய, உன் வாழ்கை நான் என்று
அவர்கள் முன் என் கைப்பற்றி
நடந்தது  நினைவிருக்கா?

* ஊரார் முன்னிலையில்
என்  கரம் நீ  பற்றிய அந்த
இதம் தரும் இனிய நாட்கள் நினைவிருக்கா??

காதலே!!!
இந்த காதலில்,
எங்கே பரவசப்பட்டோம்,
எங்கே பயணித்தோம்  என்று
தெரியாமல் வெகு தூரம் சென்று விட்டோம்...
இந்த இனிய நாட்கள் நயமாய் நகர்ந்தாலும்....

இன்று!!!!நீ என்னை
பார்ப்பதும் அறிதாகி...
உன்கை பற்றி உலவுதலும் அறிதாகி...
உரையாடலும் குருஞ்ச்செய்தியாய் சுருங்கிப்போக..
பொருள் தேடி வாழ்வின் உயர்வு தேடி  நீ
பறந்து கொண்டே இருக்கிறாய்  ..
இன்பச்சுமைதாங்கும், சுமைதாங்கியாய்
நீ சுழன்று கொண்டே இருக்கிறாய்..

ஆனாலும் என் காதல் கணவனே!!!!
சொல்லிவை,
உன் செல்லத் தோழியிடம்,
என்னை விட அதிகநேரம்
அவளிடம் தான் இதழ் பொருத்தி
உறவாடுகிறாயாம்..
என்னை பார்த்து ஏளனமாய்
கணிசிமிட்டி என் காது கடிக்கிறாள்
 உன் கைபேசி...

என்னை விட உன் அன்பு தோழன்தான்
உன்னை அதிகம் சுமக்கிரானாம்,,
உன் இருசக்கரவாகனம்,
என்னை இருமாப்புடன் பார்த்து சிரிக்கிறது..

என்னை உன் இதயத்தில் வைத்ததை விட
உன் கண்களை இணையத்தில் தான் அதிக நேரம்
வைக்கிறயாம்... உன் கையோடு இருக்கும்
உன் லேப்டாப் சொல்கிறது...

உயிரற்ற பொருளோடு
உறவாடும் என் உயிரானவனே!!!!
உன் உறவான என்னோடு
உறவடாது எனை ஏங்கவைத்தல்
நியாயமா என் காதலே!!!!

என் காதலே!!!!இந்த காதலில்,
இன்று!!!!
பார்ப்பதும் அறிதாகி...
உன்கை பற்றி உலவுதலும் அறிதாகி...
உரையாடலும் குருஞ்ச்செய்தியாய் சுருங்கிப்போக..
பொருள் தேடி வாழ்வின் உயர்வு தேடி  நீ
பறந்து கொண்டே இருக்கிறாய்  ..
இன்பச்சுமைதாங்கும், சுமைதாங்கியாய்
நீ சுழன்று கொண்டே இருக்கிறாய்..
இதில் என்னை நினைவிருக்கா????


அன்புடன்
ரேவா

27 கருத்துகள்:

sakthistudycentre.blogspot.com சொன்னது…

ஓர் நல்ல படம் பார்க்கும் போதும், முடிக்கும் போதும், ஒரு அரைமணி நேரம் நம்மையே நாம் மறப்போமே...

அதே உணர்வு தான் இந்த கவிதை படித்து முடிக்கும் போது ஏற்பட்டது..

நன்றி, கவிதை அருமை..

http://www.sakthistudycentre.blogspot.com/

karthikkumar சொன்னது…

nice one :)

ரேவா சொன்னது…

sakthistudycentre.blogspot.com said...

ஓர் நல்ல படம் பார்க்கும் போதும், முடிக்கும் போதும், ஒரு அரைமணி நேரம் நம்மையே நாம் மறப்போமே...

அதே உணர்வு தான் இந்த கவிதை படித்து முடிக்கும் போது ஏற்பட்டது..

நன்றி, கவிதை அருமை..

http://www.sakthistudycentre.blogspot.com/

தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி கே.அருண்குமார்..sakthistudycentre...

ரேவா சொன்னது…

karthikkumar said...

nice one :)

நன்றி கார்த்திக்

logu.. சொன்னது…

attagasam...

guna சொன்னது…

good , excellent post

guna சொன்னது…

good , excellent post

jayaram சொன்னது…

உனக்குள் இருக்கும் வெறுமையின்
வெப்பம் தெரிகிறது !!!

ரேவா சொன்னது…

logu.. said...

attagasam..


நன்றி லோகு... உங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும்...

ரேவா சொன்னது…

guna said...

good , excellent post

நன்றி குணா

ரேவா சொன்னது…

jayaram said...

உனக்குள் இருக்கும் வெறுமையின்
வெப்பம் தெரிகிறது !!!...

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஜெயராம் ,,,,,

முல்லை அமுதன் சொன்னது…

nalla kavithai.
vaazhthukkal.
mullaiamuthan.
http://kaatruveli-ithazh.blogspot.com/

ரேவா சொன்னது…

முல்லை அமுதன் said...

nalla kavithai.
vaazhthukkal.
mullaiamuthan.
http://kaatruveli-ithazh.blogspot.com/

தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி முல்லை அமுதன்....

ஜெ.ஜெ சொன்னது…

கவிதை அருமை ரேவா..

ரேவா சொன்னது…

ஜெ.ஜெ said...

கவிதை அருமை ரேவா..

தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி ஜெ.ஜெ

பால் [Paul] சொன்னது…

கவிதை ரொம்ப நல்லா இருக்கு.. ஒவ்வொரு பத்தியையும் மிகவும் ரசித்து படித்தேன்.. காதல் நாட்களையும் உங்களது இந்நாளின் உணர்வுகளையும் மிகவும் உணர்வுபூர்வமாகவும் அழகாகவும் சொல்லியிருக்கிறீர்கள்..!! :) 'நினைவிருக்கா..?' நிச்சயமாக நினைவில் இருக்கும்..!!

ரேவா சொன்னது…

பால் [Paul] said...

கவிதை ரொம்ப நல்லா இருக்கு.. ஒவ்வொரு பத்தியையும் மிகவும் ரசித்து படித்தேன்.. காதல் நாட்களையும் உங்களது இந்நாளின் உணர்வுகளையும் மிகவும் உணர்வுபூர்வமாகவும் அழகாகவும் சொல்லியிருக்கிறீர்கள்..!! :) 'நினைவிருக்கா..?' நிச்சயமாக நினைவில் இருக்கும்..!!

நன்றி நண்பா.............

ananth சொன்னது…

உயிரற்ற பொருளோடு
உறவாடும் என் உயிரானவனே!!!!
உன் உறவான என்னோடு
உறவடாது எனை ஏங்கவைத்தல்
நியாயமா என் காதலே!!!!


அழகான உணர்வுக்கவிதை வாழ்த்துக்கள் தோழி ரேவதி..

ரேவா சொன்னது…

ananth said...

உயிரற்ற பொருளோடு
உறவாடும் என் உயிரானவனே!!!!
உன் உறவான என்னோடு
உறவடாது எனை ஏங்கவைத்தல்
நியாயமா என் காதலே!!!!


அழகான உணர்வுக்கவிதை வாழ்த்துக்கள் தோழி ரேவதி..
தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பா.............

சி. கருணாகரசு சொன்னது…

கவிதை கதை சொல்கிறது.... மிக யதார்த்த சூழலை கவிதையாய் வடித்திருக்கின்றீர்கள்.... பாராட்டுக்கள்.

ரேவா சொன்னது…

said...

கவிதை கதை சொல்கிறது.... மிக யதார்த்த சூழலை கவிதையாய் வடித்திருக்கின்றீர்கள்.... பாராட்டுக்கள்.\


உங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும்...நன்றி சி. கருணாகரசு அவர்களே......

svramani08 சொன்னது…

நல்ல கவிதைகளைப் படித்த திருப்தி'வாழ்த்துக்கள்
தொடர்ந்து சந்திப்போமா

ரேவா சொன்னது…

svramani08 said...

நல்ல கவிதைகளைப் படித்த திருப்தி'வாழ்த்துக்கள்
தொடர்ந்து சந்திப்போமா


தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி.svramani08.மீண்டும் சந்திப்போம் ..

எவனோ ஒருவன் சொன்னது…

ஒரு அழகிய காதல் கதை படிக்கும் உணர்வு ஏற்பட்டது தங்கள் கவிதையை வாசிக்கும் பொழுது. மிகவும் ரசித்தேன் தோழி :-)

siva சொன்னது…

அமைதியாய் கேட்டுவிட்டு,
பின் என் அமைதிகுலைத்து
நீ பேசாமல் என்னை தவிக்க விட்ட
நாட்கள் நினைவிருக்கா????...

really nice..Dont knew what to say..

feel to love it.

the critics சொன்னது…

காதலில் துடங்கி ..... திருமணம் வரை என்றும் உன்னை பார்க்கும் காதலன் முதல் .............. பார்க்க நேரம் ஒதுக்கும் கணவன் வரை...அழலகான வடிவமைப்பு ..... ரசித்தேன் அந்த பெண்ணின் காதல் தேடலை ....புரியட்டும் அந்த அசட்டு கணவனுக்கு

suji சொன்னது…

Hi I was searching for nice poem and came across yours... Touching... I was silent for a while when I came to the last part... It was like a movie....